தெரு தெருவா பேப்பர் போட்ட பையன் தான் நான்.. வெற்றியின் ரகசியத்தை பகிரும் ஆப்பிள் டிம் குக்..!

அமெரிக்கா: ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் டிம் குக் தன்னுடைய முதல் வேலை குறித்தும் ஆப்பிள் நிறுவனத்தில் தான் பணிக்கு சேர்ந்தது குறித்தும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழுக்கு பேட்டி அளித்துள்ள டிம் குக் தன்னுடைய 12 வயதிலேயே தான் வேலைக்கு சென்றதாக கூறியுள்ளார்.

12 வயதாகும்போதே தான் செய்தித்தாள்களை விநியோகம் செய்து அதில் கிடைத்த பணத்தை கொண்டு தன்னுடைய படிப்புக்கு செலவு செய்ததாக கூறுகிறார். அவருடைய குடும்பத்திலேயே முதன்முறையாக கல்லூரிக்கு சென்று பயின்றது டிம் குக் தானாம். இப்படி ஒரு பெருமையும் வாய்ப்பும் கிடைத்திருக்கும் போது அதனை நாம் வீணாக்கி விடக்கூடாது என கல்லூரியில் சேர்ந்த முதல் நாளில் டிம் குக் நினைத்தாராம்.

தெரு தெருவா பேப்பர் போட்ட பையன் தான் நான்.. வெற்றியின் ரகசியத்தை பகிரும் ஆப்பிள் டிம் குக்..!

அவருடைய தலைமுறையினரை பொருத்தவரை கல்லூரிக்கு செல்வது என்பது வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு தன்னையும் தன் குடும்பத்தினரையும் அழைத்து செல்வதற்காக திறக்கப்படும் ஒரு நுழைவாயிலாக கருதப்பட்டது என டிம் குக் கூறுகிறார்.

ஆபர்ன் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை முடித்த அவர் 1983 ஆம் ஆண்டு ஐபிஎம் நிறுவனத்தின் வேலைக்கு சேர்ந்தாராம். வேலைக்கு சென்ற தொடக்க காலத்தில் தனக்கென சொந்தமாக ஒரு கட்டில் கூட இல்லை என்றும் தரையில் தான் படுத்து உறங்குவேன் என்றும் கூறியுள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத ஆண்டு 1998 என தெரிவித்துள்ள டிம் குக் அப்போதுதான் ஸ்டீவ் ஜாப்ஸ் தன்னை ஆப்பிள் நிறுவனத்தில் பணிக்கு தேர்வு செய்தார் என கூறியுள்ளார்.

இதுவரை நான் கண்டதிலேயே மிகவும் வித்தியாசமான ஒரு தலைமை செயல் அதிகாரி அவர், எப்பொழுதுமே தன்னுடைய தயாரிப்புகளில் தான் கவனம் செலுத்துவார் என ஸ்டீவ் ஜாப்ஸ் குறித்து புகழாரம் சூட்டியுள்ளார்.

சிறிய குழுவால் தான் அருமையான வேலைகளை செய்ய முடியும் என்பதில் நம்பிக்கை கொண்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ் என தெரிவித்துள்ள டிம் கும், நிறுவனத்தில் பணிபுரிந்த ஒவ்வொருத்தர் மீதும் ஸ்டீவ் ஜாப்ஸ் அதீத நம்பிக்கையை வைத்திருந்தார் என தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனம் வீழ்ச்சி அடைந்து விடும் என பலரும் கூறிய காலத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் மீது வைத்த நம்பிக்கையால் தான் தொடர்ந்து அந்த நிறுவனத்திலேயே பணியாற்றியதாக கூறி இருக்கும் டிம் குக், ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் பணியாற்றிய போது தனக்கு தலைமை பண்பு குறித்தும் ஒரு நிறுவனத்தை மேலாண்மை செய்வது குறிக்கும் அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கிறார்.

ஒரு புதிய விஷயத்தை எப்படி கண்டறிவது, அது எளிமையான மக்களையும் சென்று சேரும் வகையில் எப்படி மாற்றுவது என்பது குறித்தெல்லாம் ஸ்டீவ் ஜாப்ஸ் தனக்கு கற்று தந்ததாக டீம் குக் பெருமையாக தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி வகிப்பதற்காக எதையெல்லாம் இழந்துள்ளீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டதற்கு பல நாட்கள் தூக்கத்தை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள இளைஞர்களுக்கு நீங்கள் என்ன அறிவுரை கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு "உங்களுக்கான கதவுகள் திறக்கப்படும் போது அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் தயாராக இருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+