கோடி கோடியாய் பணத்தை குவித்து வைத்திருக்கும் நிறுவனங்களும்.. இங்கயும் அவர் தான் முதலிடம்..!!

பெரிய பெரிய நிறுவனங்களை பொறுத்தவரை லாபம் , வளர்ச்சி ஆகிய விகிதங்களை எல்லாம் தாண்டி, அந்த நிறுவனம் எவ்வளவு ரொக்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறது என்பதும் முக்கியம். ரொக்கம் என்பது பணமாகவோ அல்லது விரைவாக பணமாக மாற்றக்கூடியதாகவோ இருக்கும் சொத்துகள் ஆகும்.

2014, மார்ச்31 நிலவரப்படி இந்தியாவில் பல லட்சம் கோடிகளுக்கு ரொக்க கையிருப்பு வைத்திருக்கும் நிறுவனங்கள் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம். ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி,

 கோடி கோடியாய் பணத்தை குவித்து வைத்திருக்கும் நிறுவனங்களும்.. இங்கயும் அவர் தான் முதலிடம்..!!


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: இந்த நிறுவனம் 2.08 லட்சம் கோடி பண இருப்புடன் இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி நிலவரப்படி இந்த நிறுவனத்தின் பண இருப்பு 2.08 லட்சம் கோடி ஆகும். 2024 ஆம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் மட்டும் 9 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.

டாடா மோட்டார்ஸ்: டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் தங்களிடம் 60,060 கோடி ரூபாய் பணம் கையிருப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டிற்குள் இந்த நிறுவனம் கடனே இல்லாத நிறுவனமாக மாறப்போகிறது.இந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜாக்வார் லேண்ட் ரோவர் 45 ஆயிரம் கோடியை ரொக்கமாக வைத்திருக்கிறது.

எல்&டி: 2024 ஆம் நிதியாண்டின் நிலவரப்படி இந்த நிறுவனம் 50,316 கோடி ரூபாயை ரெடி கேஷாக வைத்துள்ளது. 2024 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 25 % அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் வருமானமும் 21% அதிகரித்து 2.2 லட்சம் கோடியாக இருக்கிறது.

டிசிஎஸ்: டாடா குழுமத்தை சேர்ந்த மற்றொரு நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸ் நிறுவனம் 44,296 ரூபாயை ரொக்கமாக வைத்திருக்கிறது. இந்தியாவின் மென்பொருள் நிறுவனங்களிலேயே அதிக ரொக்க கையிருப்பு வைத்திருக்கும் நிறுவனம் இது தான்.
ஓஎன்ஜிசி: அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனம் 42,070 கோடி ரூபாயை கையிருப்பாக வைத்திருக்கிறது. 2024 ஆம் நிதியாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 40 சதவீதம் என அதிகரித்து 49221 கோடி என உயர்ந்தது.

விப்ரோ: இந்த நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு என்பது 40,812 கோடி ரூபாயாக இருக்கிறது. இந்த நிறுவனம் 2024 ஆம் நிதி ஆண்டில் 4.6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

இன்போசிஸ்: இந்த நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு என்பது 39,005 கோடி ரூபாய் ஆகும். இந்த நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டு லாபம் 26,233 கோடி ஆகும். இதன் வருமானம் 1.54 லட்சம் கோடியாக இருக்கிறது.

இண்டிகோ: இந்த விமான சேவை நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு 34,738 கோடி ரூபாய் ஆகும். இதில் ரெடி டூ கேஷாக 20,823 கோடியும், உடனே ரொக்கமாக மாற்றக்கூடியதாக 13,915 கோடியும் உள்ளது. 2024இல் இந்நிறுவனத்தின் வருமானம் 27% உயர்ந்துள்ளது.

கோல் இந்தியா: இந்நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு 33,486 கோடி ஆகும். 2024ஆம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 33% உயர்ந்து 37,402 கோடியாக உள்ளது.


story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+