காளான் வளர்ப்பில் சக்கைபோடு போடும் பெண்.. மாதம் ரூ.4 லட்சத்திற்கு மேல் வருமானம்!

சிலர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு ஏதோ ஒரு நிறுவனத்தில் சேர்ந்து பணியில் இருப்பார்கள். அதன் பிறகு தாமாக தொழில் செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் வேலையை விட்டுவிடுவார்கள். அப்படி சுய தொழில் தொடங்கி இன்று கோடிகளில் சம்பாதித்துக் கொண்டிருப்பவர்கள் பலர். அதேபோன்று தன் வேலையை விட்டு காளான் வளர்ப்பில் மாதம் மாதம் லட்சங்களில் சம்பாதிக்கும் ஒரு பெண்ணை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவுள்ளோம்.

முன்னால் மைக்ரோபயாலஜி பேராசிரியையான த்ருப்தி தாகேட் காளான் வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டி வரும் ஒரு பெண்மணி. இவர் தற்போது விவசாயத்தில் மட்டும் ஈடுபடவில்லை. அதோடு சுற்றுச்சூழல் பிரச்சனைகளையும் தீர்த்து வருகிறார். குவாலிட்டி காளான் பண்ணை என்ற தனது நிறுவனத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்க்கையை த்ருப்தி தாகேட் மாற்றி வருகிறார். அவர் அப்படி என்ன செய்கிறார் என்பதைப் பார்ப்போம்.

 காளான் வளர்ப்பில் சக்கைபோடு போடும் பெண்.. மாதம் ரூ.4 லட்சத்திற்கு மேல் வருமானம்!

விவசாயக் கழிவுகளை எரிப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது, இதனால் தண்ணீர் மட்டுமின்றி நீர் மாசுபாடு, நில மாசுபாடு என சுற்றுப்புறத்தை பாதிக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. இது குறித்த செய்திகளும் அடிக்கடி வெளியாவது உண்டு. அப்படி செய்திகள் வெளியாகும் போதெல்லாம் த்ருப்தி தாகேட்-டுக்கு ஆழ்ந்த மன உளைச்சல் ஆகிவிடும்.

இதற்கு ஏதாவது ஒரு தீர்வை கண்டுபிடிக்க வேண்டும் என்று த்ருப்தி யோசித்துள்ளார். அப்போதுதான் அவருக்கு விவசாய கழிவுகளை பயன்படுத்தி காளான் வளர்க்கலாம் என்ற எண்ணம் தோன்றியுள்ளது. இது மாசுபாட்டை குறைப்பது மட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு சத்தான பொருளை விளைவிக்கவும் உதவும்.

தனது யோசனைக்கு உயிர் கொடுக்க விரும்பிய த்ருப்தி காளான் வளர்ப்புக்கு எப்படி விவசாய கழிவுகளை பயன்படுத்தலாம் என்று ஆராயத் தொடங்கினார். ஆரம்ப கட்டத்தில் காளான் வளர்ப்பு பற்றி தெரியாத இவர், தனது தொழிலை விட்டு விவசாயத்திற்கு மாறுவது குறித்து அவருடைய குடும்பத்தினர் அதிருப்தியை தெரிவித்தனர்.

நாக்பூர் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த இவர், திடீரென விவசாயத்திற்குள் நுழைவது அவருக்கு ஏற்றதாக இருக்குமா என்று குடும்பத்தினர் சந்தேகப்பட்டனர். த்ருப்தி-க்கு ஆரம்பத்தில் சவால்கள் இருந்த போதிலும் காளான் வளர்ப்பு மீதான அவருடைய ஆர்வம் அவரை தொடர்ந்து இந்த தொழிலில் ஈடுபடத் தூண்டியது. அதற்காக த்ருப்தி ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். மேலும் அதைப் பற்றி அதிகம் படிக்கவும் ஆரம்பித்தார்.

காளான்களில் அதிக அளவு புரோட்டின், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் இருக்கிறது. இது ஆரோக்கியத்திற்கும் நல்லது என்பதை தெரிந்து கொண்ட த்ருப்தி.. என்ன நடந்தாலும் காளான் வளர்ப்பை செய்தே ஆக வேண்டும் என்று களம் இறங்கினார். அதற்காக முதலில் ரூ.3 லட்சம் முதலீடு செய்யும்படி தனது கணவரிடம் கூறியுள்ளார். அவர் வழங்கிய முதலீடு தான் த்ருப்தி காளான் பண்ணை அமைப்பதற்கு அடித்தளமாக அமைந்தது.

பிறகு 2018-ஆம் ஆண்டில் தனது தொழிலை தொடங்கினார். காளான்கள் சிப்பி காளான்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தத் தொடங்கினார. இன்றளவும் சில நபர்களிடையே காளான் அசைவ உணவு என்ற கருத்து நிலவுகிறது. இதேபோன்ற சவால்களையும் த்ருப்தி சந்தித்தார். எனவே உள்ளூர் சந்தைகளில் சிறிய ஸ்டால் அமைத்து இலவசமாக காளானை வழங்கியிருக்கிறார். அதோடு காளானின் நற்குணங்கள் பற்றியும் மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்.

த்ருப்தியின் கணவரான பூஷன் வார இறுதி நாட்களில் தனது மனைவிக்கு உதவியாக இருந்துள்ளார். அதன் பிறகு 2020-ஆம் ஆண்டில் கோவிட் 19 தொற்றுநோய் காரணமாக உலகமே போராடிக் கொண்டிருந்தது. அப்போது த்ருப்தியின் வணிகம் படுமோசமடைந்தது. லாக் டவுன் போடப்பட்டதால் சந்தைகள் மூடப்பட்டன. இதனால் விநியோகம் பாதிக்கப்பட்டது. அப்போது த்ருப்தி தனது அறிவியல் பின்னணியை பயன்படுத்தி காளான் குக்கிகள், பூண்டு ரொட்டி, பப்படங்கள், கேக்குகள் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட காளான் தயாரிப்புகளை செய்ய தொடங்கியுள்ளார்.

த்ருப்தி தனது தயாரிப்புகளை ஆன்லைனில் மார்க்கெட்டிங் செய்ய தொடங்கினார். தொற்று நோயின் போது மக்கள் தாவர அடிப்படையிலான உணவுகளை அதிகம் தேடிக் கொண்டிருந்தனர். சரியான நேரத்தில் தனது பொருட்களை சந்தைப்படுத்த தொடங்கியதால், அவருடைய பொருட்களுக்கு நல்ல லாபம் கிடைக்க தொடங்கியது. இதனால் அவருடைய வாடிக்கையாளர் தளம் விரிவடைந்தது. புரோட்டின் நிறைந்த உணவுப் பொருட்களை தேடிய மக்களுக்கு த்ருப்தியின் தயாரிப்பு சரியான தேர்வாக அமைந்தது.

த்ருப்தியின் புதிய தயாரிப்புகள் மக்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில் உள்ளூர் விவசாயிகளின் ஒத்துழைப்புக்காக பல்வேறு விவசாயிகளை சந்தித்துள்ளார். அதோடு இவர் 7,146 மாணவர்கள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு காளான் வளர்ப்பு முறைகளை பயிற்றுவித்துள்ளார். இன்று குவாலிட்டி மஸ்ரூம் பண்ணையிலிருந்து இந்தியா முழுவதும் காளான்களை சப்ளை செய்து வருகிறார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+