இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உருவாகி இருக்கிறது. இதற்கு ஆரம்ப காலத்தில் இருந்து உழைத்தவர்களில் முக்கியமானவர் தான் ஆனந்த் ஜெயின். திருபாய் அம்பானியின் மூன்றாவது மகன் என்று அழைக்கும் அளவிற்கு திருபாய் அம்பானிக்கும் அவருடைய மகன்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானிக்கும் நெருக்கமானவராக இருந்தவர்.
ஆனந்த் ஜெயின் தற்போது ஜெயின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்திய தொழில் துறையில் ஆனந்த் ஜெயினை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் ரியல் எஸ்டேட் , நிதி சந்தை மற்றும் கேபிடல் சந்தையில் பெயர் போனவர் .

ஜெயின் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் ரியல் எஸ்டேட் , ஸ்டீல் உற்பத்தி, பிளாஸ்டிக் மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு திட்டப் பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. இவருடைய நிறுவனம் பல்வேறு சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் முதலீடு செய்துள்ளது.
2007 ஆம் ஆண்டில் ஃபோர்ப்ஸ் இந்தியா நிறுவனம் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் ஆனந்த் ஜெயினுக்கு 11-வது இடத்தை வழங்கியது. இவருடைய சொத்து மதிப்பு 525 மில்லியன் டாலர்கள் என சொல்லப்படுகிறது. இந்திய கார்ப்பரேட் உலகில் நிபுணத்துவம் பெற்ற இவர் அம்பானி குடும்பத்தினரோடு மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார்.
ஆனந்த் ஜெயினும் முகேஷ் அம்பானியும் பள்ளிக்காலம் முதலே நண்பர்கள். இருவரும் ஒரே வகுப்பில் ஒன்றாக படித்துள்ளனர். அப்போது இவர்களுடைய நட்பு தொடங்கியிருக்கிறது. முகேஷ் அம்பானி அமெரிக்காவில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு நாடு திரும்பிய போது ஆனந்த் ஜெயினை அழைத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்தின் வளர்ச்சிக்கு தன்னுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டாராம். இதனை அடுத்து ஆனந்த் ஜெயின் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் பணிக்கு சேர்ந்தார்.
1980களில் ரிலையன்ஸ் குழுமம் இந்தியாவின் தொழில் சாம்ராஜ்யமாக வளர்ச்சி அடைவதற்கு அடித்தளமிட்ட காலம். அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஆனந்த் ஜெயினும் ஒருவர். இவருடைய திறன்களால் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி மிகவும் ஈர்க்கப்பட்டார். இதனால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் குழுமத்தில் முக்கியமான நபராக உருவெடுத்தார் ஆனந்த் ஜெயின்.
கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் இவர் ரிலையன்ஸ் குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களில் முக்கிய பொறுப்புகளில் இருந்திருக்கிறார். குறிப்பாக ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனத்தின் துணைத் தலைவர் பொறுப்பையும் இவர் வகித்திருக்கிறார். ரிலையன்ஸ் குழுமத்தின் கீழ் செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு தலைமை பொறுப்பை ஏற்றவர் இவர். அதனால் தான் இவரை திருபாய் அம்பானியின் மூன்றாவது மகன் என தொழில் துறையினர் அழைத்தனர்.
2005 ஆம் ஆண்டில் அனில் அம்பானி உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஆனந்த் ஜெயின் ரிலையன்ஸ் குழுமத்திலிருந்து வெளியேறினார். இருந்தாலும் முகேஷ் அம்பானியுடன் இவர் தொடர்பில் தான் இருக்கிறார். அவருக்கு அவ்வப்போது தொழில் ஆலோசனைகளையும் வழங்குகிறார்.
ஆனந்த் ஜெயினின் மகன் ஹர்ஷ் ஜெயின் தான் ட்ரீம் 11 செயலியின் உரிமையாளர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆவார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications