14 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் இன்ஜினியர்.. 16 வயதில் குவாண்டிடேடிவ் டெவலப்பர்.. யார் இந்த கைரன் குவாசி?

பெரும்பாலான குழந்தைகள் தங்களின் பள்ளிக் கல்வியில் மூழ்கி இருக்கும் வயதில், உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க்-ன் கீழ் வேலை செய்தவர் என்றால் நீங்கள் நம்புவீர்களா? இது கற்பனை அல்ல, உண்மை. வெறும் 14 வயதில், எலான் மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இல் விண்வெளி பொறியாளராகப் பணிபுரிந்து, உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் அமெரிக்க-வங்காளதேச வம்சாவளியைச் சேர்ந்த இளம் மேதை கைரன் குவாசி.

இப்போதோ, அவருக்கு வயது 16. உலகின் மிகவும் சவாலான நிதி மையங்களில் ஒன்றான வால் ஸ்ட்ரீட்-இல், ஒரு முன்னணி நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, தனது அசாதாரணப் பயணத்தின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார். கைரனின் இந்த வளர்ச்சி வியப்பளிப்பதாக இருந்தாலும், அவரது பெற்றோர் தங்களின் மகனின் எதிர்காலம் குறித்து பயத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

14 வயதில் ஸ்பேஸ்எக்ஸ் இன்ஜினியர்.. 16 வயதில் குவாண்டிடேடிவ் டெவலப்பர்.. யார் இந்த கைரன் குவாசி?

ஸ்பேஸ்எக்ஸ் முதல் வால் ஸ்ட்ரீட் வரை: 14 வயதில், கைரன் குவாசி ஸ்பேஸ்எக்ஸ்-இன் ஸ்டார்லிங்க் (Starlink) பிரிவில் பணிக்குச் சேர்ந்து, விண்வெளித் துறையில் ஒரு புதிய வரலாற்றைப் படைத்தார். பூமியில் இருந்து செயற்கைக்கோள் இணையத்தை இயக்கும் அதிமுக்கிய மென்பொருள் அமைப்புகளில் பணிபுரிந்து, உலகின் இளைய பொறியாளர்களில் ஒருவராக அவர் திகழ்ந்தார். ஸ்பேஸ்எக்ஸ்-இல் அவர் பணியாற்றிய இரண்டு ஆண்டுகளும், அவருக்கு விண்வெளி கண்டுபிடிப்புகளின் ஒரு தனித்துவமான அனுபவத்தைக் கொடுத்தன. இந்த இரண்டு ஆண்டுகளிலேயே அவர் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்குப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.

ஸ்பேஸ்எக்ஸ்-இல் தனது பயணத்தை நிறைவு செய்த பிறகு, கைரன் ஒரு புதிய சவாலைத் தேர்ந்தெடுத்துள்ளார். அது, மிகவும் சிக்கலான மற்றும் புத்திசாலித்தனமானவர்களால் மட்டுமே ஆதிக்கம் செலுத்தப்படும் நிதி உலகம். இப்போது, 16 வயதில், நியூயார்க் நகரில் உள்ள சிட்டாடல் செக்யூரிட்டீஸ் (Citadel Securities) என்ற நிறுவனத்தில் ஒரு குவாண்டிடேடிவ் டெவலப்பர் ஆக (quantitative developer) தனது பணியைத் தொடங்கியுள்ளார். இது வெறும் கௌரவத்திற்காக மட்டும் அல்ல, சவால்களைத் துரத்துவதிலும், உலகில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதிலும் அவர் கொண்டுள்ள ஆர்வத்தின் வெளிப்பாடாகும். வால் ஸ்ட்ரீட்-இன் வேகம், அறிவுசார் தீவிரம் மற்றும் உடனடி முடிவுகளால் ஈர்க்கப்பட்டு அவர் இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கைரனின் புத்திசாலித்தனம் அவரது மிகச் சிறு வயதிலேயே வெளிப்பட்டது. பெரும்பாலான குழந்தைகள் நான்காம் வகுப்பில் இருந்தபோது, ஒன்பது வயதிலேயே அவர் கல்லூரிக்குச் சென்றார். 11 வயதிற்குள் கணிதத்தில் அறிவியல் துறையில் ஒரு பட்டத்தையும் பெற்றார். 2023 ஆம் ஆண்டில், சாண்டா கிளாரா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றபோது, அந்தப் பள்ளியின் 170 ஆண்டுகால வரலாற்றிலேயே மிக இளைய பட்டதாரி என்ற பெருமையைப் பெற்றார்.தான் கல்லூரியில் படித்த நாட்களைப் பற்றிப் பேசும்போது, கல்லூரியில் கடந்த மூன்று வருடங்கள் என் வாழ்க்கையின் மகிழ்ச்சியான ஆண்டுகள் என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியிருந்தார்.

ஆனால், இந்தச் சாதனைகளுக்குப் பின்னால், அவரது பெற்றோர், தந்தை முஸ்தாஹித் மற்றும் தாய் ஜூலியா, பல சவால்களை எதிர்கொண்டுள்ளனர். இளம் கைரனின் ஆர்வமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதிலும், அவனை வளர்ப்பதிலும் அவர்கள் தொடர்ந்து போராடினர். அவரது தாயார் ஜூலியா, ஒரு நேர்காணலில், பெற்றோராக நாங்கள் ஒவ்வொரு நாளும் தோல்வியடைவது போல் உணர்ந்தோம் என்று கூறியுள்ளார். "அவனை எவ்வாறு சமநிலையுடன் இருக்க உதவுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்றும் அவர் கவலைப்பட்டு வந்துள்ளனர். கைரன் ஒரு சாதாரண குழந்தையைவிட மிகவும் வித்தியாசமானவன் என்பதை அவரது பெற்றோர் மிக விரைவில் உணர்ந்தனர். ஒரு குழந்தையாக இருக்கும்போதே, அவன் உலக அரசியல் குறித்தும், அரபு வசந்தம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் பற்றியும் விவாதிக்க நள்ளிரவில் தன் பெற்றோரை எழுப்பிய சம்பவங்களும் உண்டு.

பணியிடத்தில் கைரனின் சவால்கள்: பெரும்பாலான டீனேஜர்கள் பகுதி நேர வேலைகளைத் தேடும் வயதில், கைரன் 10 வயதிலேயே இன்டெல் லேப்ஸில் (Intel Labs) இன்டர்ன்ஷிப் செய்து ஏஐ திட்டங்களில் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஆனால், 14 வயதில் பணியிடத்தில் அடியெடுத்து வைத்தது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அவரது வயதின் காரணமாக, பல நிறுவனங்கள் அவரது திறனைச் சந்தேகித்தன. அவர், இதை கலாச்சார வயது வந்தோர் மனப்பான்மை (Cultural Adultism) என்று குறிப்பிட்டார். இருப்பினும், ஸ்பேஸ்எக்ஸ் அவரது திறமையை அங்கீகரித்து அவருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது.

இப்போது, சிட்டாடல் செக்யூரிட்டீஸில், கைரன் பொறியியல் மற்றும் நிதித்துறையின் முன்னணிப் பதவியில் அடியெடுத்து வைத்துள்ளார். பலரும் அவர் ஏஐ அல்லது சிலிக்கான் வேலியில் ஆழமாகச் செல்வார் என்று எதிர்பார்த்தாலும், அவர் நிதித்துறையைத் தேர்ந்தெடுத்தது அதன் தனித்துவமான சவால்கள், உடனடித் தன்மை மற்றும் உலகளாவிய தாக்கம் ஆகியவற்றின் கலவைக்காகத்தான்.

16 வயதில் தனி வாழ்க்கை: இப்போது 16 வயதில், கைரன் மன்ஹாட்டனில் தனியாக வாழ்வது மற்றொரு முக்கிய விசயமாக பார்க்கப்படுகிறது. உரிமம் இல்லாததால், அவரது அம்மா அவரை ஸ்பேஸ்எக்ஸ்-க்கு அழைத்துச் சென்ற நாட்கள் போய்விட்டன. இப்போது, அவர் தனது வேலைக்கு வெறும் 10 நிமிடங்களில் நடந்து செல்கிறார். இந்த புதிய நகரம் அவருக்கு ஒரு புதிய சுதந்திரத்தைக் கொடுத்துள்ளது.

வெறும் 16 வயதில், பலர் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத ஒரு வாழ்க்கையை அவர் வாழ்ந்துவிட்டார். இப்போதும் இந்த சிறுவன் தனது வாழ்க்கையைத் தொடங்கிதான் இருக்கிறார் என்பதுதான் இதில் உள்ள மிகப்பெரிய சுவாரஸ்யம்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+