இந்தியாவில் கார் விற்பனை சந்தை என்பது நகைக் கடை சந்தை போல், ரியல் எஸ்டேட் சந்தை போல் பெரிய அளவிலான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது.
பட்ஜெட் கார்களையும், ஹேட்ச்பேக் கார்களையும் அதிகம் வாங்கி வந்த இந்தியச் சந்தையில் கடந்த 5 வருடமாக எஸ்யூவி கார்களுக்கான மோகம் அதிகரித்து அனைத்து கார் கம்பெனிகளும் SUV கார்களை மட்டுமே தயாரிக்கும் போக்கில் இறங்கியது.

இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனால் கலப்பு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக மாற்று எரிபொருளில் இயங்கும் கார்களுக்கான டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இதனால் அடுத்த சில வருடத்தில் ஹைப்ரிட் கார்களும், சிஎன்ஜி, EV கார்களும் பிரதானமாக மாறிவிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இவை அனைத்தும் மாஸ் மார்கெட் பிரிவில் நடக்கும் மாற்றங்களாகும், இந்த மாஸ் மார்கெட்டுக்கு பின்னால் ஆடம்பர கார்கள், ப்ரீமியம் கார்கள் என்ற தனி உலகம் உள்ளது.
இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் ஆடம்பர கார் சந்தையும், ப்ரீமியம் கார் சந்தையும் யாரும் எதிர்பார்க்காத வகையில் வளர்ச்சியை அடைந்துள்ளது, குறிப்பாகத் தென்னிந்தியாவில் ஆடம்பர கார்களின் விற்பனை பெரியளவில் உயர்ந்துள்ளது.
இதன் விளைவாக அனைத்து முன்னணி ஆடம்பர கார் பிராண்டுகளும் சென்னையில் அடுத்தடுத்து கார் ஷோரூம்-களை திறக்க துவங்கியுள்ளது. இதில் புதுவரவாக ஃபெராரி சென்னையில் தனது முதல் மற்றும் அதிகாரப்பூர்வமான ஷோரூம் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஃபெராரி நிறுவனம் இந்தியாவில் 2 ஷோரும்-களை சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் சென்னை டீலர்ஷிப்-ஐ குன் குரூப் பெற்றுள்ளது, அகமதாபாத் டீலர்ஷிப்-ஐ நவ்நீத் குரூப் கைப்பற்றியுள்ளது.
ஃபெராரி தற்போது இந்தியாவில் மும்பை, டெல்லி, பெங்களூர் ஆகிய நகரங்களில் இயங்கி வரும் வேளையில் சென்னையில் புதிய ஷோரூம் திறப்பது என்பது மிகவும் முக்கியமான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
ஃபெராரி இந்தியாவில் தனது 5 சீட்டர் கொண்ட எலக்ட்ரிக காரான Luce EV அறிமுகம் செய்த கையோடு புது ஷோரூம் திறப்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
செப்டம்பர் மாதத்தில் தான் சென்னையில் ராயப்பேட்டையில் இருக்கும் எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் டெஸ்லா எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் திறக்கப்பட்டது. இது இந்தியாவில் 6வது, தென்னிந்தியாவில் 3வது எக்ஸ்பீரியன்ஸ் சென்டராகும்.
இதை தொடர்ந்து அக்டோபர் 15ஆம் தேதி GST சாலையில் குன் எக்ஸ்குளூசிவ் தனது ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூம்-ஐ திறந்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது ஃபெராரி சென்னைக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications

