சிலருக்கு எதிர்பாராத விதமாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டும். அப்படித்தான் கிரிக்கெட் ஃபேண்டஸி அப்ளிகேஷனான ட்ரீம் 11 மொபைல் ஆப் மூலம் விவசாயி மகன் ஒருவர் ரூ.4 கோடி வென்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பியைச் சேர்ந்த மங்கள் சரோஜ் என்பவர் ட்ரீம் 11 கிரிக்கெட் ஆப்-பில் வெறும் 39 ரூபாய் செலுத்தி, ஒரே இரவில் பணக்காரராக மாறியுள்ளார்.
மங்கள் சரோஜ் தனது வங்கிக் கணக்கில் இருந்த, 39 ரூபாயை முதலீடு செய்துள்ளார். இந்த சொற்பத்தொகை அவருடைய வாழ்க்கையையே மாற்றப் போகிறது என்பது அப்போது அவருக்கு தெரியவில்லை. கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அன்று பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தான் மங்கள் ரூ. 4 கோடி வென்றுள்ளார். அப்போது பஞ்சாப் அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை உறுதிப்படுத்தும் விதமாக மங்கள் சரோஜின் மொபைலுக்கு ஒரு SMS வந்துள்ளது. அதில் அவர் ரூ. 4 கோடி வென்றிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மங்கள் சரோஜ், கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் பிளைவுட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் பிறந்தவர்கள் 5 சகோதரர்கள். 2 சகோதரிகளும் உள்ளனர். 2017-ஆம் ஆண்டு திருமணமான மங்கள் சரோஜுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.
மங்கள் சரோஜ்-இன் தந்தையான சுக்லா சரோஜ் ஒரு நிலத்தை குத்தகை எடுத்து அதில் விவசாயம் செய்து வரும் விவசாயி. இவர் விளையும் பொருட்களில் மூன்றில் ஒரு பங்கை நில உரிமையாளருக்கு பகிர்ந்து வருகிறார். மீதமுள்ளதைப் பயன்படுத்தி அவற்றை விற்பனை செய்து, தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் மங்கள் சரோஜ் பெற்றிருக்கும் வெற்றி அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி அவர் வசிக்கும் முழு கிராமத்திற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது போன்ற அப்ளிகேஷன் மூலமாக கிடைக்கும் வெற்றிகள் அரிதான நிகழ்வு என்பதை அனைவரும் உணர வேண்டும். விளையாட்டு அப்ளிகேஷன் பொழுதுபோக்கிற்காக மட்டுமே உருவாக்கப்பட்டவை. இதில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்ற எண்ணத்தில் அதிக அளவிலான தொகைகளை முதலீடு செய்வது ஆபத்தில் முடியலாம்.
ட்ரீம் 11 போன்ற விளையாட்டுகளில் வெற்றி பெறுவது என்பது முழுக்க முழுக்க அதிர்ஷ்டத்தை மட்டுமே சார்ந்தது. திறமை வேண்டும் என்றாலும் எல்லோருக்கும் இதே போன்ற வெற்றிகள் கிடைத்துவிடும் என்று கூறி விட முடியாது. பலர் இது போன்ற அப்ளிகேஷன்களில் பணத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நம் நாட்டில் அரங்கேறியுள்ளது.
சிலர் வங்கி கடன், குடும்பத்தினரிடம் கடன் பெற்று முழுவதுமாக முதலீடு செய்து விட்டு தோல்வி அடைந்து மன அழுத்தத்தோடு தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் மட்டுமின்றி அவர்களுடைய குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் இது போன்ற வெற்றிகளை பார்த்து ஏமாறாமல் கடின உழைப்பிலும் சரியான திட்டமிடலிலும் நம்பிக்கை வையுங்கள்! பொழுதுபோக்கிற்காக மட்டுமே இது போன்ற அப்ளிகேஷன்களை பயன்படுத்துங்கள்! பணம் சம்பாதிக்க அல்ல!
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications