அமெரிக்கா: ஐடி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் ஊதியத்துடன் வேலை கிடைக்கிறது. ஆனால் அந்த வேலைக்கு உத்தரவாதம் இல்லை. ஏனெனில் ஐடி நிறுவனங்கள் திடீரென தங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுகின்றன.
நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களை திடீரென பணியிலிருந்து நீக்கும் , அவர்கள் அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலைக்கு சென்றுவிடுகின்றனர். நல்ல ஊதியம் அளித்து வந்த ஒரு வேலையிலிருந்து நீக்கப்படும் போது அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் அப்படியே தேங்கி விடுகின்றனர். ஆனால் அப்படி ஒரு பணி நீக்கம் தான் இந்த பெண்மணியை பல உயரங்களுக்கு கொண்டு சென்றுள்ளது.

இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்தான் பிரியங்கா நாயக். இவர் அமெரிக்காவில் ஐடி பிரிவில் கல்வி பயின்றவர். தற்போது விருது பெற்ற சமையல் கலைஞராக மாறியிருக்கிறார் .இதற்கு முன்னதாக தகவல் தொழில்நுட்பம் தான் இவருடைய தொழிலாக இருந்தது. முன்பு டிவிட்டர் என அறியப்பட்ட தற்போது எக்ஸ் என அழைக்கப்படும் எலான் மஸ்கிற்கு சொந்தமான நிறுவனத்தில் மென்பொறியாளராக பணி புரிந்தவர்.
அதற்கு முன்பு ப்ளூம்பெர்க் உள்ளிட்ட பல்வேறு பெரு நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தவர்தான் பிரியங்கா. கடந்த 2022 ஆம் ஆண்டு எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம் இவரை திடீரென வேலையில் இருந்து நீக்கியது.
ஐடி துறையில் வல்லுனராக இருக்கும் இவர் வேறு நிறுவனங்களுக்கு சென்று இருந்தால் அதைவிட கூடுதல் ஊதியத்தில் வேலை கிடைத்திருக்கும். ஆனால் ஐடி வேலையை விடுத்து முழுக்க முழுக்க புதிய ஒரு தொழிலில் கால் பதித்தார். அதுதான் சமையல் கலைஞர்.
சமையல் மீது தனக்கு அதிக ஆர்வம் இருந்ததால் சமையலில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்து தொடங்கினார். இதனைத் தொடர்ந்து சைவம் சார்ந்த உணவுகளை வித்தியாசமான முறையில் தயாரிக்க தொடங்கினார் . செஃப்பிரியங்கா என்ற ஒரு சமூக ஊடகப் பக்கத்தை தொடங்கினார். தொடர்ந்து இவர் பல்வேறு சமையலையும் செய்து அந்த வீடியோவை பகிர்ந்தார்.
அது மட்டுமில்லாமல் பல்வேறு பிரபலங்களையும் தன்னுடைய வீடியோவில் பங்கேற்க செய்தார். இதன் மூலம் இவர் இன்னும் பிரபலமானார். தற்போது உலகிலேயே சமூகவலைதளங்களில் பலர் பின்பற்றி வரக்கூடிய ஒரு சமையல் கலைஞர் என்ற பெருமை இவருக்கு கிடைத்துள்ளது.
இவர் தன்னுடைய சமையல் வீடியோக்கள் மற்றும் அதன் மூலம் கிடைக்கும் பிரமோஷன் மூலம் மட்டும் பல லட்சங்களை சம்பாதித்து வருகிறார்.
அண்மையில் அமெரிக்க அதிபர் மாளிகை என அறியப்படும் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிடத் தகுந்த 600 இந்திய அமெரிக்கர்கள் மட்டுமே அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் செஃப் பிரியங்காவும் ஒருவர்.
Story written by: Devika
More From GoodReturns

மீண்டும் மீண்டுமா..? டெக் நிறுவனங்களை கேள்வி கேட்க ஆளே இல்லையா? அமேசான் எடுத்த முடிவால் அதிர்ச்சி

உழைப்பை யாரும் மதிக்கவில்லை!கார்ப்பரேட் வெற்றிக்கு அதிர்ஷ்டம் முக்கியமா- மைக்ரோசாப்ட் ஊழியர் வேதனை?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications