Rags to riches கதைகள் எப்போதுமே நமக்கு புதிய நம்பிக்கையை தரும், ஆனால் இந்த வெற்றியை அடைய பலருக்கு கல்வியோ, பணமோ, நண்பர்களோ, உறவினர்களோ உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் மிகவும் சாதாரணப் பின்னணியில் இருந்து வந்து, பெரிய கல்வித் தகுதிகள் எதுவும் இல்லாமல், தன் அனுபவத்தை மட்டுமே மூலதனமாக கொண்டு ஒருவர் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியத்தையே கட்டமைத்துள்ளார். இவருடைய கதையும், வாழ்க்கை பயணமும் பலகோடி மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும்.
பீகாரில் ஒரு சிறிய கிராமத்தில், தனக்கு விருப்பமில்லாத ஒரு செக்யூரிட்டி வேலைக்காக வரிசையில் நின்ற தில்குஷ் குமார். வெறும் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்திருந்தார். ஆனால், அந்த வேலைக்கு ஏகப்பட்ட போட்டி இருந்த காரணத்தாலும், போதிய படிப்பு இல்லாமல் இருந்த காரணத்தாலும் அவர் நிராகரிக்கப்பட்டார். பலருக்கு இது வாழ்வின் பெரிய தோல்வியாக இருக்கும். ஆனால், தில்குஷ் குமாருக்கு, இது அவர் வேறொரு வழியில் செல்ல வேண்டும் என்பதற்கான சிக்னலாக இருந்தது. "இனி, நான் அடுத்தவர் கதவை தட்ட மாட்டேன்.. எனக்கான சொந்த வீட்டை நானே உருவாக்குவேன்" என்று அவர் சபதம் எடுத்தார்.

ஆட்டோ சீட் கற்றுக்கொடுத்த பாடம்: தில்குஷ் குமாரின் உண்மையான பள்ளிக்கூடம், விலை உயர்ந்த கல்லூரிகளோ அல்லது புத்தகங்களோ அல்ல. அவர் ஆட்டோ ஓட்டிய பீகார் மாநில சாலைகள்தான். ஆட்டோ ஓட்டும்போதே, நீண்ட தூரப் பயணத்தில் மக்கள் அனுபவிக்கும் துன்பத்தை அவர் நேரடியாக பார்த்தார். ஆட்டோக்களை ஒப்பிடுகையில் டாக்ஸிகள் மிக விலை உயர்ந்தவை, ஆட்டோ பயணம் 100 சதவீதம் பாதுகாப்பானது இல்லை. இதை ஒரு குறையாகப் பார்க்காமல், ஒரு பெரிய தொழில் வாய்ப்பாக பார்த்தார் தில்குஷ். பட்டங்கள் இல்லாவிட்டாலும், ஒரு ஓட்டுநராக அவர் பெற்ற அனுபவம், இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண தூண்டியது.
பணபலம் இல்லாத போதும், துணிச்சலை மட்டுமே நம்பி, 2016-இல் அவர் 'ரோட்பெஸ்' (Roadbez) என்ற நிறுவனத்தை தொடங்கினார். சொந்தமாக ஒரு டாக்ஸி கூட வாங்காமல், நம்பகமான ஓட்டுநர்களை ஒரு இணையதளத்தின் மூலம் சவாரி தேடும் பயணிகளுடன் இணைப்பதுதான் இவரின் ஐடியா.
வாடிக்கையாளர்களை வென்றது எப்படி..?: அவர் பீகாருக்குத் தேவையான சேவைகளை முதலில் கொண்டு வந்தார். உள்ளூர் பயணத்திற்கு ஓலா, உபர் போன்றவை இருக்கும் வேளையில் வெளியூர், வெளி மாநிலத்திற்கு செல்லும் வாடிக்கையாளர்கள் தான் இவருடைய டார்கெட் ஆக மாறியது. வெளியூருக்கு செல்லும் மக்கள் டாக்சி சேவையை தேர்வு செய்யும் போது இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை திரும்ப வருவதற்கான கட்டணத்தையும் அதே வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.
உதாரணமாக சென்னை டூ சேலம் பயணித்தால் ஒரு வாடிக்கையாளர்கள் இரு வழிக்கும் கட்டணத்தை செலுத்த வேண்டும், இது மக்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. இதை சரி செய்யும் முயற்சியில் தில்குஷ் ஒரு வழி டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தினார். 50 கி.மீ-க்கு மேல் செல்பவர்களுக்குப் கார் பூலிங் மற்றும் ரைட் ஷேரிங் சேவைகளையும் அறிமுகம் செய்தனர். இதன் மூலம், தில்குஷ் பீகார் மாநிலம் முழுவதும் பயண அனுபவத்தையே மாற்றி அமைத்தார்.
2021-இல், பீகாரின் அனைத்து நகரங்களையும் இணைக்க ஒரு செயலியை அறிமுகப்படுத்தினார். இவரது யோசனையில் நம்பிக்கை வைத்த முதலீட்டாளர்கள், உடனடியாக ரூ.40 லட்சம் நிதியுதவி அளித்தனர். மேலும், ஒரு துணிச்சலான உத்தரவாதத்தையும் அவர் கொடுத்தார். ரோட்பெஸ் ஓட்டுநரின் தவறால் விமானப் பயணத்தை தவறவிட்டால், நிறுவனமே புதிய டிக்கெட்டைப் பதிவு செய்து தரும் என்ற மிகப்பெரிய வாக்குறுதியை கொடுத்தார், இது இந்நிறுவனத்திற்கு விளம்பரமாகவும் மாறியது.
இன்று, ஒரு சிறிய ஆட்டோ இருக்கையில் இருந்து தொடங்கிய அவரது நிறுவனம், ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வழங்குகிறது. மேலும் 'ஷார் டேங்க் இந்தியா' நிகழ்ச்சியில் தில்குஷ் குமார் பங்கேற்று, அவர் தனது நிறுவனத்தின் 5% பங்கிற்காக ரூ.50 லட்சம் கேட்டார்.
அவரது திறனும் மற்றும் போராட்ட குணம் கண்டு வியந்த OYO-வின் ரித்தேஷ் அகர்வால் மற்றும் எம்க்யூர் பார்மசூட்டிகல்ஸின் நமிதா தாப்பர் ஆகியோர் ரூ.50 லட்சம் முதலீடு செய்து ஒப்பந்தம் போட்டு, அவரது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவினர். இன்று 400 கோடி ரூபாய் மதிப்புடைய நிறுவனமாக மாறியுள்ளது
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications