ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தென்னிந்திய திரை உலகில் ஏராளமான ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு ,மலையாளம் என அனைத்து மொழி சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். மீனை போன்ற கண்களுக்கும் அழகிய புன்னகைக்கும் பெயர் போனவர்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களோடு ஜோடியாக நடித்தவர். ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய மீனா பின்னாளில் அவருக்கே ஜோடியாகவும் நடித்தார். இதனை அடுத்து கமலஹாசன் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்த மீனா தன்னுடைய தனித்துவமான அழகாலும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

இப்போது கூட மலையாளம், தமிழ் படங்களில் நடித்து வருகிறார். மோகன்லாலுடன் இவர் இணைந்து நடித்திருக்கும் திரிஷ்யம் திரைப்படத்தின் 3ஆம் பாகம் கூடிய விரைவில் திரைக்கு வர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளிலும் இவர் பிஸியாக நடித்து வருகிறார். தன்னுடைய அழகிய புன்னகையால் ரசிகர்களின் மனதை ஈர்த்த மீனா நமக்கு மிகப்பெரிய ஒரு முதலீட்டு பாடத்தையும் கற்றுத் தந்திருக்கிறார்.

சரியான நேரத்தில் ஒரு முதலீடு மேற்கொண்டு அதனை பல மடங்கு லாபத்தில் விற்பனை செய்து தன்னுடைய புத்திசாலித்தனத்தை நிரூபித்திருக்கிறார். 10 கோடி ரூபாய் முதலீட்டில் மீனா சென்னையில் கேரள பாரம்பரியத்துடன் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டிய வீட்டினை அவர் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஒரு இடத்தை வாங்கி 10 கோடி ரூபாய் செலவு செய்து கட்டியிருக்கிறார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் வாந்தி கட்டப்பட்ட பாரம்பரிய கேரளா ஸ்டைல் வீட்டில் தான் மீனா அவருடைய மறைந்த கணவர் சாகர், மகள் நைனிகா ஆகியோர் வசித்து வந்ததாக சொல்லப்படுகிறது. 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி எந்த வீட்டை தற்போது இவர் ஒரு nri தம்பதிக்கு 100 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி குறிப்பிடுகிறது. சமூக வலைத்தளங்களில் தொடர்பான தகவல் வெளியாக இருப்பதாக இந்த செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆனால் மீனா தரப்பில் தொடர்பான இது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே மீனாவின் முதலீடு மற்றும் புத்திசாலித்தனமாக அவர் விற்பனை செய்து லாபம் பார்த்ததையும் சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர். கேரள பாரம்பரிய முறையில் கட்டப்பட்ட இந்த வீட்டில் செதுக்கப்பட்ட மரத்தூண்கள், விசாலமான முற்றம், அரண்மனை பாணியிலான வடிவமைப்பு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+