TCS வேலையை நிராகரித்து அரிசி வியாபாரத்தில் குதித்த இளைஞர்: சாதித்தாரா? சறுக்கினாரா?

முன்னணி ஐடி நிறுவனங்களில் வேலை வேண்டும் என்பது தான் பெரும்பாலான இளைஞர்களின் கனவு. அதுவும் டிசிஎஸ் நிறுவனத்தில் வேலை என்றால் அரசாங்க வேலைக்கு நிகராக கருதுவார்கள். அப்படி டிசிஎஸ் நிறுவனத்தில் கிடைத்த வேலை வாய்ப்பை நிராகரித்துவிட்டு, ஒரு நபர் அரிசி வியாபாரத்தில் இறங்கியுள்ளார். அதில் அவர் சாதித்தாரா இல்லை சறுக்கினாரா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

எக்ஸ் தளத்தில் அன்கித் பாண்டே என்பவர் தனது நண்பரின் சுய தொழில் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் எனது நண்பர் Tடிசிஎஸ்-இல் கிடைத்த வேலை வாய்ப்பை நிராகரித்தபோது, அனைவரும் மிகப்பெரிய தவறு என விமர்சித்தனர். அவர் பாதுகாப்பான கார்ப்பரேட் வேலையை விடுத்து அரிசி வியாபாரத்தில் இறங்கிய போது யாருமே அவரை ஆதரிக்கவில்லை ஆனால் இன்று அவர் ஆண்டுக்கு 25 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறார் என கூறியுள்ளார்.

TCS வேலையை நிராகரித்து அரிசி வியாபாரத்தில் குதித்த இளைஞர்: சாதித்தாரா? சறுக்கினாரா?

தனது நண்பர் இடைத்தரகர்களை தவிர்த்துவிட்டு, பல கிராமங்கள் மற்றும் மாநிலங்களில் உள்ள விவசாயிகளிடமிருந்து நேரடியாக அரிசியை கொள்முதல் செய்கிறார் என்றும் அப்படி கொள்முதல் செய்யப்படும் அரிசி சுத்தம் செய்யப்பட்டு, சொந்த பிராண்ட் பெயரில் பேக் செய்து விற்கிறார் என்றும் கூறுகிறார்.

Also Read

சுமார் 200 சில்லறை விற்பனை கடைகளுக்கு இவர் நேரடியாக அரிசியை விநியோகம் செய்கிறார் என்றும் அவரது வணிக மாடலையும் குறிப்பிட்டுள்ளார். அவர் ஒரு கிலோ அரிசியை விவசாயிகளிடம் இருந்து 35 ரூபாய்க்கு வாங்குகிறார். பேக்கிங் செலவு 3 ரூபாய் மற்றும் போக்குவரத்து செலவு 2 ரூபாய் என, ஒரு கிலோ அரிசிக்கு மொத்தம் 40 ரூபாய் செலவாகிறது.

இதை சில்லறை விற்பனையாளர்களுக்கு 50 ரூபாய்க்கு விற்கிறார். இதன் மூலம் ஒரு கிலோவிற்கு 10 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஒவ்வொரு மாதமும் சுமார் 20,000 கிலோ அரிசியை விநியோகம் செய்வதன் மூலம், ஆண்டுக்கு தோராயமாக 25 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறார் என கூறுகிறார்.

Recommended For You

இது மாதிரியான ஒரு தொழிலுக்காக நீங்க டிசிஎஸ் வேலையை விடுவீங்களா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பதிவு சமூக வலைதளங்களில் டிரெண்டாகியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். ஒரு நபர் பெரிய ரிஸ்க் தான் பெரிய லாபத்தையும் ஈட்டி தரும் என கூறியுள்ளார்.

சொந்தமாக செய்யும் தொழில்கள் கார்ப்பரேட் வேலையை விட சிறந்தது என ஒரு நபர் கருத்து தெரிவித்துள்ளார். அதே சமயம், கிடங்கு வாடகை மற்றும் பிற செயல்பாட்டு செலவுகள் குறித்தும் சிலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அன்கித், தனது நண்பருக்கே சொந்தமாக கிடங்கு இருப்பதால் வாடகை செலவு இல்லை என பதில் கூறியுள்ளார்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+