ஒரு சாதாரண நிறுவனத்தில் ரூ.7.4 லட்சம் சம்பளத்தில் பணியாற்றி வந்த ஒரு தொழில்நுட்ப வல்லுநர், இன்று உலகின் டாப் நிறுவனமான FAANG (கூகுள், அமேசான் போன்ற நிறுவனங்களின் குழுமம்) நிறுவனத்தில் ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பாதிக்கிறார். அவரது இந்த மாற்றம், சமூக வலைத்தளமான ரெடிட் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தனது ஆரம்பகால தோல்விகள், மனச்சோர்வு மற்றும் படிப்படியாக முன்னேறிய விதம் குறித்து அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
தோல்வியில் இருந்து தொடங்கிய பயணம் : அந்த வல்லுநர் தனது ஆரம்ப நாட்களைப் பற்றி பேசுகையில், "நான் JEE மெயின் தேர்வில் 360-க்கு வெறும் 17 மதிப்பெண்தான் எடுத்தேன். 12-ஆம் வகுப்பில் 73 சதவீதம் மட்டுமே கிடைத்தது. நான் பள்ளி நாட்களில் படிப்பு மற்றும் விளையாட்டில் கெட்டிக்காரனாக இருந்தேன். ஆனால் திடீரென்று தடுமாறினேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால், அவர் ஒரு சாதாரணமான (Tier-3) கல்லூரியில் சேர்ந்ததாகவும், தனக்கு எந்த ஒரு தனிப்பட்ட ஆளுமையும் இல்லை என்று எண்ணித் தாழ்வு மனப்பான்மையில் இருந்ததாகவும் கூறியுள்ளார். இருப்பினும், அந்தச் சமயத்தில் கிடைத்த நண்பர்கள் அவருக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனிமைப்படுத்தப்பட்டபோது, தன்னையே மெருகேற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.
அமேசான் கொடுத்த வாழ்க்கை : கல்லூரி முடித்த பிறகு, அவர் ஒரு சேவை சார்ந்த நிறுவனத்தில் ரூ.7.4 லட்சம் சம்பளத்தில் தனது முதல் வேலையை தொடங்கினார். பிறகு தன்னுடைய திறமைகளை மேம்படுத்திக் கொண்டு, ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்திற்கு மாறினார். அப்போது அவரது சம்பளம் ரூ.13.5 லட்சமாக உயர்ந்தது.
ஆனால், வாழ்க்கையின் மிகப்பெரிய மாற்றம் எதிர்பாராத விதமாக வந்தது. ஒருநாள், அமேசான் நிறுவனத்தின் வேலைக்கு ஆள் எடுப்பவர் இவரை தொடர்பு கொண்டார். "அன்று முதல் எல்லாம் மாறிவிட்டது. இப்போது ஆண்டுக்கு ரூ.60 லட்சம் சம்பளம் வாங்குகிறேன். இது ஒரு கனவு போல இருக்கிறது," என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்தச் சம்பள உயர்வு என்பது தனது வெற்றியின் ஒரு பகுதி மட்டுமே என்று அவர் ஆணித்தரமாக சொல்கிறார். "நான் இப்போது கட்டுமஸ்தான உடலமைப்புடன் இருக்கிறேன், நகைச்சுவை உணர்வு அதிகரித்துள்ளது, முன்பு என்னிடம் இல்லாத ஒரு தன்னம்பிக்கை இப்போது என்னிடம் வந்துள்ளது. நான் முழுவதுமாக கண்டுபிடிக்கப்படவில்லை என்றாலும், என்னுள் இருந்த ஒரு சிறந்த பகுதியை நான் கண்டுபிடித்துள்ளேன்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இளைஞர்களுக்கு உத்வேகம் : இவரது நேர்மையான வெற்றி, குறிப்பாக சாதாரண கல்லூரிகளில் படித்துவிட்டு, சிறிய சம்பளத்தில் வேலைக்கு சேரும் பல இளைஞர்களுக்குப் பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. பல இளைஞர்கள், பெரிய நிறுவனங்களில் நுழைய என்ன படிக்க வேண்டும், எந்தப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று இவரிடம் ஆர்வத்துடன் ஆலோசனை கேட்டு வருகின்றனர். இவரது கதை, அதிக சம்பளம் பெறுவதை பற்றியது மட்டுமல்ல, தோல்விகளில் இருந்து மீண்டு வந்து, தன்னையே மாற்றியமைத்துக் கொள்வது பற்றியது என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications