இந்தியாவின் விவசாய நிலங்கள் பாரம்பரிய பயிர்களுக்கு மட்டுமல்லாமல்.. உலகளாவிய சந்தைகளில் தேவைப்படும் சில உணவுப் பொருட்களுக்கும் முக்கிய ஆதாரமாக மாறி வருகிறது. இந்த உணவுப் பொருட்களின் சாகுபடி சரியான முறையில் இருந்தால், இந்தியாவில் இருக்கும் விவசாயிகளும் மில்லியனர்களாக மாற முடியும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்தக் கட்டுரையில் இந்தியாவில் விளைவிக்கப்படும் 7 உயர் மதிப்புள்ள உணவுப் பொருட்களை பற்றிப் பார்ப்போம்.
காளான்கள்: காளான்களில் பல வகைகள் உள்ளன. காளான் வளர்ப்பு இன்று இந்தியாவில் மிகவும் லாபகரமான தொழிலாக மாறியுள்ளது. ஊட்டச்சத்து மிக்க காளான்கள் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இதனால் இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் காளான்களுக்கு அதிக தேவை உள்ளது. இத்தகைய தொழிலை தொடங்குவதற்கு ஒப்பீட்டளவில் பார்க்கும் போது குறைந்த அளவிலான முதலீடு மட்டுமே தேவைப்படும். மேலும் காளான் வளர்ப்பு அதிகமான வருவாய் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை. பட்டன் காளான், சிப்பி காளான் போன்ற பல வகையான காளான்கள் உள்ளன. காளான் வளர்ப்பில் அதிக லாபம் பெறும் விவசாயிகளும் நம் நாட்டில் உள்ளனர்.

சாஃப்ரான்: குங்குமப்பூ உலகளவில் மிகவும் விலையுயர்ந்த மசாலாப் பொருளாகும். இதன் சாகுபடி முக்கியமாக இந்தியாவின் காஷ்மீர் பகுதியில் நடைபெறுகிறது. சாஃப்ரானை அறுவடை செய்வது மிகவும் உழைப்பு மிகுந்த செயலாகும். உணவு, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒன்றாக குங்குமப்பூ இருக்கிறது. இதன் காரணமாக குங்குமப்பூவுக்கு அதிக அளவில் தேவை இருக்கிறது.
மாதுளை: மாதுளை பழங்களில் நிறைய ஊட்டச்சத்து விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களில் அதிக அளவில் மாதுளை பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் மாதுளை பழங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. எனவே மாதுளை பழங்களை விளைவிக்கும் விவசாயிகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டுக்கும் அவற்றை ஏற்றுமதி செய்யலாம். ஆனால் சில பழங்கள் குறிப்பிட்ட மண் வகை பருவநிலை ஆகியவற்றை பொறுத்தே வளரும் என்பதால் சில பழ வகைகள் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது.
பாதாம்: பாதாம் விவசாயம், குறிப்பாக இமாச்சலப் பிரதேசம் போன்ற வட மாநிலங்களில், அதிக லாபம் ஈட்டுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தாவர அடிப்படையிலான உணவுப் பொருட்கள் மற்றும் பாதாம் பால் மற்றும் பாதாம் மாவு ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதால், பாதாம் பருப்பின் மதிப்பு பெரிதும் அதிகரித்துள்ளது. பாதாம் பழத்தோட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் கணிசமான வருமானத்தை பெற முடியும், ஏனெனில் இந்தியாவில் பாதாம் நுகர்வு அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது.
அவகேடோக்கள்: ஆரோக்கியமான உணவுக்கான உலகளாவிய போக்கு, அவகேடோக்களை உலகளவில் மிகவும் விரும்பப்படும் பழங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களில் இந்தியாவில் அவகேடோ சாகுபடி இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளது. ஏனெனில் காலநிலை அதற்கு ஏற்றர் போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உள்ளூர் மக்களால் அவகேடோக்களுக்கான தேவை நிச்சயமாக வருங்காலத்தில் அதிகரிக்கும், ஏனெனில் அதிக இந்தியர்கள் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு தங்கள் உணவுப் பழக்கவழக்கங்களை மாற்றி வருகின்றனர். பருவ கால சூழ்நிலைகளையும் மீறி சிலர் இந்தியாவிலும் வெற்றிகரமாக அவகேடோ பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இந்த தொழிலை செய்வது இனிவரும் காலத்தில் லாபகரமான மாறும் என்ற போக்கே நிலவுகிறது.
டிராகன் பழம்: டிராகன் ஃப்ரூட் போன்ற அயல்நாட்டு பழங்கள் தற்போது இந்தியாவிலும் கிடைக்கின்றன. அவற்றில் சுவை மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. கேரளா, மகாராஷ்டிரா போன்ற தென் மாநில விவசாயிகள் டிராகன் பழத்தை சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர். டிராகன் பழங்கள் அவற்றின் நிறம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த பண்புகளால் உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைகளிலும் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
ஸ்டீவியா: ஸ்டீவியா ஒரு இயற்கை இனிப்புச்சத்து ஆகும். இது ஒரு துளசி வகையைச் சேர்ந்த தாவரமாகும். மேலும் நீரிழிவு மற்றும் உடல் பருமன் தொடர்பான ஆரோக்கிய பிரச்சனைகளின் காரணமாக மக்கள் சர்க்கரைக்கு பதிலாக இதைப் பயன்படுத்துகின்றனர். நீரிழிவு மற்றும் உடல் பருமன் தொடர்பான பிரச்சனைகள் அதிகரித்து வருவதால், உணவு மற்றும் குளிர்பான துறையில் ஸ்டீவியாவுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறைந்த நீர் பயன்பாடு மற்றும் அதிக வணிக மதிப்பு கொண்டதால், இப்போது பஞ்சாப் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் விவசாயிகள் ஸ்டீவியாவை விளைவித்து வருகின்றனர்.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications