2025ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம், புது ஆண்டு பிறக்க போகிறது. இந்த புது ஆண்டில் எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் சீராக செல்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் சில முக்கியமான பணிகளை மக்கள் முடித்தாக வேண்டும்.
டிசம்பர் 31ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட இந்த வேலைகளை முடிக்கவில்லை என்றால் அடுத்த ஆண்டில் உங்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது . எனவே நீங்கள் இந்த வேலைகளை எல்லாம் பெண்டிங் வைத்திருந்தால் முதல் வேலையாக அவற்றை முடித்துவிட்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடுங்கள்.

ரேஷன் கேஒய்சி: மத்திய, மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும் மானிய விலையிலும் அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்டவற்றை வழங்குகின்றன. ஆனால் இது அதிக வருமானம் கொண்ட மக்களுக்கும் செல்கிறது. அவர்கள் இவற்றை வாங்கி விற்று பணமாக்குகிறார்கள். எனவே இந்த பலன்கள் உரிய மக்களுக்கு சென்றடைய ரேஷன் கார்டுகளில் கேஒய்சி சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ தேதியாக டிசம்பர் 31ஆம் தேதி என அறிவிக்கப்படவில்லை என்றாலும் பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஆண்டு முடிவதற்குள் கேஒய்சி முடித்துக் கொள்வது நல்லது என ரேஷன் கடைகள் மூலம் பணிகள் தீவிர படுத்தப்பட்டு வருகின்றன. எனவே கேஒய்சி முடிக்காமல் இருந்தால் உடனடியாக ரேஷன் கடைக்கு சென்று முடித்து விடுங்கள். இல்லை என்றால் அரசின் சலுகைகள் உங்களுக்கு கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

ஆதார் - பான் கார்டு இணைப்பு: வருமான வரித்துறை பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதை கட்டாயமாக்கி இருக்கிறது . நீங்கள் பான் கார்டு வைத்திருந்தால் பெற்றிருந்தால் முதலில் வருமானவரித்துறை இணையதளத்திற்கு சென்று உங்களுடைய பான் உடன் ஆதார் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை பாருங்கள் இல்லை என்றால் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அதனை இணைத்து விடுங்கள். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் உங்களின் பான் கார்டு செயலிழந்து போய்விடும். உங்களுடைய வருமானவரி கணக்குத் தாக்கல் வண்டி டெபாசிட்டுகள் முதலீடுகள் உள்ளிட்ட அனைத்துமே மேற்கொண்டு உங்களால் செயல்படுத்த முடியாமல் போகலாம் .
வருமான வரி : 2024 -25ஆம் நிதி ஆண்டுக்கான உங்களுடைய வரி வருமானத்தை இன்னும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை என்றால் டிசம்பர் 31க்குள் செய்துவிட வேண்டும். இந்த ஆண்டு வருமானவரி கணக்கினை தாக்கல் செய்வதற்கு அரசு கூடுதலாக கால அவகாசம் தந்திருந்தது இருந்தாலும் அதை தவறவிட்டவர்கள் டிசம்பர் 31ஆம் தேதி வரை வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யலாம். இவ்வாறு தாக்கல் செய்யும் போது உங்களுடைய வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழிருந்தால் 1000 ரூபாய் அபராதமும் 5 லட்சம் ரூபாய்க்கு மேல் இருந்தால் 5000 ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும்.
பயிர் காப்பீடு: ரபி பருவத்திற்கான பயிர் சாகுபடியில் ஈடுபட்டிருக்க கூடிய விவசாயிகள் பிரதம மந்திரி பசல் பீம யோஜனா திட்டத்தின் கீழ் தங்களுடைய பயிர் காப்பீட்டை செய்வதற்கு டிசம்பர் 31ஆம் தேதி தான் கடைசி நாள். ஒருவேளை உங்களுடைய பயிர்கள் மழை உள்ளிட்டவற்றால் ஏதேனும் சேதமடைந்தால் இந்த திட்டத்தின் கீழ் நீங்கள் பயிரை காப்பீடு செய்திருந்தால் அரசு உங்களுக்கான முழு இழப்பீடு தொகையை வழங்கும். எனவே டிசம்பர் 31ஆம் தேதிக்குள் விவசாயிகள் இந்த பயிர் காப்பீட்டை முடித்துக் கொள்வது நல்லது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications