ஃபோர்ப்ஸ் கடந்த ஜூன் மாதம் அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் 5 இந்திய வம்சாவளி பெண்கள் இடம்பெற்றுள்ளது தான் ஆச்சரியமே.
அமெரிக்காவின் பணக்கார பெண்கள் பட்டியலில் ஐந்து இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளது, இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.
யார் இந்த பெண்கள்?
அரிஸ்டா நெட்வொர்க்கின் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெய ஸ்ரீ வி உல்லால் 15வது இடத்தினை பிடித்துள்ளார்.
சின்டெல்லின் இணை நிறுவனரான நீரஜா சேத்தி 24வது இடத்தை பிடித்துள்ளார்.
நேஹா நர்கடே, கன்ஃப்ளூயண்ட்டின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் CTO, 57வது இடம் பிடித்துள்ளார்.
இந்திரா நூயி, பெப்சிகோவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி - இவர் 85வது இடத்தில் உள்ளார்.
ரேஷ்மா ஷெட்டி, ஜிகோ பயோவொர்க்ஸின் இணை நிறுவனர் 97வது இடத்திலும் இடம் பெற்றுள்ளார்.
ஜெய் ஸ்ரீ
போர்ப்ஸின் கூற்றுப்படி, ஜெய் ஸ்ரீ வி உல்லால் 15வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பணக்கார பெண்களில் ஒருவராக உள்ளார்.
அவரது தற்போதைய நிகர மதிப்பு சுமார் 1.9 பில்லியன் டாலராகும். ஜெயா ஸ்ரீ வி 2018ம் ஆண்டு முதல் அரிஸ்டா நெட்வொர்களுக்கு தலைமை தாங்குகிறார். அரிஸ்டாவின் 5% பங்குகள் வைத்திருக்கிறார்.
நீரஜா சேத்தி
சின்டெல்லின் இணை நிறுவனரான நீரஜா சேத்தி 24வது இடத்தை பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலராகும். நீரஜா சேத்தி ஐடி நிறுவனமான சின்டெல்லின் இணை நிறுவனராகும். நீரஜா சேத்தி தனது கணவர் பாரத் தேசாய் உடன் இணைந்து 1980ம் ஆண்டு மிச்சிகனில் உள்ள டிராய் குடியிருப்பில் சின்டெல் நிறுவனத்தை நிறுவினார். மேலும் ஆரம்ப முதலீட்டில் வெற்றும் 2000 டாலர் என்று கூறபபௌட்கிறது. சேத்தி கணிதத்தில் இளங்கலை பட்டமும், கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
நேஹா நர்கடே
57வது இடத்தினை பிடித்துள்ள நேஹா நர்கடே, கன்ஃப்ளூயண்ட்டின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் CTO, 57வது இடம் பிடித்துள்ளார்.இவரின் சொத்து மதிப்பு 490 மில்லியன் டாலராகும். இவர் புனேவில் வளர்ந்த போது, ஜார்ஜியா டெக்கில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து, லிங்க்டினில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிந்தவர்.
இந்திரா நூயி
பெப்சிகோவின் முன்னாள் தலைவரான இந்திரா நூயி 85வது இடத்தில் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 320 மில்லியன் டாலராகும். நூயிக்கு வழங்கப்பட்ட பங்கினை தொடர்ந்து இந்த பங்கு விகிதம் அதிகரித்துள்ளது.
ரேஷ்மா ஷெட்டி
97வது இடத்தில் உள்ள ரேஷ்மா ஷெட்டியின் சொத்து மதிப்பு 220 மில்லியன் டாலராகும். ஷெட்டி ஜிங்கோ பயோவொர்க்ஸின் இணை நிறுவனர் ஆவார். இது 2009ல் அவரது கணவர் பேரி கேண்டன் உட்பட 4 பேருடன் உருவாக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications