எல்பிஜி சிலிண்டர் முதல் வங்கி கார்டுகளை பயன்படுத்துவது வரை என செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பல்வேறு முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர இருக்கின்றன. இவை சாமானிய மக்களின் பட்ஜெட்டை பதம் பார்க்கும் வகையில் அமைந்திருக்கின்றன.
எல்பிஜி சிலிண்டர் விலை: ஒவ்வொரு மாதமும் முதல் நாளில் எண்ணெய் நிறுவனங்கள் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் வணிக ரீதியில் பயன்படுத்தும் சிலிண்டர்களின் விலையில் மாற்றத்தை கொண்டு வரும் . சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரம் உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த விலை மாற்றம் என்பது இருக்கும். சிலிண்டர் விலை உயரவும் செய்யலாம் அல்லது விலை குறையவும் வாய்ப்புள்ளது. சில சமயம் விலை மாற்றமில்லாமலும் போகலாம். எனவே செப்டம்பர் 1ஆம் தேதி சிலிண்டர் விலையில் மாற்றம் இருக்க வாய்ப்புள்ளது என்பதை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் .

வெள்ளிக்கு ஹால்மார்க்: இந்தியாவில் தங்கத்திற்கும் தங்க நகைகளுக்கும் எப்படி அரசு ஹால்மார்க் என்பதை கட்டாயம் ஆக்கி இருக்கிறதோ , அதேபோல வெள்ளிக்கும் ஹால்மார்க்கை கட்டாயமாக்க அரசு தயாராகி வருகிறது. இதன் மூலம் வெள்ளியின் தூய்மை தன்மை மற்றும் விலையை நிர்ணயம் செய்வதில் நாடு முழுவதுமே ஒரு நிலையான நடைமுறை கொண்டுவரப்பட்டு வெளிப்படை தன்மை இருக்கும் என அரசு கருதுகிறது. மக்கள் மேலும் நம்பகத்தன்மையோடு வெள்ளியை வாங்குவார்கள். இந்த ஹால்மார்க்கின் முறை வெள்ளியின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இந்த மாற்றம் நடைமுறைக்கு வருவதற்கு வாய்ப்புள்ளது. வெள்ளி வாங்க திட்டமிட்டு இருப்பவர்கள் இந்த மாற்றத்தை தெரிந்து கொண்டு அதன் பிறகு வாங்குவது நல்லது.
எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள்: இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதியிலிருந்து பல்வேறு மாற்றங்களை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது. இதன்படி ஆட்டோ டெபிட் முறை தோல்வி அடைந்தால் இரண்டு சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதுவே சர்வதேச பரிவர்த்தனைகள் என்றால் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது. அதேபோல எரிபொருள் வாங்குவது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது போன்றவற்றுக்கும் எஸ்பிஐ கார்டு பயன்படுத்துபவர்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுமாம். எனவே எஸ் பி ஐ கார்டு பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பதிவு தபால் விரைவு தபாலுடன் இணைப்பு: இந்திய தபால் துறை 100 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கி வந்த பதிவு தபால் சேவையை விரைவு தபால் சேவையுடன் இணைத்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.


Click it and Unblock the Notifications