இந்தியாவின் சிறிய நகரத்தில் இருந்து வந்த ஓர் இளைஞர், தான் வாங்கிய முதல் சம்பளமான ரூ.9,500-இல் இருந்து ரூ.60 லட்சமாக உயர்த்தியது எப்படி என்பதைத்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம்.
நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த 29 வயது இளைஞர், தனது பள்ளி காலங்களில் 2 படுக்கை அறை கொண்ட வீட்டில் வளர்ந்து, தனது அண்ணனின் பழைய உடைகளை அணிந்து கொண்டு, மதிய உணவைக் கூட பழைய சிப்ஸ் பாக்கெட்டுகளில் சுற்றி எடுத்துச் கொண்டு சென்றுள்ளார். பின்னர், கல்லூரியில் படித்த இவருக்கு, தனது வாழ்க்கை தொடக்கத்திற்கான வாய்ப்பு கிடைத்தது. ஒரு பிரெஞ்சு பன்னாட்டு நிறுவனத்தில் அந்த இளைஞருக்கு வேலை கிடைத்தது. அப்போது அவரது ஆண்டு சம்பளம் ரூ.3.15 லட்சம் ஆகும்.

அப்போது, அவரது கையில் வாங்கிய முதல் மாத சம்பளம் வெறும் ரூ.9,500 மட்டுமே. பின்னர், அடுத்த ஆண்டில் அவரது மாத சம்பளம் ரூ.30,000 ஆக உயர்ந்தது. ஆனாலும், அவரது கடின உழைப்பும், அர்ப்பணிப்பும் மேலாளரால் பெரிதாக கவனிக்கப்படவில்லை. இதனால், அவருக்கு கிடைக்க வேண்டிய பதவி உயர்வும், சம்பள உயர்வும் கைநழுவிப் போயின.
எல்லோருக்கும் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு கிடைத்துவிடாது என்று அந்த மேலாளர் பகிரங்கமாக கூறி அவமானப்படுத்தியபோது, அந்த இளைஞர் ஒரு துணிச்சலான முடிவை எடுத்தார். இதையடுத்து, உடனே அந்த வேலையை ராஜினாமா செய்தார்.
பின்னர், கொரோனா பெருந்தொற்று அவரது வாழ்க்கையை திருப்பிப் போட்டது. பெற்றோரின் கடுமையான விமர்சனத்தையும், உடனடி வேலை வாய்ப்புகள் இல்லாத நிலையையும் அவர் எதிர்கொண்டார். 3 மாதங்களுக்கும் மேலாக வேலைகளுக்கும், MBA திட்டங்களுக்கும் விண்ணப்பித்துத் தோல்வியையே சந்தித்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக லிங்க்ட்இன் (LinkedIn) மூலம் கிடைத்த ஒரு செய்தி, அவரது வாழ்க்கையை மாற்றியது. அவரது பழைய ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், அப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த நிறுவனத்தில் நேர்காணல் நடத்துபவராக இருந்தார். அவர், அந்த இளைஞரிடம் பேசியுள்ளார். பின்னர், அவருக்கு மாதம் ரூ.45,000 சம்பளத்துடன் வேலை கிடைத்தது.
அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு கடிதம் வருவதற்கு முன்பே அவர் வேலை செய்ய தொடங்கிவிட்டார். அவர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட இருந்த சமயத்தில், மற்றொரு அழைப்பும் வந்தது. அது, ஃபார்ச்சூன் 500 பட்டியலில் உள்ள ஒரு பெரிய நிறுவனம் ஆகும்.
பின்னர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தொடர்ச்சியாக பல நேர்காணல்களை முடித்தார். நேர்காணல் செய்த மேலாளர், அவரை பணியமர்த்த முடிவு செய்தார். இதன் மூலம் 3 நாட்களுக்குள், அவரது முந்தைய வருமானத்தைவிட 5 மடங்கு அதிகமாக, ஆண்டுக்கு ரூ.14 லட்சம் சம்பளத்துடன் கூடிய வேலை கிடைத்தது.
பின்னர், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், அவருக்கு சில உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட்டது. இருப்பினும், அவர் அதைத் தாண்டி உழைத்தார். இதன் விளைவாக பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெற்று அவரின் ஆண்டு வருமானம் ரூ.22.5 லட்சமாக உயர்ந்தது. வார இறுதி நாட்களில் தாமாக முன்வந்து வேலை செய்ததால் கூடுதலாக ரூ.24,000 கிடைத்தது.
3 ஆண்டுகள் நீடித்த இந்த விடாமுயற்சிக்குப் பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு 'யூனிகார்ன்' நிறுவனத்தில் இருந்து ஆள்சேர்ப்பு அதிகாரி ஒருவர் லிங்க்ட்இன் மூலம் அந்த இளைஞர் தொடர்பு கொண்டார். பின்னர், அந்நிறுவனத்தின் நேர்காணலுக்கு இவர் சென்றார்.
6 சுற்று நேர்காணல்களை அவர் வெற்றிகரமாக முடித்த பிறகு, அவருக்கு கிடைத்த சலுகை வாயடைக்க வைத்தது. அடிப்படை ஊதியமாக ரூ.55 லட்சம் மற்றும் நிறுவனப் பங்குகளாக ரூ.5 லட்சம் மதிப்புடன் அவருக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. தற்போது அந்தப் பங்குகள் மதிப்பில் உயர்ந்து, அவரது மொத்த ஆண்டு சம்பவம் கிட்டத்தட்ட ரூ.60 லட்சமாக உயர்ந்துள்ளது.
எனவே, ஒருவர் எந்த பின்னணியில் இருந்து வந்தாலும், திறமையும் விடாமுயற்சியும் இருந்தால், தடைகளை தகர்த்தெறிந்து முன்னேற முடியும் என்பதை இந்த இளைஞரின் கதை எடுத்துக் காட்டுகிறது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications