டெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அரசு 25% வரி விதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை மூலம் இருநாடுகளுக்கும் இடையிலான 129.2 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட இருக்கிறது.
இந்தியாவுக்கு 25% வரி: ஆகஸ்ட் 1ஆம் தேதியான நாளை முதல் இந்திய பொருட்களுக்கு 25% வரி அமலுக்கு வருவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தியா அமெரிக்காவுடன் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வருகிறது, ஒரு புறம் இரு நாட்டு வர்த்தக பேச்சுவார்த்தையும் நடந்து வந்தது. ஆனால் இந்தியா , ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்கா விரும்பவில்லை. இந்த சூழலில் தான் திடீரென வரி விதிப்பை வெளியிட்டுள்ளது. டிரம்பின் இந்த நடவடிக்கையால் இந்தியாவை சேர்ந்த எந்தெந்த துறைகள் அதிகம் பாதிக்கப்படும் என்பதை விரிவாக பார்க்கலாம்.

நகைகள் மற்றும் ரத்தினங்கள்: இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 10 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான நகைகள் மற்றும் ரத்தினங்கள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்திய நகைகள் மற்றும் ரத்தினங்களுக்கு அமெரிக்கர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம். இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்திய நகை மற்றும் நவரத்தின ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்திய நகை மற்றும் நவரத்தின ஏற்றுமதியாளர்களுக்கான கவுன்சில் வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி இருக்கிறது என தெரிவித்திருக்கிறது. நவரத்தினங்கள் சம்பந்தப்பட்ட துறை இதன் மூலம் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மருந்து துறை: ஆண்டுதோறும் இந்தியாவிலிருந்து 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. Non patent மருந்துகளை அமெரிக்கா அதிகளவில் இந்தியாவிலிருந்து தான் இறக்குமதி செய்கிறது. இது அமெரிக்காவிற்கு பெரிய அளவில் சேமிப்பையும் ஏற்படுத்தி தருகிறது. தற்போது டிரம்ப் விதித்திருக்கும் இந்த 25 சதவீதம் வரி விதிப்பு என்பது இந்தியாவின் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். சன் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், சிப்லா உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களுடைய 30 சதவீத வருமானத்தை அமெரிக்காவிற்கு மருந்து ஏற்றுமதி செய்வதன் மூலம் தான் பெறுகின்றன. தற்போது இந்த நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பட இருக்கிறது. 2022 ஆம் ஆண்டு நிலவரப்படி அமெரிக்காவில் ஒவ்வொரு 10 பிரிஸ்கிரிப்ஷனிலும் நான்கு மருந்துகள் இந்திய நிறுவனங்கள் சப்ளை செய்த மருந்துகளாக தான் விற்பனை செய்யப்படுகின்றன.

ஜவுளி : அமெரிக்காவில் வீட்டில் பயன்படுத்தக்கூடிய துணிகள் மற்றும் பெரிய பிராண்டுகளுக்கான ஜவுளிகள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பீப் ஜீன்ஸ், வால்மார்ட் போன்ற பெரிய சில்லரை விற்பனை நிறுவனங்களுக்கெல்லாம் இந்தியாவிலிருந்து தான் ஜவுளி மற்றும் வீடுகளில் பயன்படுத்தக்கூடிய துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன . இந்த வரி விதிப்பு நடவடிக்கை இந்த துறை சார்ந்த தொழில்களை இந்தியாவில் கடுமையாக பாதிக்கும் . இந்திய ஜவுளி துறைக்கான கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கக்கூடிய அறிக்கையில் இந்த நடவடிக்கை இலட்சக்கணக்கான ஜவுளி உற்பத்தி துறை சார்ந்தவர்களை பாதிப்படையச் செய்யும் என தெரிவித்திருக்கிறது.
எலக்ட்ரானிக்ஸ்: அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய ஐபோன் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற வேண்டும் என முடிவு செய்துள்ளது. அதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் டிரம்பின் நடவடிக்கை அமைந்திருக்கிறது. இந்தியாவில் ஃபாக்ஸ்கான், டாடா உள்ளிட்ட நிறுவனங்கள் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டு இருக்கின்றன. இந்த சூழலில் 25% வரி விதிப்பு நடவடிக்கை என்பது ஐபோன் உற்பத்தி மையமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் இலக்கை கேள்விகுறியாக்குகிறது, ஆப்பிள் தன்னுடைய திட்டத்தையே மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
எண்ணெய் நிறுவனங்கள்: அமெரிக்காவின் இந்த நடவடிக்கை ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க கூடிய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் தனியாருக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஆகியவையும் பாதிப்படைய செய்யும். ஒரு வேளை ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க முடியாத சூழல் ஏற்பட்டால் இவை மற்ற நாடுகளிடம் இருந்து அதிக விலைக்கு எண்ணெய் வாங்க வேண்டியது இருக்கும்.
More From GoodReturns

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!

அமெரிக்காவுக்கு ஈரான் தந்த ’ரகசிய பரிசு’ – அதிபர் டொனால்ட் டிரம்ப் சூசகம்..!!

பொட்டில் அடித்தது போல் சொன்ன Iran.. டிரம்ப் மீது சுத்தமா நம்பிக்கையில்லை.. JD Vance வர சொல்லுங்க..!!

டிரம்ப் வாயை திறந்தாலே பொய் தானா? - ஈரான் ராணுவம் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!!

Trump முன்னுக்கு பின் முரண்.. வெள்ளை கொடி தூக்கிய பின்பு ஈரானில் தாக்குதல்.. 2 எரிவாயு தளங்கள் துவம்சம்..!!

யாருடைய கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி? அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லும் புது கணக்கு

டிரம்ப் ஊதும் மகுடிக்கு கெவின் வார்ஷ் ஆடுவாரா..? தலைதூக்கும் ரெசிஷன் அச்சம்.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொல்வது என்ன?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications