உத்தரப்பிரதேச மாநிலம், கோரக்பூரைச் சேர்ந்த சங்கீதா பாண்டே, வெறும் ரூ.1500-இல் தொடங்கிய தொழிலை இன்று ரூ.3 கோடி நிறுவனமாக மாற்றியுள்ளார். சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இல்லத்தரசியான சங்கீதா இன்று பல பெண்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக மாறி இருக்கிறார். சங்கீதா தனது குடும்ப பொறுப்பை அலட்சியப்படுத்தாமல் வெற்றிகரமான தொழிலதிபராகி தன்னைப் போன்ற மற்ற பெண்களுக்கும் வேலை வாய்ப்பை அளித்து வருகிறார். சங்கீதா யார்? அவர் அப்படி எந்தத் தொழிலைத் தொடங்கி இவ்வளவு லாபம் பெற்றார்? என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
கோரக்பூரைச் சேர்ந்த ஒரு சாதாரண குடும்பப் பெண்தான் சங்கீதா பாண்டே. இவர் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வந்துள்ளார். தனது வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சவால்களை எதிர்கொண்ட சங்கீதா பாண்டே, கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார்.

10 ஆண்டுகளுக்கு முன்பே சங்கீதா குடும்பத்தின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடைந்தது. இதனால் வெளியில் சென்று வேலை செய்யும் நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்ததால், அவற்றை பார்த்துக் கொள்ளும் பொறுப்பும் சங்கீதாவுக்கு இருந்தது. இதனால் வீட்டிலிருந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துள்ளார் சங்கீதா. அப்போதுதான் ஸ்வீட் பாக்ஸ் செய்யும் ஐடியா அவருக்கு தோன்றியுள்ளது.
இதற்காக 10 வருடங்களுக்கு முன்பு வெறும் ரூ.1500 ரூபாய் முதலீட்டில் தனது தொழிலைத் தொடங்கியுள்ளார். கடைகளுக்குச் சென்று ஸ்வீட் பாக்ஸ்கள் செய்வதற்கு தேவையான மூலப்பொருட்களை சைக்கிளில் கொண்டு வந்து தனது தொழிலைத் தொடங்கி இருக்கிறார். பின்னர் அதே சைக்கிளில் சென்று தயார் செய்யப்பட்ட பாக்ஸ்களையும் வழங்கி இருக்கிறார். சங்கீதா பாண்டே பல சவால்களையும் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார். ஆனால் எதற்கும் மனம் தளராத இவர் இப்போது ரூ.3 கோடி நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.
சங்கீதா முதல் நாள் 100 பாக்ஸ்களை தயாரித்து விற்பனை செய்துள்ளார். பின்னர் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற அவர்களின் தேவைக்கேற்ப பாக்ஸ்களின் வடிவமைப்பையும் தரத்தையும் மாற்றியமைத்துள்ளார். இது போன்ற சூழ்நிலைகளில் அவர் சில இழப்புகளையும் சந்தித்துள்ளார்.
இறுதியாக லக்னோவில் இருந்து மூலப்பொருட்களை வாங்க தொடங்கிய போது அவர் செய்யும் ஸ்வீட் பாக்ஸ்களின் தரமும் மேம்பட்டுள்ளது. மேலும் லாப வரம்பும் அதிகரித்துள்ளது. படிப்படியாக தன் தொழிலை விரிவுபடுத்த தொடங்கியுள்ளார். அடுத்து சில நாட்களில் ரூ.35 லட்சம் கடன் வாங்கி தொழிற்சாலை ஆரம்பித்து உற்பத்தியை அதிகரித்துள்ளார். இன்று ஸ்வீட் பாக்ஸ் உற்பத்திக்கு நவீன இயந்திரங்களைப் பயன்படுத்தி வருகிறார். தற்போது இந்த தீபாவளிக்கு மாட்டு சாணத்தில் இருந்து சிறப்பு ஆர்கானிக் விளக்குகளையும் தயாரித்து வருகிறார். 100-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்கியுள்ளார்.
திருமணம் ஆகி குழந்தை பிறந்து விட்டால் எந்த தொழிலுமே செய்ய முடியாது என்று நினைக்கும் பெண்களுக்கு இந்தப் பெண் ஒரு சிறந்த உதாரணம். ஆரம்பத்தில் லாபம் குறைவாக இருந்தாலும், அவருடைய விடாமுயற்சியின் காரணமாக தற்போது இந்த நிறுவனம் ரூ.3 கோடி மதிப்புடையதாக மாறி இருக்கிறது. "முயற்சி திருவினையாக்கும்" என்பதை சங்கீதாவின் கதை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications