பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதலில் தளபதிகளாக முன்னின்று நடத்தியவர்கள் பெண்கள்தான். அந்த வகையில் இந்தியாவின் பாதுகாப்பு படையில் முன்னணி வகிக்கும் பெண்கள் குறித்தும் அவர்களின் சாதனைகள் குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
கர்னல் சோபியா குரேஷி: பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் முக்கிய பங்காற்றியவர் இவர். உலகமே திரும்பி பார்க்கும் ஒரு கர்னலாக புகழ் பெற்றிருக்கிறார். குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். 1997 ஆம் ஆண்டு பயோ கெமிஸ்ட்ரி பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்தார். இதன் பின்னர் ராணுவத்தில் இணைந்த அவர் 2006 ஆம் ஆண்டு ஐநா அமைதி காப்புப் பணிகளில் காங்கோவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆறு ஆண்டுகள் அவர் அங்கே சேவை புரிந்தார். 2016 ஆம் ஆண்டு Exercise force 18 என்ற பெயரில் 18 நாடுகள் கலந்து கொண்டு ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தை வழிநடத்தியவர். 2025 ஆம் ஆண்டு ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கைக்கு தலைமை தாங்கினார்.

அவானி சதுர்வேதி: விமானப்படை லெப்டினன்ட். இந்திய விமானப்படையில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய வீர மங்கை. பிடெக் முடித்து ஐபிஎம் நிறுவனத்தில் இவருக்கு வேலை கிடைத்தது. ஆனால் அதை விடுத்து விமானப்படையில் சேர்ந்தார். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் போர் விமான பயிற்சி பெற்ற மூன்று பெண்களே இருந்தனர். அவர்களில் இவரும் ஒருவர். 2018 ஆம் ஆண்டு தனியாக விமானப்படை விமானத்தை இயக்கிய முதல் பெண் விமானி என்ற பெருமையும் இவரையே சார்ந்தது. வெளிநாட்டில் சென்று போர் பயிற்சி பெற்ற முதல் பெண் போர் விமானி இவர். 2020 ஆம் ஆண்டு இவருக்கு நரி சக்தி புஷ்கர் என்ற உயரிய விருது வழங்கிய கௌரவிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச அளவிலான உலகப்போர் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக பங்கேற்ற முதல் பெண் போர் விமானி என்ற பெருமை கொண்டவர்.
தீபிகா மிஸ்ரா: விங் கமாண்டர் தீபிகா மிஸ்ரா, 2006 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்ந்தார். இந்திய விமான படையின் சாரங் ஏரோபேட்டிக் குழுவில் 2014 ஆம் ஆண்டு முதல் பெண் விமானியாக சேர்க்கப்பட்டார். 2021 ஆம் ஆண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் வெள்ள நிவாரண பணிகளை முன் நின்று மேற்கொண்டார். 2023 ஆம் ஆண்டு கேலண்டரி விருது பெற்றார். இந்திய விமானப்படையில் பணிக்கு சேர்ந்த பெண்களில் கேலண்டரி விருது பெறும் முதல் பெண் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது.
பத்மா பந்தோத்பாதியா: 1978 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல் பெண்ணாக பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட படிப்பை முடித்தவர் என்ற பெருமை கொண்டவர். 1990 ஆம் ஆண்டு வட துருவத்தில் ஆய்வு பணிகளில் ஈடுபட்ட முதல் இந்திய பெண் இவர். 2004 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையின் முதல் பெண் ஏர் மார்ஷலாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2020 ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
பிரேர்னா தேவஸ்தாலி: இந்திய கடற்படை கமாண்டர். 2009 ஆம் ஆண்டு இந்திய கடற்படையில் பணிக்கு சேர்ந்தார். 2020 ஆம் ஆண்டு ஐஎன்எஸ் சென்னையில் முதல் பெண் லெப்டினண்ட்டாக பணி செய்தார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவின் போர்க்கப்பலை வழி நடத்தும் முதல் பெண் கமாண்டராக இவர் தேர்வு செய்யப்பட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications