விராட் கோலி, தோனி, ரன்பீர் கபூர், ரஜினிகாந்த் என திரையில் நாம் காணும் பிரபலங்களின் ஸ்போர்ட்டிவான மற்றும் ஸ்டைலான லுக்கிற்கு பின்னணியில் இருப்பது ஒரு நபர். இந்திய பிரபலங்கள் படம் என்றாலு ஒரு நிகழ்ச்சி என்றாலும் முதலில் அழைப்பு விடுப்பது இவருக்கு தான்.
இந்தியாவில் பல்வேறு திரையுலக நட்சத்திரங்கள் தொடங்கி கிரிக்கெட் வீரர்கள் வரை பிரபலமான நபர்களின் விருப்பமான ஒரு ஹேர் ஸ்டைலிஸ்டாக இருப்பவர்தான் ஆலிம் ஹகீம். இந்தியாவின் காஸ்ட்லியான ஹேர் ஸ்டைலிஸ்ட் என்ற பெயருக்கு சொந்தக்காரர். ஒரு ஹேர் கட்டிங் செய்ய இவர் ஒரு லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுகிறார்.

எத்தனை லட்சமாக இருந்தாலும் பிரபலங்கள் இவரை தேடி தான் வருகிறார்கள். அண்மையில் கூட நடிகர் ரஜினிகாந்திற்கு கூலி திரைப்படத்திற்கு இவர் ஹேர் ஸ்டைல் செய்து கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்தது. அதில் அம்பானியின் ஹேர் ஸ்டைலுக்கு முழு பொறுப்பு வகித்தவர் இவர்.
இவருக்காக பிரபலங்கள் காத்திருந்து ஹேர் ஸ்டைல் செய்து கொள்கிறார்கள். ஹகீம் அவ்வளவு எளிதாக இந்த இடத்தை பிடித்து விடவில்லை, இதற்கு பின்னால் பல்வேறு சோக கதை இருக்கிறது . கடினமான உழைப்பு தான் அவரை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்தவர் தான் ஆலிம் ஹகீம். இவருடைய தந்தை பாலிவுட் நட்சத்திரங்களுக்கான சிகை அலங்காரம் செய்பவராக இருந்தாராம்.

ஹகீமுக்கு ஒன்பது வயதாகும்போதே அவருடைய தந்தை திடீரென மரணம் அடைந்து விட்டார் . இதனை அடுத்து இவருடைய குடும்பமே நிலை குலைந்து போனது . அந்த சமயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் குடும்பமே தத்தளித்துக் கொண்ட நிலையில் ஹகீம் முதன்முறையாக கத்திரிகோலை கையில் எடுத்தார், அதுதான் தற்போது அவரை செலிப்ரட்டி ஹேர்ஸ்டைளிலிஸ்டாக மாற்றி இருக்கிறது.
10 வயதாகும் போது தன்னுடைய தாயாரின் வழிகாட்டுதலின்படி முடி வெட்டும் தொழிலை தொடங்கினார். தங்கள் வீட்டின் பால்கனியிலேயே தொடங்கப்பட்ட இந்த தொழிலில் படிப்படியாக வளர்ச்சி அடையத் தொடங்கினார் . இதனை அடுத்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் வரும் கலைஞர்களுக்கு சிகை அலங்காரம் செய்ய தொடங்கினார்.
அந்த சமயத்தில் லாரியல் நிறுவனம் இவருடைய திறமையை கண்டுபிடித்து இவரை படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி ஹேர் ஸ்டைல் தொடர்பான பாடங்களை கற்க வைத்தது. தற்போது ஹகீம் இந்தியாவின் புகழ்பெற்ற ஹேர் ஸ்டைலிஸ்ட். ஒரு ஹேர் கட்டிங் செய்ய சராசரியாக ஒரு லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுகிறார். இத்துடன் 18 ஆயிரம் ரூபாய் ஜிஎஸ்டியாக செலுத்த வேண்டும்.
ஒரு திரைப்பட சூட்டிங்கிற்கு செல்ல குறைந்தது 15 லட்சம் ரூபாயை கட்டணமாக பெறுகிறார். ஒருமுறை இவரை சந்தித்து ஹேர் கட் செய்வதற்கு 5 லட்சம் ரூபாய் வரை செலுத்தும் பிரபலங்களும் இருக்கிறார்கள். பல்வேறு செலிபிரட்டிகளின் பிடித்தமான ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட். விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, ரஜினிகாந்த், ரன்பீர் கபூர், மகேஷ்பாபு என இவரின் கிளையண்ட் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.


Click it and Unblock the Notifications