தமிழகத்தின் தற்போதைய ட்ரெண்ட் தவெக தலைவர் விஜய் தான். சினிமாவில் மாஸ் காட்டிய அவர் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்னும் தன்னுடைய கட்சியின் மூலமாக அரசியலிலும் பெரும் செல்வாக்கைப் பெற்றுள்ளார். 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட விஜய்க்கு மகத்தான ஆதரவை தமிழ்நாடு மக்கள் வழங்கினர். தமிழ்நாட்டில் விஜய்-க்கு என்று தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உள்ளது. இந்நிலையில் தங்களுக்குப் பிடித்த ஹீரோவை CM-ஆக பார்க்க பொதுமக்களுக்கும் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அவருடைய ரசிகர்களாக இருக்கும் பலர் விஜயின் கல்விப் பின்னணி என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருப்பீர்கள். இந்த பதிவில் அது குறித்த விவரங்களைப் பார்ப்போம்.

ஆரம்பக் கால கல்வி: விஜய் ஆரம்பக் கட்டத்தில் கோடம்பாக்கத்தில் உள்ள ஃபாத்திமா பள்ளியில் பயின்றார். பின்னர் விருகம்பாக்கத்தில் இருக்கும் பாலலோக் பள்ளியில் பயிலத் தொடங்கினார். ஆரம்பத்தில் ஒரு சாதாரண சென்னைப் பையனைப் போல தான் தனது பள்ளி படிப்பை பயின்று வந்தார். அந்தச் சமயத்தில் விஜய் ஒரு சிறந்த திரை நட்சத்திரமாகவும், அரசியல் பிரபலமாகவும் மாறுவார் என்பதை யாருமே கணித்திருக்க மாட்டார்கள்.
கல்லூரி படிப்பு: பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு விஷுவல் கம்யூனிகேஷன் துறையில் பட்டம் பெற விஜய் நினைத்தார். அதற்காக லயோலா கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவருடைய கல்லூரி பயணம் அவருக்கு முழுமையாக இருக்கவில்லை. சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற தீராத ஆசையின் காரணமாக பாதியிலேயே கல்லூரி படிப்பை விட்டு வெளியேறினார்.
பட்டமா? பேஷனா? என்ற கேள்வி வரும் போது தனது பேஷனை தேர்ந்தெடுத்தார் விஜய். தற்போது சினிமா துறையில் ஒரு நட்சத்திரமாக மாறி இருந்தாலும் அப்போது அவருக்கு இருந்தது என்னவோ வெறும் தன்னம்பிக்கை மட்டும் தான்.
கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்ட பிறகு விஜய் முழுமையாக சினிமா துறையை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கினார். விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் ஒருவரை சிகரத்தில் ஏற்றும் என்பதற்கு விஜய் தான் சான்று. அவர் பல விமர்சனங்களையும் சந்தித்தார். விஜய்யின் முதல் படத்தை பார்த்துவிட்டு பலர் கேலியும் கிண்டலும் செய்யத் தொடங்கினர். ஆனால் அதையெல்லாம் கண்டு மனம் தளரவில்லை. அதிலிருந்து தொடர்ந்து செல்ப் குரூமிங் செய்ய தொடங்கினார். தன்னுடைய நடிப்பாற்றலை அதிகரித்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
பின்னர் தடைகள் அனைத்தையும் முறியடித்து இன்று சினிமா துறை மட்டுமின்றி ஒரு பெரும் அரசியல் தலைவராகவும் உருவெடுத்துள்ளார். இவருடைய கல்வி பயணத்தில் நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய விஷயம் என்ன தெரியுமா? வெறும் மதிப்பெண்களோ அல்லது பட்டங்களோ ஒருவரின் வெற்றியை தீர்மானிப்பதில்லை என்பதுதான்.
2026 ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றது விஜயின் தமிழக வெற்றிக் கழகம். முதல் முறையாக போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவ்வளவு பெரிய சாதனையை எட்டியது தான் ஹைலைட்.
கல்வி தொடர்பான வாக்குறுதிகள்: தான் ஒரு காலேஜ் டிராப் அவுட் மாணவராக இருந்தாலும், கல்வியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தவர் விஜய். இதனால் தான் தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் கல்விக்கு பல முக்கியமான விஷயங்களை வழங்கவிருப்பதாக தெரிவித்தார். விஜய் தேர்தலுக்கு முன்பு பல தொகுதிகளுக்கு சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கிராமப்புற குடும்பங்களை மட்டுமே இலக்காக கொண்டு ஒரு முக்கியமான வாக்குறுதியை அளித்தார்.
அது என்னவென்றால் தான் ஆட்சிக்கு வந்து விட்டால் இரண்டு ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயக் குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் உயர்கல்வி செலவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம். அதை அரசாங்கமே முழுமையாக ஏற்கும் என்று கூறினார். இந்த வாக்குறுதி அரசு வேலையில் இல்லாத மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய விவசாய குடும்பங்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதனால் தான் ஒருவர் எதை செய்ய விரும்புகிறாரோ? அதை கண்டறிந்து அந்த பாதையில் சென்றால் வெற்றி அடையலாம் என்று கூறுகிறார்கள் போல. இதற்கு விஜய் தான் தற்போதைய சான்று.


Click it and Unblock the Notifications