வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

ஒரு சாதாரண பட்டதாரியாகத் தொடங்கி, வெறும் 3 வருடத்தில் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் உயர் பதவியை அடைந்த கதை இது. அர்கா மஜும்தர் என்ற இளைஞரின் வாழ்க்கைப் பயணம் தான் தற்போது இணையத்தில் அதிகம் பேசக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.

100க்கு 95 பேர் பட்டதாரிகளை போல் சிறிய கல்லூரியில் படித்து, வெறும் ரூ.3.2 லட்சம் சம்பளத்தில் தனது முதல் பணியை தொடங்கிய அவர், வெறும் மூன்று ஆண்டுகளில் ரூ.80 லட்சம் சம்பளத்தை பெற்றுள்ளார். இவருடைய கதை, இந்தியாவின் பல இளைஞர்களுக்கு பெரும் உத்வேகமாக அமையும்.

வெறும் 3 வருடத்தில் ரூ.3.2 லட்ச டூ ரூ.80 லட்சம் சம்பளம்.. TCS-இல் தொடங்கி கூகுள் சென்ற டெக்கி..!!

அர்கா மஜும்தர் 23 வயதில் பொறியியல் பட்டம் பெற்றபோது, நாட்டில் பல இளம் இண்ஜினியர்களை போலவே பெரிய கனவுகளுடன் இருந்தார். ஆனால் சரியான வழிகாட்டுதல் இல்லாத நிலையில் பல இடத்தில் தோல்வியை சந்தித்த அவருக்கு முதன் முதலாக TCS நிறுவனத்தின் நிஞ்சா திட்டம் மூலம் தன் முதல் வேலையைத் தொடங்கினார்.

டிசிஎஸ்-ல் பணியாற்றும் போது அவருக்கான ஆரம்ப சம்பளம் ரூ.3.2 லட்சம் மட்டுமே. பலருக்கு இது ஒரு சாதாரண தொடக்கமாகத் தோன்றியிருக்கும். ஆனால் அர்கா அதை ஒரு அடித்தளமாகப் பயன்படுத்தினார்.

TCS-இல் முதல் வளர்ச்சி
TCS-இல் சேர்ந்த முதல் ஆண்டிலேயே பல உள் தேர்வுகள், பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து, தன் சம்பளத்தை இரட்டிப்பாக்கினார். இப்போது அவரது சம்பளம் சுமார் ரூ.7 லட்சமாக உயர்ந்தது. இது என்னுடைய இலக்கு அல்ல என்ற உணர்வுடன் மேலும் உயர வேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்படத் தொடங்கினார் அர்கா மஜும்தர்.

DSA மற்றும் லீட்கோட் பயிற்சி
அவரது உண்மையான மாற்றம் இங்குதான் தொடங்கியது. டேட்டா ஸ்ட்ரக்சர்ஸ் அண்ட் அல்காரிதம்ஸ் (DSA) எனப்படும் தொழில்நுட்பத் திறனை முழுமையாகக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார். வேலை முடிந்த பிறகு, அவர் தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை பயிற்சி செய்தார்.

சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் லீட்கோட் தளத்தில் 380-க்கும் மேற்பட்ட பிரச்னைகளைத் தீர்த்தார். பின்னர் இந்த எண்ணிக்கை 750-ஐத் தாண்டியது. தோல்விகள், நிராகரிப்புகள், நீண்ட காத்திருப்பு ஆகியவை இருந்தாலும் அவர் நிறுத்தவில்லை.

முதல் பெரிய வெற்றி
தொடர்ச்சியான உழைப்பின் பலனாக, அவர் ஒரு ப்ராடக்ட் அடிப்படையிலான ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு வேலையில் சேர்ந்தார். அங்கு அவரது சம்பளம் ரூ.14 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை உயர்ந்தது. இது வெறும் சம்பள உயர்வு அல்ல; அவரது உழைப்புக்கு கிடைத்த முக்கியமான அங்கீகாரம்.

கூகுள் வாய்ப்பு
இந்த வெற்றியைத் தொடர்ந்து அவர் இன்னும் தீவிரமாகப் பயிற்சி செய்தார். மேம்பட்ட தொழில்நுட்பங்களை ஆழமாகக் கற்றுக்கொண்டார். இறுதியில், அவரது தொடர்ச்சியான முயற்சி பலனளித்தது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான கூகுளில் சேர்ந்தார். அவரது ஆண்டு சம்பளம் ரூ.80 லட்சமாக உயர்ந்தது.

இந்தப் பயணத்தின் பாடம்
ரூ.3.2 லட்சத்திலிருந்து ரூ.80 லட்சம் வரை மூன்று ஆண்டுகளில் உயர்ந்த இந்தப் பயணம், பலருக்கும் ஒரு முக்கிய பாடத்தைச் சொல்கிறது. சிறந்த கல்லூரி, பெரிய ஆரம்பம் அல்லது உடனடி வெற்றி இல்லாவிட்டாலும் தொடர்ந்து நம்பிக்கையுடன் உழைத்தால் கட்டாயம் வெற்றி கிடைக்கும் என்பதை இவருடைய கதை உணர்த்துகிறது.

அர்கா மஜும்தர் கதை, "எங்கிருந்து தொடங்குகிறோம் என்பது முக்கியமல்ல, எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதே முக்கியம்" என்ற இலக்கை நோக்கிய பயணத்தை நினைவூட்டுகிறது. இந்தியாவின் பல இளம் பொறியாளர்களுக்கு இந்தக் கதை பெரும் உத்வேகமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+