ஜூலை 23-ஆம் தேதியான நாளை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டில் எது போன்ற அறிவிப்புகள் வெளியாகும்? எந்த திட்டங்களுக்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்கப்படும்? என்ற பரபரப்பு அனைவரின் மனதையும் குடைந்து கொண்டிருப்பது இயல்பான ஒன்றுதான். இந்நிலையில் பல்வேறு துறையினர்களுக்கும் தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் வேரூன்றி உள்ளன. இந்தப் பதிவில் பட்ஜெட் குறித்த விரிவான விளக்கங்கள், தற்போது ஏன் டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என்ற விவரங்களைப் பார்ப்போம்.
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. லோக்சபா தேர்தல் காரணமாகத்தான் இந்த நிதியாண்டிற்கு நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

பட்ஜெட் என்பது ஒரு நிதியாண்டிற்கு அரசுக்கு வரவேண்டிய வரவு என்ன? வருமானங்கள் என்ன? மற்றும் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட இருக்கும் திட்டங்களுக்கான குத்துமதிப்பான செலவுகள் என்ன? என்ற விவரங்களை உள்ளடக்கிய ஒரு பட்டியல் போன்றது தான் பட்ஜெட்.
பட்ஜெட் என்ற வார்த்தையை அடிக்கடி குறிப்பிட்டு சொல்லுகிறோமே அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது என்று தெரியுமா? புக்கெட் (Bougette) என்ற பிரெஞ்சு வார்த்தையில் இருந்து வந்தது தான் பட்ஜெட். நாளடைவில் புக்கெட் என்ற வார்த்தை மருவி பட்ஜெட் என்றானது.
இந்த வார்த்தைக்கு தோலால் செய்யப்பட்ட சின்னப்பை என்ற அர்த்தமாகும். அதாவது தங்களுக்கு தேவையான குறிப்புகள் மற்றும் பணம் ஆகியவற்றை இதில் வைத்து கட்டி வெளியில் செல்வதற்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. எனவே அக்காலத்தில் இந்த பெயரை பயன்படுத்தி உள்ளனர்.
இதனால்தான் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, பல்வேறு நாடுகளும் இந்த வார்த்தையை பயன்படுத்த ஆரம்பித்தன. அதன் பிறகு பட்ஜெட் அன்று தோலால் ஆன பட்ஜெட் பையை கொண்டு செல்வது வழக்கமான நடைமுறையாக மாறியது. இதுவே பின்னர் படிப்படியாக அனைத்து நாடுகளும் பின்பற்றின.
பின்னர் நாகரிக வளர்ச்சியின் காரணமாக பட்ஜெட் பை, பட்ஜெட் பெட்டியாக மாறியது. இது முதன் முதலில் 1860-ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது லண்டன் பாராளுமன்றத்தில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக ராணி எலிசபெத்தின் உருவம் பொறித்த தோல் பெட்டியை அப்போது நிதி அமைச்சராக இருந்த வில்லியம் கிளன்டோன் கொண்டு வந்தார்.
டிஜிட்டல் பட்ஜெட்: கடந்த 2019 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்தார். அதேபோல 2020-ஆம் ஆண்டில் 162 நிமிடங்கள் வாசித்தார், அதாவது சுமார் 3 மணி நேரம். பிறகு 2021-ஆம் ஆண்டில் கொரோனா பெருந் தொற்று காரணமாக, காகிதம் இல்லாமல் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு முதன்முறையாக அப்போது டேப்லெட் பயன்படுத்தப்பட்டது.
இந்த முறையும் டிஜிட்டல் பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செவ்வாயன்று மீண்டும் ஒரு டிஜிட்டல் டேப்லெட்டை பாரம்பரிய "பாஹி-கட்டா" பாணி பையில் சுற்றி, 2024-2025-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை முந்தைய ஆண்டுகளைப் போலவே காகிதமற்ற வடிவத்தில் தாக்கல் செய்வதற்காக நாடாளுமன்றத்திற்குச் சென்றார். மெஜந்தா பார்டர் கொண்ட வெள்ளைப் பட்டுப் புடவை உடுத்தி, குடியரசுத் தலைவரைச் சந்திக்கச் செல்வதற்கு முன், அவர் அலுவலகத்திற்கு வெளியே, தனது அதிகாரிகள் குழுவுடன் பாரம்பரிய "ப்ரீஃப்கேஸ்" படத்திற்கு போஸ் கொடுத்தார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications