இந்தியாவில் உள்ள 10 பணக்கார நகரங்கள்... சென்னைக்கு எந்த இடம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கோவிட் -19 காரணமாக கடந்த ஆண்டு பெரும் நிதி இழப்பை சந்தித்த பிறகு, இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள நாடுகளின் நிலைமை இப்போது மேம்பட்டதாக தெரிகிறது.

 

சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த ஆண்டுக்குள் உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை இந்தியா பெறும் என்று கணித்துள்ளது.

ஐஎம்எப் மதிப்பீட்டின்படி, இந்தியாவில் இந்த வளர்ச்சி விகிதம் 8.5 சதவீதத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

12 வயதில் 3 ஆப்... கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு! 12 வயதில் 3 ஆப்... கின்னஸ் சாதனை செய்த சிறுவன்.. கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்க வாய்ப்பு!

இந்தியாவின் 10 பணக்கார நகரங்கள்

இந்தியாவின் 10 பணக்கார நகரங்கள்

பொருளாதாரத்தில் உலகின் வேகமாக வளரும் நாட்களில் ஒன்றாக இந்தியா மாறி, தற்போது குறிப்பிடத்தக்க நிலையில் உள்ளது. இந்தியாவின் வரலாறு, புவியியல், அரசியல் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் இந்த நகரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அடிப்படையில் இந்தியாவின் முதல் 10 பணக்கார நகரங்களின் பட்டியல் இங்கே:

1. மும்பை- GDP: $310 பில்லியன்

1. மும்பை- GDP: $310 பில்லியன்

இந்தியா மற்றும் உலகின் பணக்கார நகரங்களில் மும்பை முன்னணியில் உள்ளது. இந்தியாவின் நிதி தலைநகரான மும்பை, $310 பில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

2. புது டெல்லி- ஜிடிபி $293.6 பில்லியன்
 

2. புது டெல்லி- ஜிடிபி $293.6 பில்லியன்

நாட்டின் தலைநகரான டெல்லி செழுமையான வரலாறு, கலாச்சாரம், அரசியல் மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நகரமாக உள்ளது. இந்த பட்டியலில் 293.6 பில்லியன் டாலர் ஜிடிபியுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

3. கொல்கத்தா- GDP $150.1 பில்லியன்

3. கொல்கத்தா- GDP $150.1 பில்லியன்

கொல்கத்தா வடகிழக்கு பிராந்தியத்தின் நிதி, வணிக மற்றும் தொழில்துறை மையமாகும். கொல்கத்தாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி $150.1 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

4. பெங்களூரு- GDP $110 பில்லியன்

4. பெங்களூரு- GDP $110 பில்லியன்

இந்தியாவின் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் கர்நாடகாவின் தலைநகரமான பெங்களூரு, பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட், பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பாரத் எர்த் மூவர்ஸ் போன்ற பல வணிக நிறுவனங்களை கொண்டுள்ளது. $110 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ள இந்த நகரம் இந்தியாவின் நான்காவது பணக்கார நகரமாகும்.

5. சென்னை- ஜிடிபி $78.6 பில்லியன்

5. சென்னை- ஜிடிபி $78.6 பில்லியன்

$78.6 பில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், இந்த நகரம் இந்தியாவின் ஐந்தாவது பணக்கார நகரமாகும். சென்னையின் பொருளாதாரத்திற்கு ஆட்டோமொபைல் துறையின் பங்களிப்பு அதிகம். நகரத்தின் பொருளாதாரம் ஐடி மற்றும் பிபிஓ துறைகள், ஆட்டோமொபைல்கள், மருத்துவம், சுற்றுலா மற்றும் உபகரணங்கள் உற்பத்தி ஆகிய துறைகளின் மூலம் கிடைக்கின்றது.

6. ஹைதராபாத்- ஜிடிபி $75.2 பில்லியன்

6. ஹைதராபாத்- ஜிடிபி $75.2 பில்லியன்

75.2 பில்லியன் டாலர் ஜிடிபியுடன், தி சிட்டி ஆஃப் பேர்ல்ஸ் என்று கூறப்படும் ஹைதராபாத் நாட்டிலேயே ஆறாவது இடத்தில் உள்ளது. இந்நகரம் அதன் வரலாறு, உணவு மற்றும் பல மொழி கலாச்சாரத்திற்கு பெயர் பெற்றது.

 7. புனே- ஜிடிபி $69 பில்லியன்

7. புனே- ஜிடிபி $69 பில்லியன்

இந்த நகரம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், கார் மற்றும் வாகன உற்பத்தி, பிபிஓ வர்த்தகம் மற்றும் கார் அசெம்பிளிங் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றது. புனேவில் உள்ள Tata Motors, Renault, Volkswagen மற்றும் Mercedes Benz போன்ற நிறுவனங்கள் நகரின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. $69 பில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன், புனே இந்தியாவின் ஏழாவது பணக்கார நகரமாகும்.

8. அகமதாபாத்- ஜிடிபி $68 பில்லியன்

8. அகமதாபாத்- ஜிடிபி $68 பில்லியன்

இந்தியாவின் பணக்கார நகரங்களில் ஒன்றும், கிழக்கு மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் அகமதாபாத். $68 பில்லியனாக மதிப்பிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் எட்டாவது இடத்தில் உள்ளது.

9. சூரத்- GDP $59.8 பில்லியன்

9. சூரத்- GDP $59.8 பில்லியன்

சூரியனின் நகரம் என்று அழைக்கப்படும் சூரத், பழமை வாய்ந்த அதே நேரத்தில் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஒரு நகரமாகும். ஜவுளி உற்பத்திக்கு புகழ் பெற்ற இந்த நகரம் $59.8 பில்லியன் ஜிடிபி மதிப்பீட்டில், இந்தியாவின் ஒன்பதாவது பணக்கார நகரமாக உள்ளது.

10. விசாகப்பட்டினம்- GDP $43.5 பில்லியன்

10. விசாகப்பட்டினம்- GDP $43.5 பில்லியன்

இந்தியாவின் துறைமுக நகரம் என்று அழைக்கப்படும் விசாகப்பட்டினம், ஒரு சிறந்த பொருளாதார நகரமாகும். இது ஆந்திர பிரதேசத்தின் நிதி தலைநகரம் என்றும் அழைக்கப்படுகிறது. $43.5 பில்லியன் ஜிடிபி மதிப்பீட்டில், இந்த நகரம் இந்தியாவின் பத்தாவது பணக்கார நகரமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From Mumbai To Chennai, Here's A List Of The Top 10 Richest Cities In India 2021

From Mumbai To Chennai, Here's A List Of The Top 10 Richest Cities In India 2021 | இந்தியாவில் உள்ள 10 பணக்கார நகரங்கள்... சென்னைக்கு எந்த இடம்?
Story first published: Monday, August 8, 2022, 9:25 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X