சுயமாக ஒரு தொழிலை தொடங்கி அதனை வெற்றிகரமான தொழிலாக மாற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் கிடையாது. ஹார்ட் வொர்க்கோடு சேர்த்து ஸ்மார்ட் வொர்க்கும் அதற்கு அவசியம். இந்தியாவில் தற்போது பல்வேறு இளைஞர்களும் தங்களுடைய சொந்த முயற்சியில் சுயதொழில் ஆரம்பித்து வெற்றி பெறுகின்றனர். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு இளைஞரின் வெற்றி கதையை தான் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
அன்டோசா டெக்னாலஜி Antosa Technology பல்வேறு சிறு தொழில்களும் தங்களுடைய தொழில்களை நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப டிஜிட்டல் முறையில் மாற்றுவதற்கு உதவி வரக்கூடிய ஒரு சாப்ட்வேர் நிறுவனம் ஆகும். பல்வேறு தொழில்களுக்கு தேவையான ஈ காமர்ஸ் தளங்களை உருவாக்கி தருவது, வெப்சைட் மேம்படுத்தி தருவது மற்றும் மொபைல் செயலிகளை உருவாக்கி தருவது என இந்த நவீன காலத்தில் ஒரு தொழில் தன்னை தக்கவைத்துக் கொள்ள தேவையான அனைத்து விதமான டிஜிட்டல் தீர்வுகளையும் வழங்குகிறது.

தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டு சகோதரர்களால் ஒரு சிறிய அறையில் தொடங்கப்பட்டது தான் அண்டோசா டெக்னாலஜி என்ற நிறுவனம். இந்த நிறுவனம் தற்போது 20க்குன் அதிகமான தொழில் துறைகளில் 5க்கும் அதிகமான நாடுகளில் வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது . 100க்கும் அதிகமான ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக முடித்து இருக்கிறது. இந்தியா மட்டும் இல்லாமல் மலேசியா,ஆஸ்திரேலியா ,அமெரிக்கா ,டான்சானியா ஆகிய நாடுகளை சேர்ந்த பல்வேறு தொழில்களுக்கும் நிறுவனங்களுக்கும் டிஜிட்டல் ரீதியிலான சேவைகளை வழங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு தொடக்கமாக இருந்து ஒரு 300 ரூபாய் தான் என்பது தான் நம்மை ஆச்சரியப்படுத்தும். டேவிட் சின்னப்ப ராஜ் அன்டோசா டெக்னாலஜி நிறுவனத்தின் துணை நிறுவனர். கடந்த 2019 ஆம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பதற்காக சென்னைக்கு வருகை தந்திருந்தார். அப்போது கல்லூரி கல்வி கட்டணம் செலுத்த வேண்டும், வீட்டு வாடகை வழங்க வேண்டும் என பல்வேறு நிதி ரீதியான சவால்களை இவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. எனவே பகலில் கல்லூரிக்கு சென்று விட்டு மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் உணவகத்தில் வேலை செய்வாராம் இது தவிர இரவு நேரங்களில் பாதுகாவலராகவும் வேலை செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
ஒரு நாள் பேஸ்புக்கில் லோகோ டிசைன் செய்வதற்கு ஆள் தேவைப்படுகிறது என்று விளம்பரத்தை பார்த்திருக்கிறார். அந்த சமயத்தில் இவரிடம் லேப்டாப் கூட கிடையாது ஸ்மார்ட் போனிலேயே ஒரு லோகோவை உருவாக்கி அந்த நபருக்கு வழங்கியிருக்கிறார். இதன் மூலம் அவருக்கு முதன் முதலில் 300 ரூபாய் சம்பளமாக கிடைத்ததாம். அதுவே மிகப்பெரிய அளவில் நம்பிக்கை அளித்தது எனக் கூறியிருக்கும் அவர் அந்த ஒரு சிறிய தொடக்கம் தான் இன்று பெரிய நிறுவனத்திற்கு காரணமாக அமைந்தது எனக் கூறியிருக்கிறார்.
ஃப்ரீலேன்சராக வேலையை தொடங்கிய அவர், கல்லூரி நாட்களிலேயே 80 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இவ்வாறு லோகோ வடிவமைப்பிலேயே சம்பாதிக்க தொடங்கி இருக்கிறார். இவருடைய இந்த வளர்ச்சியை கண்டு அவருடைய மூத்த சகோதரரும் ஃப்ரீ லான்சிங் முறையில் இணையதளங்களை வடிவமைத்து தருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு தந்து இருக்கிறார். ஒருநாள் இருவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போதுதான் ஏன் நாம் சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கக்கூடாது என யோசனை வந்ததாம்.
அப்படி இருவரும் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் அன்டோசா டெக்னாலஜி . இந்த நிறுவனத்தின் நோக்கம் சிறிய நிறுவனங்களுக்கு டிஜிட்டல் ரீதியிலான பாதையை அமைத்து தருவது என்பதுதான் . அதில் வெற்றியும் பெற்று நம்பிக்கை நட்சத்திரங்களாக மிளிர்கின்றனர்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?



Click it and Unblock the Notifications