2023ல் மாறப் போகும் முக்கிய தலைவர்கள்.. இனி வங்கித் துறையின் எதிர்காலம் எப்படியிருக்கும்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் முன்னணி இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் தொடங்கி, தனியார் நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளில் இருந்து விலகவுள்ளனர், இதனால் பல நிறுவனங்களில் புதிய தலைவர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

 

இதனால் நடப்பு ஆண்டில் பல்வேறு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளுக்கு தலைவர்கள் மாறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் குறிப்பிடத்தக்க பதவிகளில் எஸ்பிஐ, பாங்க் ஆப் பரோடா, எல்ஐசி உள்ளிட்ட முன்னணி வங்கிகளும், நிறுவனங்களும் அடங்கும்.

எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்.. இனி வாடிக்கையாளர்கள் நிம்மதியா இருக்கலாம்? எஸ்பிஐ கொடுத்த சூப்பர் அப்டேட்.. இனி வாடிக்கையாளர்கள் நிம்மதியா இருக்கலாம்?

பி.எஸ்.இ லிமிடெட் (BSE)

பி.எஸ்.இ லிமிடெட் (BSE)

கடந்த டிசம்பர் 30 அன்று பி.எஸ்.இ லிமிடெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராகவும் சுந்தரராமன் ராமமூர்த்தியை நியமித்தது. இவர் ஜனவரி 4, 2023 முதல் 5 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிறுவனம் அஞ்சல் வாக்கெடுப்பு முலம் பங்குதாரர்களின் ஒப்புதலையும் பெறத் தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இதற்கான மின்னணு வாங்குபதிவு ஜனவரி 16, 2023 அன்று கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI)


எஸ்.பி.ஐ-யின் தலைவராக தினேஷ் குமார் காராவை அரசாங்கம் அக்டோபர் 7, 2020 முதல் நியமித்தது. முன்னதாக காரா ஆகஸ்ட் 2016ல் மூன்று வருடத்திற்கு எஸ்பிஐ-யின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டிருந்தார். அவரின் செயல் திறன் மதிப்பாய்வு செய்யப்பட்டு மீண்டும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டது. ஆக விரைவில் எஸ்பிஐயிலும் தலைமை பதவியில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கனரா வங்கி
 

கனரா வங்கி

எல்வி பிரபாகர் கடந்த பிப்ரவரி 1, 2020ல் கனரா வங்கியில் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரின் பதவி காலம் டிசம்பர் 31, 2022வுடன் முடிவடைந்துள்ளது. இவர் ஆர் ஏ சங்கர நாரயணனுக்கு பதிலாக நியமிக்கப்பட்டார்.

தற்போது இந்த பதவிக்கு கே சத்திய நாரயணன் ராஜுவின் பெயரை FSIB அமைப்பு பரிந்துரை செய்துள்ளது. எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

எல். ஐ.சி

எல். ஐ.சி

எல்ஐசி-யின் தலைவர் எம் ஆர் குமாரின் பதவி காலம் மார்ச் 2023வுடன் முடிவடையவுள்ளது. கடந்த ஜனவரி 2022ல் குமாரின் பதவிகாலம் 1 வருடம் நீட்டிக்கப்பட்டது. இதற்கு முன்பு பொது பங்கு வெளியீட்டினை கருத்தில் கொண்டு அவரின் பதவி காலம் 9 மாதம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இது ஜூன் 30, 2021ல் இருந்து, மார்ச் 13, 2022 வரையில் நீடித்தது. இந்த நிலையில் விரைவில் எல்ஐசி-யிலும் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகுதியினை விரிவுபடுத்த திட்டம்

தகுதியினை விரிவுபடுத்த திட்டம்

எல். ஐ.சி-யின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு தேவையான தகுதி வரம்பினை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது. ஆக விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய சொத்தினை நிர்வகிக்கும் ஒரு தலைவருக்கான தகுதியினை அலசி ஆராய்ந்து விரிவுபடுத்துவது என்பது அவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா

பாங்க் ஆப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான சஞ்சீவ் சதாவின் பதவி காலம் ஜனவரி 2023ல் முடிவடையவுள்ளது. இவரின் வயது ஜுன் 2023ல் ஓய்வுக்கான 60 வயதினை எட்டவுள்ள நிலையில், இந்த பதவிக்கான விண்ணப்பத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஆக தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் FSIB-யின் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பத்தினை அனுப்பலாம்.

பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் இந்தியாவின் எம்டி மற்றும் தலைமை செயல் அதிகாரியான அதானு குமார் தாஸ், ஜனவரி 2020ல் மூன்று வருட காலத்திற்கு பதவியில் நியமிக்கப்பட்டார். அவரின் பதவி காலம் ஜனவரி 2023ல் முடிவடையவுள்ளது. இவ்வங்கிக்கான தலைமை செயல் அதிகாரி மற்றும் எம்டி பதவிக்கான விண்ணப்பதார்களையும் FSIB அழைப்பு விடுத்துள்ளது. 45 வயது முதல் 57 வயதிற்குள் இருக்கும் நபர்கள் , 15 வருட முதன்மை வங்கி அனுபவம், குறைந்தபட்சம் 1 வருடமேனும் போர்டு குழுவில் இருந்திருக்க வேண்டும், எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல திறனும் நேர்மையும் கொண்ட நல்ல வங்கி துறையில் அனுபவமும் வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

யூகோ வங்கி

யூகோ வங்கி

சோமா சங்கர பிரசாத் ஜனவரி 1, 2022 அன்று யூகோ வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் எம்டியாக நியமிக்கப்பட்டார். இவரின் பதவிகாலமும் மே 2023ல் முடிவடையவுள்ள நிலையில், புதிய தலைவர்கள் விரைவில் புதிய தலைவர்கள் குறித்தான அப்டேட் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் எம்டி மற்றும் சிஈஓ-வான பிரதீம் சென்குப்தா, ஜனவரி 2020ல் நியமிக்கப்பட்டார். இவரின் பதவிகாலம் டிசம்பர் 31, 2022வுடன் முடிவடைந்துள்ள நிலையில், இவ்வங்கிக்கும் புதிய தலைவர் விரைவில் நியமிக்கப்படலாம் என தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

From SBI to LIC top banks and institutions plans to leadership change in 2023

From SBI to LIC top banks and institutions plans to leadership change in 2023
Story first published: Sunday, January 1, 2023, 23:24 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X