இந்தியாவில் தபால் துறை பல ஆண்டுகளாக மக்களுக்கு சேவையாற்றி வருகிறது. காலம் மாற்றத்துக்கு ஏற்ப நம்முடைய தபால்துறை செயல்படும் முறையிலும் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஒரு காலத்தில் தகவல் தொடர்பு என்றாலே தபால்கள் தான் என இருந்த நிலைமை தற்போது மாறி இருக்கிறது.
இணையதளம் செல்போன்கள் என அடுத்தடுத்த தொழில்நுட்பங்களின் வளர்ச்சி தகவல் தொடர்பு முறையே பெரிய அளவில் மாற்றி அமைத்திருக்கின்றன இருந்தாலும் தொடர்ந்து நாம் தபால் சேவைகளையும் பயன்படுத்தி தான் வருகிறோம். இந்நிலையில் 150 ஆண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கக்கூடிய ஒரு சேவையை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்த இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது தபால் துறை.

இந்திய தபால் துறையில் பதிவு தபால்கள் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றன. பலரது வாழ்க்கையிலும் இந்த பதிவு தபால்கள் முக்கிய பங்காற்றி இருக்கின்றன. இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து இந்தியாவில் பதிவு தபால் சேவை நிறுத்தப்பட்டு ஸ்பீடு போஸ்ட் எனப்படும் விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்படுவதாக அஞ்சல் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
1849 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பதிவு தபால் தேவை பயன்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்றும் கூட பாஸ்போர்ட், நீதிமன்றம், வங்கி மற்றும் அரசு துறை சார்ந்த கடிதங்கள் பதிவு தபால்கள் வாயிலாகவே நமக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. முக்கியமான ஆவணங்களையும் சான்றிதழ்களையும் அனுப்பும்போது மக்களின் நம்பகமான ஒரு தேர்வாக பதிவு தபால்கள் தான் இருக்கின்றன. ஏனெனில் இந்த பதிவு தபால்கள் யாருக்கு அனுப்பப்பட்டதோ அவரால் மட்டுமே பெற முடியும் என்பதால் தான் இது மிகுந்த நம்பிக்கை வாய்ந்த ஒன்றாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து பதிவு தபால் சேவை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது இது விரைவு தபால் சேவையுடன் இணைக்கப்பட இருக்கிறது. தபால் சேவைகளை மேம்படுத்தும் நோக்கிலும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி வழங்குவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்திய தபால் துறையின் இந்த நடவடிக்கைக்கு மதுரை எம்பி வெங்கடேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பதிவுத் தபால் சேவை குறைந்த பட்ச கட்டணம் ரூ 26, விரைவுத் தபால் எனில் ரூ 41 என குறிப்பிட்டுள்ள அவர், பதிவுத் தபால் ஒப்புகை கட்டணம் ரூ 3. விரைவுத் தபாலில் ரூ 10 என விலையை சுட்டிக்காட்டி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். பதிவுத் தபால் யாருக்கு அனுப்பப்பட்டதோ அந்த நபருக்கே போய்ச் சேரும், ஆனால் விரைவுத் தபால் முகவரிக்கு போய்ச் சேரும் என கூறியுள்ள அவர் பதிவுத் தபால் தேசம் முழுக்க எவ்வளவு தூரம் என்றாலும் ஒரே கட்டணம் , எடை கூடினால் மட்டுமே கட்டணம் கூடும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
விரைவுத் தபால் எடை கூடினாலும் சரி, தூரம் கூடினாலும் சரி கட்டணம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார், இது எல்லாம் எதற்கு? மக்களை தனியார் கூரியர் நிறுவனங்களை நோக்கி தள்ளுகிற ஏற்பாடு என தன்னுடைய எக்ஸ் பதிவில் சாடியுள்ளார்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications