கேரளா: உலகளவில் மருத்துவத்துறையில் தொழில் தொடங்கிய அனைவருமே எட்டாத உயரத்தை அடைந்துள்ளனர். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த ஒரு மருத்துவர் தன்னுடைய விடாமுயற்சியால் 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு மருத்துவ சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார்.
கேரள மாநிலத்தில் கோழிக்கோடு பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் தான் ஆசாத் மூப்பென். இவருக்கு சிறுவயது முதலே சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் விருப்பம். எனவே மருத்துவ படிப்பை தேர்வு செய்தார். எம்பிபிஎஸ் படிப்பை முடித்து சேவையாற்ற தொடங்கினார்.

1987 ஆம் ஆண்டு கேரளாவில் இருக்கும் தன்னுடைய சொந்த கிராமத்தில் மசூதி கட்டுவதற்காக நிதி திரட்டும் பொருட்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் பயணம் செய்தார். அப்போது அங்கே வசிக்கக்கூடிய இந்தியர்களுக்கு சுகாதார வசதிகள் தேவைப்பட்டதை அவர் உணர்ந்தார்.
எனவே தன்னுடைய நண்பர்களின் உதவியோடு ரஷீத் துறைமுகத்திற்கு அருகே சிறிய கிளினிக்கை தொடங்கினார் அதாவது வெளிநாட்டில் இருந்து வந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை செய்பவர்கள் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகளை இந்த கிளினீக்கில் பெற்றனர்.
எனவே பூர் துபாய் பகுதியில் அவர் மருத்துவமனை மட்டுமல்லாது பரிசோதனை நிலையங்கள், மற்றும் மருந்து விற்பனை நிலையங்களையும் தொடங்கினார். இந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் இவரது மருத்துவ சேவை வேகமாக வளர்ச்சி அடைந்தது.
பின்னர் 2001 ஆம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஒரு மருத்துவமனையை நிறுவி அங்கே பிரத்தியேகமாக புற்றுநோய் சிகிச்சைகளை வழங்க தொடங்கினார். இந்த நிறுவனம் தனியார் முதலீட்டாளர்களிடமிருந்து 710 கோடி ரூபாய் பணத்தை முதலீடாக ஈர்த்தது. ஓமனில் 2019 இல் பெரிய மருத்துவமனையை இவர் நிறுவினார்.
அப்போது தான் இந்த நிறுவனம் ஆஸ்டர் ஹெல்த்கேர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2017 ஆம் ஆண்டில் ஆஸ்டர் ஹெல்த்கேர் நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடா நாடுகளில் 10 மருத்துவமனைகள், கிளினீக்குகள், 26 மருந்தகங்களை கொண்டிருந்தது. இந்தியாவிலும் ஏழு இடங்களில் இந்த நிறுவனம் மருத்துவமனைகளை நிறுவியிருந்தது.
2018 ஆம் ஆண்டு இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. தற்போது ஆஸ்டர் ஹெல்த்கேர் நிறுவனத்திற்கு சொந்தமாக 30 மிகப்பெரிய மருத்துவமனைகள், 120 சிறு மருத்துவமனைகள், சுமார் 400 மருந்தகங்கள் செயல்படுகின்றன. 7 நாடுகளில் இவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஆண்டு வருமானம் 3699 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனம் இதய அறுவை சிகிச்சை தேவைப்படும் குழந்தைகளுக்கு இலவசமாக சிகிச்சை வழங்கி வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications