பங்குச் சந்தையில் ஒருவர் ஏழையாகவும் முடியும் பணக்காரராகவும் முடியும். சரியான முதலீடுகளை தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரும் பங்குச் சந்தையில் சாதிக்கலாம். அப்படி 1990 ஆம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்யப்பட்ட ஒரு பங்கு இன்று அபார வளர்ச்சியை கண்டுள்ளது. இது பரம்பரை சொத்தகாவும் வளர்ந்துள்ளது. அந்த பங்குதான் JSW ஸ்டீல்.
இந்த பங்குச் சான்றிதழ்களை ரெடிட் (Reddit) பயனர் ஒருவர் சமீபத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அவருடைய அப்பா JSW ஸ்டீல்ஸில் முதலீடு செய்த அந்த ஒரு லட்சம் ரூபாய் தற்போதைய மதிப்பு ரூ.80 கோடியாக உயர்ந்துள்ளது. இது பொறுமை மற்றும் சரியான முதலீட்டின் சக்தியை உணர்த்துகிறது.

சந்தையில் பெரும் பரபரப்பு: முதலீட்டாளர் சவுரவ் தத்தா (Saurabh Datta) என்ற அந்த நபர் தனது எக்ஸ் X தளத்தில் பகிர்ந்து கொண்டார். இது சந்தை பார்வையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ரெடிட்டில் உள்ள ஒரு நபர், 1990-களில் தனது தந்தை ரூ.1 லட்சத்திற்கு வாங்கிய JSW பங்குகளைக் கண்டுபிடித்தார். இன்று அதன் மதிப்பு ரூ.80 கோடி. இது 30 ஆண்டுகளுக்குப் பிறகு வாங்கும் உரிமையை விற்கும் சக்தி என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டார்.
இந்தக் கதை ஆன்லைனில் மிக விரைவாகப் பரவி, நீண்ட கால முதலீட்டின் சக்தியைப் பயனர்கள் பாராட்டி வருகின்றனர். இப்போது, அவர் ஓய்வு பெற்று தனது வாழ்க்கையை நிம்மதியாக வாழ முடியும் என்று ஒரு பயனர் பதிவிட்டார். மற்றொரு பயனர், காலப்போக்கில் பங்குப் பிரிப்புகள் (stock splits), போனஸ்கள் (bonuses) மற்றும் ஈவுத்தொகைகள் (dividends) எவ்வாறு சேர்க்கப்படுகின்றன என்றும் இது ஒரு மாயாஜாலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முதலீட்டின் ஒழுக்கப் பாடம்: இந்தப் பதிவு பரவலான பாராட்டைப் பெற்றது. நல்ல வணிகங்களை விற்க அவசரப்படாதீர்கள். அடிப்படைகள் அப்படியே இருந்தால், காலம்தான் பெரிய வேலைகளைச் செய்யட்டும் என்று என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இது வெறும் முதலீடு அல்ல, இது தலைமுறை செல்வத்தை உருவாக்கும் (legacy creation) ஒரு வழிமுறை என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
எனினும், ஒருவர் ஒரு யதார்த்தமான கருத்தை முன்வைத்தார் 1990-களில் யாராவது ஒருவர் பங்குகளில் கொட்ட ரூ.1 லட்சம் வைத்திருந்து அதை மறந்துவிட்டால், அந்தக் குடும்பம் ஏற்கனவே பணக்காரர்களாக இருந்திருக்கும் இது முதலீட்டுக்குத் தேவையான ஆரம்ப மூலதனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
JSW ஸ்டீலின் வளர்ச்சியும் சந்தை மதிப்பும்: JSW ஸ்டீல் நிறுவனம், தற்போது ஒரு பங்கிற்கு ரூ.1004.90 என வர்த்தகம் செய்து வருகிறது. இதன் மொத்த சந்தை மதிப்பு ரூ.2.37 டிரில்லியன் ஆகும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது மிகப்பெரிய வெகுமதியை அளித்துள்ளது. ஒரு காலத்தில் சாதாரண முதலீடாக இருந்த இந்த நிறுவனம், பொறுமை, நேரம் மற்றும் உறுதியான வணிகங்களில் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உருவாக்கப்படும் தலைமுறை செல்வத்திற்கு ஒரு உதாரணமாகும்.
பழைய பங்குச் சான்றிதழ்களை மீட்டெடுக்கும் வழிமுறை: பழைய பங்குச் சான்றிதழ்களைக் கண்டுபிடிப்பவர்களுக்கு, அவற்றை மீட்டெடுப்பதற்கான செயல்முறை சற்று எளிதாகிறது. இது ஒரு டீமேட் கணக்கைத் (Demat account) திறந்து உரிமையைச் சரிபார்ப்பதில் தொடங்குகிறது. அதன்பின்னர், தேவைப்பட்டால் முதலீட்டாளர் கல்வி மற்றும் பாதுகாப்பு நிதி (Investor Education and Protection Fund - IEPF) மூலம் டீமெட்டீரியலைசேஷன் (dematerialization) அல்லது மீட்டெடுப்பு செயல்முறையை மேற்கொள்ளலாம். இந்தச் செயல்முறை, காகிதச் சான்றிதழ்களை மின்னணு வடிவத்திற்கு மாற்றி, பாதுகாப்பான மற்றும் எளிதான வர்த்தகத்திற்கு வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications