விடாமுயற்சி இருந்தால் எந்த சூழலாக இருந்தாலும் அதனை கடந்து நாம் நினைத்த இலக்கை அடைந்து விட முடியும் என்பதற்கு சான்றாக நம்மை சுற்றியே பல்வேறு நபர்கள் முன் உதாரணமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை பொறுத்தவரை ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆக வேண்டும் என்பது பெரும்பாலான மிடில் கிளாஸ் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளின் கனவு. ஆனால் அனைவராலும் அந்த கனவை எட்டி விட முடிவதில்லை . ஏனெனில் ஒன்று இரண்டு தோல்விகளிலேயே பலரும் துவண்டு விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுவார்கள். ஒரு சிலர் மட்டும் தான் விடாமுயற்சியோடு செயல்பட்டு இந்த உயர்நிலையை அடைக்கின்றனர்.

அப்படி பால் விற்பனை செய்து வந்த ஒரு நபர் ஐபிஎஸ் அதிகாரியாக மாறிய கதையை தான் நாம் தற்போது தெரிந்து கொள்ள போகிறோம் . மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தை சேர்ந்தவர் தான் உமேஷ் கந்த்பஹாலே. வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். 2003ஆம் ஆண்டு இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய போது ஒட்டுமொத்த குடும்பமும் இவர் தான் குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என நம்பிக்கையுடன் இருந்தது.
ஆனால் எதிர்பாரா விதமாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்தார். இதில் ஆங்கில பாடத்தில் இவர் எடுத்த மதிப்பெண் 21 தான். இதனால் தொடர்ந்து படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டது . குடும்ப வறுமை காரணமாக தந்தையுடன் சேர்ந்து பால் விற்பனைக்கு சென்றார் . பால் விற்பனை , விவசாயம் என சிறு சிறு வேலைகளை கவனித்து வந்த இவர் நம்முடைய வாழ்க்கை இப்படியே நின்று விடக்கூடாது நான் படிப்பை தொடர வேண்டும் என தீர்மானித்தார்.

இதனை அடுத்து இரண்டு ஆண்டுகளில் மீண்டும் 12ஆம் வகுப்பு சேர்ந்து தீவிரமாக படித்தார் . கடுமையாக போராடி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அவர் பின்னர் பிஏ, எம் ஏ, பிஎட் படிப்புகளை முடித்தார். இதனை அடுத்து யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு படிக்க தயாரானார்.
மகாராஷ்டிராவில் இருந்து டெல்லிக்கு குடி பெயர்ந்த அவர் தீவிரமாக யுபிஎஸ்சி தேர்வுகளுக்காக படித்தார். முதல் இரண்டு முயற்சியிலும் இவருக்கு தோல்விதான் கிடைத்தது. ஆனால் மூன்றாவது முயற்சியில் வெற்றி பெற்றார். 2015 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற இவர் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்றார் . தற்போது மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்பி-ஆக பணியாற்றி வருகிறார்.
பல்வேறு கிராம பகுதிகளுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய மாணவர்கள் யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு படிக்க வேண்டும் , கல்வியை தொடர வேண்டும் என தொடர்ச்சியாக ஊக்குவித்து வருகிறார். தோல்வியை கண்டு பயந்து விடக்கூடாது அந்த தோல்வியை நாம் எப்படி எதிர்கொள்ள போகிறோம் என்பதில் தான் வாழ்க்கையின் வெற்றி அமைந்திருக்கிறது என இவர் தொடர்ச்சியாக கூறி வருகிறார்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications