பல உத்வேகம் அளிக்கும் பணக்காரர்களின் கதைகள் உள்ளன. ஒன்றுமே இல்லாமல் இருந்தது முதல்.. உலகின் பணக்காரர்களின் பட்டியலில் இடம் பிடித்தது வரை பலர் இதற்கு முன்பு உயரத்தை அடைந்துள்ளனர். அப்படிப்பட்ட ஒருவர் தான் இர்பான் ராசாக். எளிமையான தொடக்கத்திலிருந்து இந்தியாவின் பணக்காரராக மாறி இருக்கும் இவருடைய பயணம் பலருக்கும் ஒரு முன் உதாரணம். பிரஸ்டீஜ் எஸ்டேட் ப்ராஜெக்ட்-இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான இர்ஃபான் ரசாக் தன்னுடைய குடும்ப பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்லும் நபர்.
அவரது தந்தை ரசாக் சத்தார் 1950-ஆம் ஆண்டில் பிரஸ்டீஜ் குழுமத்தை நிறுவினார். பெங்களூரில் ஒரு சாதாரண துணி மற்றும் தையல் கடையை தொடங்கியிருந்தார். இந்த ஆரம்ப முயற்சியானது தற்போது பெரிய பிராண்டாக மாறியுள்ளது.

இதன் காரணமாக இர்பான் ரசாத் தற்போது முன்னணி பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். அவர் தனது தந்தையுடன் தையல் கடையில் பணிபுரிந்து தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இர்ஃபான் ரசாக்கின் தலைமையின் கீழ், பிரஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸ் இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முக்கியத்துவம் பெற்றது.
இது குடியிருப்பு, சில்லறை விற்பனை மற்றும் ஹாஸ்பிடாலிட்டி போன்ற பல்வேறு துறைகளில் செயல்படுகிறது. இந்த நிறுவனம் வெற்றிகரமாக 285 திட்டங்களை நிறைவு செய்துள்ளது மற்றும் தற்போது 54 திட்டங்களை செயல்படுத்தி வருகிறது, இந்நிறுவனம் பிரமிக்க வைக்கும் 75 மில்லியன் சதுர அடியிலான ப்ராஜெக்ட்களை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது.
சமீபத்தில், இர்பான் ரசாக் மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர்களை தாண்டியது. இது பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் புராஜெக்ட்ஸின் பங்குகளில் ஏற்பட்ட 60 சதவீத உயர்வு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வெற்றி நிறுவனத்தை இந்தியாவின் மிகப்பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமாக மாற்றியுள்ளது. ஆப்பிள், கேட்டர்பில்லர், அர்மானி மற்றும் லூயிஸ் உய்ட்டன் போன்ற உலகளாவிய பிராண்டுகளில் ப்ரெஸ்டீஜ் பிராண்டும் அடங்கும்.
1990-ஆம் ஆண்டு பெங்களூரில் தனது இரண்டாவது ரியல் எஸ்டேட் ப்ராஜெக்ட்டை விற்பனை செய்த பிறகு ஓய்வு பெறத் திட்டமிட்டிருந்த போதிலும், ரசாக்கின் படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவோர் ஆர்வம், ரியல் எஸ்டேட் துறையில் சாதிக்க அவரைத் தூண்டியது. இப்படி தொடர்ந்து உழைத்து தனது நிறுவனத்தை வெற்றிப்பாதையில் கொண்டு சென்றுள்ளார்.
பெங்களூர், சென்னை, கொச்சி, கோழிக்கோடு, ஹைதராபாத், மும்பை போன்ற பல நகரங்களிலும் பிரஸ்டீஜ் ஸ்டேட்ஸ் ப்ராஜெக்ட்ஸ் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரும் வீடு வாங்கும் வகையில் இந்த நிறுவனம் 2019-ஆம் ஆண்டிற்குள் தனது வருடாந்திர விற்பனையை நான்கு மடங்காக உயர்த்திய இலட்சிய இலக்கை அடைந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர் திருப்திக்கு ரசாக்கின் அர்ப்பணிப்பு தெளிவாகத் தெரிகிறது.
சகோதரர்கலும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர்: இர்பான் ரசாக்கின் இளைய சகோதரர்கள், ரெஸ்வான் மற்றும் நோமன் ஆகியோரும் குடும்ப வணிகத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் துணி மற்றும் தையல் கடை இன்னும் பிரெஸ்டீஜ் எஸ்டேட்ஸ் திட்டங்களின் ரியல் எஸ்டேட் முயற்சிகளுடன் இணைந்து செயல்படுகிறது.
இர்பான் ரசாக் சொத்து மதிப்பு: 2024-ஆம் ஆண்டு நிலவரப்படி, இர்பான் ரசாக்கின் நிகர மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications