உலகளவில் தற்போது இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தேனி மாவட்டத்தை சேர்ந்த ஒரு தம்பதி இயற்கையான முறையில் சோப்பு உள்ளிட்டவற்றை தயாரித்து மாதந்தோறும் 12 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டுகின்றனர்.
7,000 ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இவர்களின் தொழில் தற்போது லட்ச கணக்கில் வருமானம் தரும் தொழிலாக மாறி இருக்கிறது. தேனி மாவட்டம் போடியை சேர்ந்த நித்யாவுக்கு சிறுவயதில் இருந்தே அவர்களுடைய தாத்தா பாட்டி குளிப்பதற்கு தேவையான பவுடர்கள், தலைமுடிக்கு தேவையான அரப்பு உள்ளிட்டவற்றை பாரம்பரியமாக தயாரித்து வழங்குவார்களாம்.

பின்னர் கல்லூரி படிப்பை முடித்த நித்யா, பின்னர் வங்கி துறையில் வேலைக்கு சென்று இருக்கிறார். இவருக்கு ராஜபாண்டி என்பவருடன் திருமண நடைபெற்றது. அந்த சமயத்தில் தான் அவருக்கு வேலையை விட்டுவிட்டு தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாம். இயற்கையான முறையில் தயார் செய்யப்படும் சோப் மற்றும் பவுடர்கள் உள்ளிட்டவற்றை நாம் ஏன் விற்பனை செய்யக்கூடாது என்ற எண்ணம் உருவானதாம்.
அப்போது ராஜபாண்டி ஒரு ஹோட்டலுக்கு சென்று இருந்த போது அங்கே மிகப்பெரிய ஆடம்பர பிராண்டுகள் எல்லாம் இயற்கையான முறையில் தயார் செய்யப்பட்ட சோப்புகள் மற்றும் பவுடர்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதை கண்டிருக்கிறார். இது போன்ற பொருட்களை தான் நம்முடைய மனைவியின் தாத்தா பாட்டியும் தயாரித்து வழங்குகிறார்கள் என்பதை உணர்ந்த அவர் ஊர் திரும்பியவுடன் தன்னுடைய மனைவியிடம் நாம் இதனை ஒரு தொழிலாக செய்யலாம் என கூறினாராம்.
அப்படி தான் 2018ஆம் ஆண்டு அகத்தியா நேச்சுரல் என்ற நிறுவனத்தை நித்யாவும் அவருடைய கணவர் ராஜபாண்டியும் தொடங்கினர். பாரம்பரியமான தோல் பராமரிப்பு மற்றும் கூந்தல் பராமரிப்பு பொருட்களை மக்கள் கைகளில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே இவர்களுடைய நோக்கமாக இருந்தது.
முதல்கட்டமாக ஏழாயிரம் ரூபாய் முதலீடு செய்து இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், மஞ்சள் உள்ளிட பொருட்களை வாங்கியுள்ளனர் . அவற்றை வைத்துக்கொண்டு குளிப்பதற்கு தேவையான பவுடர்கள் ,முகத்தில் பூசி கொள்வதற்கான பேஸ்ட், சோப் ஆகியவற்றை தயாரித்துள்ளார்.
முதல் கட்டமாக தன்னுடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அதனை விற்பனை செய்திருக்கிறார். அவர்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. படிப்படியாக வெளியில் இருக்கும் மக்களும் அவற்றை வாங்கி பயன்படுத்த தொடங்கினார்கள். தற்போது அகத்தியா நேச்சுரல் நிறுவனம் 21 பொருட்களை விற்பனை செய்கிறது. இந்திய சந்தையில் தற்போது அவர்கள் தேங்காய் பால் சோப் உள்ளிட்ட மூன்று வகையான சோப்புகளையும் ஃபேஸ் பேக்குகளையும் விற்பனை செய்கின்றனர்.
மாதம் 12 லட்சம் ரூபாயை வருமானமாக ஈட்டுகின்றனர். இயற்கையான முறையில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக பொருட்களை கொள்முதல் செய்து இவற்றை தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர். உள்ளூரை சேர்ந்த 12 பெண்களுக்கும் இவர் வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளனர். கடந்த ஆண்டில் மட்டும் இவர்களின் நிறுவனம் 30 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டி இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications