சென்னை: அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன . எல்பிஜி சிலிண்டர் விலையில் தொடங்கி தேசிய ஓய்வூதிய திட்டம், ரயில்வே டிக்கெட் முன்பதிவு என பல்வேறு மாற்றங்களை நாம் எதிர் கொள்ள இருக்கிறோம் . அவை என்னென்ன என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.
சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி அன்று சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடிய நிறுவனங்கள் சிலிண்டர் விலையில் மாற்றத்தை கொண்டு வரும். சில சமயங்களில் விலை உயரும், சில சமயங்களில் விலை குறையும். எனவே மாதத்தின் முதல் நாள் என்றாலே சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்கும் என்பதை புரிந்து கொண்டு மக்கள் தயாராக இருப்பது நல்லது. கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது . எனவே இந்த முறை சிலிண்டர் விலை ஏறலாம் அல்லது குறையலாம். இந்த இரண்டுமே சாமானிய மக்களின் வீட்டு பட்ஜெட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் .

ரயில் டிக்கெட் முன்பதிவு: ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் மோசடிகளை தடுப்பதற்காக அக்டோபர் 1ஆம் தேதியில் இருந்து இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் முன்பதிவில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இதன்படி ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி வாயிலாக பொது டிக்கெட் முன்பதிவுகளுக்கும் ஆதார் வெரிஃபிகேஷன் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் வெரிஃபிகேஷன் செய்யப்பட்ட ஐஆர்சிடடிசி பயனர்களால் மட்டுமே டிக்கெட் முன் பதிவு செய்ய முடியும் .
நேரடி முன்பதிவு மையங்களுக்கு செல்பவர்களுக்கு இது கட்டாயம் கிடையாது. இதற்கு முன்பு தட்கல் டிக்கெட்டுகளுக்கு மட்டும் இருந்த இந்த நடைமுறை தற்போது அனைத்து டிக்கெட் முன்பதிவுகளுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து உங்களுக்கு ரயில் டிக்கெட் முன்பதிவில் முன்னுரிமை வேண்டுமென்றால் உங்களுடைய ஐஆர்சிடிசி கணக்கோடு ஆதார் இணைத்து சரிபார்த்துக் கொள்வது நல்லது.
தேசிய ஓய்வூதிய திட்டம்: தேசிய ஓய்வூதிய திட்டத்தில் அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து Multiple scheme framework நடைமுறைக்கு வருகிறது . தனியார் ஊழியர்கள் , கார்ப்பரேட் ஊழியர்கள் , கிக் பணியாளர்கள் தங்களுடைய பான் நம்பரை கொண்டு பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்ய முடியும் . இது அவர்களின் ஓய்வு காலத்தை சிறந்ததாக மாற்றும்.
வட்டி விகிதம்: இந்த மாதம் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 25 அடிப்படை புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை குறைப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் வங்கிகள் நமக்கு வழங்கக்கூடிய பல்வேறு கடன்களுக்கான வட்டியும் குறையும் .
More From GoodReturns

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!



Click it and Unblock the Notifications