மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சத்யா நாதெல்லா இந்த ஆண்டு 79.106 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியம் பெறுவார் என்று US செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) அக்டோபர் 24 அன்று தெரிவித்தது. இது இந்திய மதிப்புக்கு சுமார் 665.15 கோடி. சத்திய நாதெல்லாவின் சம்பளத்தை கேள்விப்பட்ட பிறகு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அதிக சம்பளம் பெறும் தலைமை நிர்வாக அதிகாரிகள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்று மக்கள் மத்தியிலும் ஆர்வம் நிலவுகிறது.
அடோப் CEO சந்தனு நாராயணன், கூகுள் CEO சுந்தர் பிச்சை, IBM-இன் அர்விந்த் கிருஷ்ணா மற்றும் மைக்ரான் நிறுவனத்தின் சஞ்சய் மெஹ்ரோத்திரா போன்ற இந்திய வம்சாவளித் தலைவர்கள் தங்கள் ஊதியம் குறித்து அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுகின்றனர். இந்தப் பதிவில் அதிக சம்பளம் பெறும் இந்திய வம்சாவளி தலைவர்கள் குறித்து பார்ப்போம்.

சுந்தர் பிச்சை: ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை தற்போது ரூ.1,846 கோடி என்ற அதிகபட்ச ஊதியம் பெற்று வருகிறார். அவரது சம்பளம் சத்யா நாதெல்லாவை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகம்.
சத்யா நாதெல்லா: சத்யா நாதெல்லா 2024-ஆம் ஆண்டில் 79.106 மில்லியன் அமெரிக்க டாலர் ஊதியம் பெறவுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இவர் சேர்ந்த பிறகு இதுவே இவரது இரண்டாவது பெரிய சம்பளமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 2014-ஆம் ஆண்டில், அவருக்கு 84 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு, அவருக்கு 48.5 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.408 கோடி) வழங்கப்பட்டது.
சாந்தனு நாராயண்: சாந்தனு நாராயண் அடோப் நிறுவனத்தின் CEO ஆவார். அவர் 1998 ஆம் ஆண்டில் பொறியியல் தொழில்நுட்ப குழுவின் துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளராக அடோப் நிறுவனத்தில் இணைந்தார். அவர் ஆப்பிள் மற்றும் சிலிக்கான் கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பணியாற்றியுள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.300 கோடி சம்பளம் பெறுகிறார்.
சஞ்சய் மெஹ்ரோத்ரா: சஞ்சய் மெஹ்ரோத்திரா சான்டெஸ்க் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர். அவர் 2016-ஆம் ஆண்டில் வெஸ்டர்ன் டிஜிட்டலால் கையகப்படுத்தப்படும் வரை நிறுவனத்தின் CEO-ஆக பணியாற்றினார். அவர் மைக்ரான் தொழில்நுட்பத்தின் CEO ஆவார் மற்றும் ஆண்டுக்கு ரூ.206 கோடி சம்பளம் பெறுகிறார்.
அரவிந்த் கிருஷ்ணா: அரவிந்த் கிருஷ்ணா தற்போது IBM-மின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் 1990-ஆம் ஆண்டில் நிறுவனத்தில் சேர்ந்தார். பல தொழில்நுட்ப மற்றும் நிர்வாக பதவிகளை வகித்த பிறகு, கிருஷ்ணா 2020-ஆம் ஆண்டில் IBM நிறுவனத்தின் CEO ஆனார். கிருஷ்ணா ரூ. 165 கோடி சம்பளத்துடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications