சென்னை: சௌகரியமான பயணம், குறைவான கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் வெளியூர் செல்வதற்கும் வெளி மாநிலங்களுக்கு செல்வதற்கும் ரயில்களை தான் பயன்படுத்துகின்றனர். திடீரென வெளியூர் செல்ல வேண்டிய சூழலுக்கு ஆளாகும் நபர்களுக்காகவே தட்கல் ரயில் டிக்கெட் முறை நடைமுறையில் இருக்கிறது.
தட்கல் டிக்கெட்: நாளைய தினம் பயணம் செய்ய வேண்டி இருப்பவர்கள் தட்கல் டிக்கெட் முறையில் இன்று ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏசி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கும், ஏசி அல்லாத வகுப்புகளுக்கு 11 மணிக்கும் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ஆனால் தட்கல் டிக்கெட் புக்கிங் நடைமுறையில் பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாகவும் முகவர்களே அனைத்து டிக்கெட்டுகளையும் முன்பதிவு செய்து விடுகின்றனர் என்றும் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

முகவர்களின் ஆதிக்கம்: தட்கல் டிக்கெட் பதிவு தொடங்கி 1 நிமிடத்திற்குள்ளாகவே அனைத்துமே விற்று விடுகின்றன , இதனால் சாதாரணமான மக்கள் தங்களுடைய தனிப்பட்ட கணக்கு வாயிலாக தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியாமல் தவிக்கின்றனர் இந்திய ரயில்வே துறைக்கு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. எனவே தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் பல்வேறு மாற்றங்களை இந்திய ரயில்வே கொண்டு வந்தது.
ஆதார் இணைப்பு கட்டாயம்: ஐஆர்சிடிசி கணக்கு வைத்திருப்பவர்கள் அந்த கணக்குடன் தங்களுடைய ஆதார் எண்ணை இணைத்து, ஓடிபி அங்கீகாரம் செய்து வைத்திருக்க வேண்டும் . அப்படி இருந்தால் மட்டுமே அவர்களால் தங்களுடைய கணக்கு வாயிலாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நடைமுறை ஜூலை 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வந்துவிட்டது . தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் அரை மணி நேரத்திற்கு பொதுமக்கள் மட்டுமே டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும் , அரை மணி நேரத்திற்கு பின்னர் தான் முகவர்களால் தட்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்ய முடியும் என்ற விதிமுறையும் ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறையில் இருக்கிறது.
இன்று முதல் புதிய விதி அமல்: இந்த சூழலில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடிகளை தடுப்பதற்காக மேலும் ஒரு புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. இதன்படி தக்கல் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யும்போது அந்த குறிப்பிட்ட பயணியின் ஆதார் எண், ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் ஓடிபி ஆகியவை கட்டாயமாக்கப்பட்டுள்ளன. பயணிகள் ஐஆர்சிடிசி செயலி வாயிலாக தட்கல் டிக்கெட்டினை முன்பதிவு செய்தாலும், நேரடியாக ரயில் நிலையங்களில் சென்று ஆஃப்லைன் முறையில் டிக்கெட் முன்பதிவு செய்தாலும் , அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்தாலும் ஆதார் எண் மற்றும் ஓடிபி அங்கீகாரம் என்பது இன்று முதல் கட்டாயமாகியுள்ளது.
ஆதார் எண், ஓடிபி அங்கீகாரம் கட்டாயம்: ஆதார் ஓடிபி அங்கீகார முறை முடிந்தால் மட்டுமே தட்கல் டிக்கெட் முன்பதிவு ஆகும் . எனவே பயணிகள் தாங்களாகவே சொந்தமாக தட்கல் டிக்கெடுகளை முன்பதிவு செய்தாலும் சரி அல்லது முகவர்கள் வாயிலாக செய்தாலும் சரி அல்லது நேரடியாக ரயில் நிலையத்தில் சென்று முன்பதிவு செய்தாலும் அந்த சமயத்தில் உங்களுடைய ஆதார் எண் ,ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகிய இரண்டையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.
ஓடிபி அங்கீகாரம் செய்தால் மட்டுமே டிக்கெட்: டிக்கெட் முன்பதிவின் போது உங்களுடைய பெயர், வயது பயணம் செய்யும் இடங்கள் ஆகிய விவரங்களை உள்ளிட்ட உடன் ஆதார் எண் மற்றும் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் ஆகியவை கேட்கப்படும். அவற்றை உள்ளீடு செய்தால் மொபைல் எண்ணுக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். அந்த ஓடிபியை உள்ளீடு செய்தால் மட்டுமே உங்களுக்கான டிக்கெட் புக் செய்யப்படும்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications