செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நம்முடைய பல்வேறு வேலைகளை எளிதாக்கியிருக்கிறது, ஆனால் இது பலருடைய வேலைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக டெக் துறையில் பல்வேறு பெரிய நிறுவனங்களில் தொடங்கி ஸ்டார்ட் அப்கள் வரை ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. இதற்கு பிரதான காரணமாக அமைந்திருக்கிறது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்.
ஜெனரேட்டிவ் ஏஐ: ஜெனரேட்டிவ் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி பெரும்பாலான நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கத்திற்கு முக்கியமான காரணமாக அமைந்திருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தங்கள் நிறுவனங்களில் கோடிங் பணிகளில் மனிதர்களை வேலையில் இருந்து நீக்கிவிட்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களையே பயன்படுத்துகின்றன. இது நுழைவு நிலையில் வேலைக்கு வருபவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

62,000 பேர் வேலை இழப்பு: ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேலை வாய்ப்பு சந்தையையே மாற்றி அமைத்து வருகிறது. 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் சுமார் 141 நிறுவனங்கள் 62,832 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி இருக்கின்றன. மைக்ரோசாப்ட், கூகுள், பேஸ்புக் என பெரிய நிறுவனங்களும் இதில் அடங்கும். இது தவிர நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுப்பதையும் நிறுத்தி வைத்திருக்கின்றன. இதனால் அண்மையில் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.
25% கோடிங் வேலைகள்: வேலைவாய்ப்பு சந்தையில் ஏஐ தொழில்நுட்பத்தின் தாக்கம் தொடர்பாக 2025 Pew Research Center survey என்ற தலைப்பில் அமெரிக்காவில் ஒரு ஆய்வறிக்கை வெளியாகி இருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் பெரிய டெக் நிறுவனங்கள் எல்லாம் தங்களின் 25% கோடிங் பணிகளை ஜெனரேட்டிவ் தொழில்நுட்பத்திடம்வழங்கி விட்டன, அதாவது இத்தனை நாட்களாக இந்த வேலையை செய்து வந்த மனிதர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டு அந்த பணியை தொழில்நுட்பங்கள் மூலம் இந்த நிறுவனங்கள் மேற்கொள்கின்றன என தெரிவிக்கிறது.
மென்பொருள் பொறியாளர்களுக்கு சிக்கல்: குறிப்பாக மென்பொருள் மேம்பாடு பணிகளில் ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகள் முக்கியமான இடத்தை பிடித்து விட்டன என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நிறுவனங்களுக்கு லாபமானதாக தெரிந்தாலும் ஊழியர்கள் தரப்பில் பார்க்கும் போது இது நுழைவுநிலையில் தொழில்நுட்ப துறைகளில் வேலை தேடி வருவோருக்கு பெரிய பிரச்சினையாக அமைந்திருக்கிறது.

ஏஐ புரட்சி: நாம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் புரட்சியில் இருக்கிறோம் , அத்தகைய புரட்சி செய்ய கூடிய தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றவன் என்ற முறையில் கூறுகிறேன் நாம் பெரிய மாற்றத்தை எதிர்கொண்டிருக்கிறோம் என கிரிஷ் கிராப் என்ற ஏஐ நிபுணர் தி அட்லாண்டிக் இணையதளத்திற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரிகள்: மென்பொருள் மேம்பாட்டில் ஏஐ பயன்பாடு அதிகரித்திருப்பதன் மூலம் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை பெரிய அளவில் மாற்றம் கண்டு இருக்கிறது. குறிப்பாக அண்மையின் பட்டப் படிப்பினை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு தேடி சந்தைக்குள் நுழைந்தவர்களுக்கு வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. குறிப்பாக 22 லிருந்து 27 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் வேலை வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கின்றனர் என அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.
கூகுள், மைக்ரோசாப்ட் அறிவிப்பு: இவ்வாறு வேலைவாய்ப்பு கிடைக்காமல் தவிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கணினி பாடத்தை எடுத்துப் படித்தவர்கள் என அந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் பட்டப் படிப்பை முடித்து வேலை வாய்ப்பு கிடைக்காமல் இருப்பவர்கள் எண்ணிக்கை 8 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது. கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்கள் தங்களின் கோடிங் பணிகளுக்கு ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாக வெளிப்படையாகவே அறிவித்துவிட்டன.
அமேசான் நிறுவனம் எச்சரிக்கை: அண்மையில் அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எதிர்வரும் ஆண்டுகளில் நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை குறையும் ஏஐ தொழில்நுட்பம் அதற்கு காரணமாக இருக்கும் என கூறி இருந்தார். தற்போது இத்தனை பேர் செய்யக் கூடிய வேலையை எதிர்காலத்தில் ஒரு சிலர் மட்டுமே இருந்தால் செய்து விட முடியும் , அதற்கு ஏஐ-இன் செயல்திறன் முக்கிய காரணம் என அவர் கூறுகின்றார்.எனவே ஊழியர்கள் இந்த துறையில் தங்களை தக்க வைத்து கொள்ள செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் அது தொடர்பான அறிவினை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும் என கூறி இருந்தார்.
மாறி வரும் வேலைவாய்ப்பு சந்தை: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் மென்பொருள் பொறியாளர்களின் பணியே அதிகம் பாதிக்கப்படும் என 2025 Pew Research Center ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வருகை ஏற்கனவே இந்த துறையில் வேலை வாய்ப்பு பெற்று இருப்பவர்கள் மட்டுமில்லாமல் இந்த பிரிவை பாடமாக எடுத்து படித்த மாணவர்களுக்கும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்தவர்கள் பலர் இருக்கின்றனர் ஆனால் அவர்களுக்கு ஏற்ற எண்ணிக்கையில் வேலைகள் கிடையாது ஏற்கனவே இருக்கும் வேலைகளும் குறைந்து வருகின்றன.
பெண்களுக்கே அதிக பாதிப்பு: ஏஐ தொழில்நுட்பம் வைட் காலர் வேலைகளை தான் அதிகம் பறிக்கிறது. அண்மையில் ஐநா வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையில் உலக அளவில் வைட் காலர் பணிகளில் அதிகம் பெண்களே இருக்கின்றனர், ஏஐ வருகை வைட் காலர் பணிகளை மட்டுமல்ல பெண்களின் வேலைவாய்ப்பையும் பறிக்கிறது இது எதிர்காலத்தில் நம் பணி சூழல்களை பாலின சமத்துவம் அற்றதாக மாற்றி விடும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.
அறிவை வளர்த்து கொள்வது நல்லது: மென்பொருள் பொறியாளர்கள் தவிர ஹெச்ஆர் பணிகளில் இருப்பவர்கள், பிபிஓ வேலைகளில் இருப்பவர்கள், வாடிக்கையாளர் சேவை பணிகளில் இருப்பவர்கள் என பல துறைகளிலும் மனிதர்களின் வேலைகளை ஏஐ பறித்து வருகிறது. இருந்தாலும் ஏஐ வருகையால் யாரும், அச்சம் கொள்ள கூடாது ஏஐ மனிதர்களின் வேலைகளை பறிக்காது, ஏஐ தொழில்நுட்பம் தெரிந்த மனிதர்களே மனிதர்களின் வேலையை பறிப்பார்கள் என ஒரு சாரார் கூறி வருகின்றனர். ஒரு சிலர் ஏஐ வளர்ச்சி அதற்கேற்ற வகையில் புதிய வேலைகளை உருவாக்கும் என கூறுகின்றனர்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

இந்திய ஐடி பங்குகளை கைக்கழுவும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! எல்லாம் ஏஐ செய்யும் வேலை!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications