நாடு முழுவதும் UPI மூலம் பரிவர்த்தனை நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு, பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் பயனர்களின் அணுமுறையை எளிதாக்கும் வகையில் அவ்வபோது பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது ஒரு மாற்றம் தான் கொண்டு வரப்பட்டுள்ளது. இனிமேல் பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து யுபிஐ மூலம் ரூ.100ஆக இருந்தாலும் சரி, ரூ.500ஆக இருந்தாலும் சரி புது விதிகள் பின்பற்றப்படும். இதுகுறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அதாவது, கூகுள் பே (GPay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற ஒட்டுமொத்த பேமெண்ட் செயலிகள் மட்டுமின்றி, பணத்தை அனுப்பும் பேங்குகள் மற்றும் பணத்தை பெறும் பேங்குகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, யுபிஐ பணப்பரிவர்த்தனை ரெஸ்பான்ஸ் டைம் (UPI Transactions Response Time) தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனவே இனி, முன்பு இருந்ததை விட அதிவேகத்தில் பணம் அனுப்ப முடியும். அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருக்கும் பணத்தை யுபிஐ செயலிகள் மூலம் அனுபும்போது, அந்த பரிவர்த்தனையை எவ்வளவு நேரத்தில் முடிக்கப்பட வேண்டும் என்று தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) டைம் லிமிட்டை வைத்துள்ளது. ஜூன் 16ஆம் தேதிக்கு முன்பு வரை பணத்தை அனுப்புதல், பணம் பெறுவதல் ஆகியவற்றை யுபிஐ செயலிகள் மூலம் செய்து முடிக்க 30 நொடிகள் ஆனது. ஆனால், தற்போது இந்த டைம் 15 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், இனி அதி விரைவில் யுபிஐ செயலி மூலம் மற்றவர்களுக்கு பணம் அனுப்ப முடியும்.
அதே நேரத்தில் பணத்தை பெற்ற பிறகோ அல்லது அனுப்பிய பிறகோ யுபிஐ செயலிகள் மூலம் பரிவர்த்தனை ஸ்டேட்டஸ் செக் (Transaction Status Check) செய்வதற்கான ரெஸ்பான்ஸ் டைமிங், முன்னதாக 30 நொடிகளாக இருந்தது. ஆனால், அது இன்று முதல் 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பணத்தை அனுப்பிய பிறகு தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ரிவர்ஸ் செய்யப்பட்டால், அந்த தொகை மீண்டும் உங்களுக்கு வருவதற்கான நேரம் 30 நொடிகளாக இருந்தது. ஆனால், இதுவும் தற்போது 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
எனவே, ரிவர்ஸ் செய்யப்பட்ட தொகையும், அதிவேகத்தில் உங்கள் அக்கவுண்ட்டிற்கு திருப்பி அனுப்பப்படும். மேலும், யுபிஐ செயலிகள் மூலம் மொபைல் எண் அல்லாமல், அக்கவுண்ட் நம்பர், IFSC கோட் போன்றவற்றின் மூலம் பணத்தை அனுப்பும்போதோ அல்லது கலெக்ட் செய்யும்போதோ அதை சரிபார்ப்பு செய்ய 15 நொடிகளில் இருந்த நேரம், தற்போது 10 நொடிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் புதிய யுபிஐ விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதுவும் லிமிட் அடிப்படையில் வரவுள்ளது. பேலன்ஸ் சரிபார்ப்பு ஆனது 24 மணி நேரத்துக்கு 50 முறையாக மாற்றப்பட உள்ளது. எனவே, ஒரு யுபிஐ செயலி மூலம் ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே பேலன்ஸ் சரிபார்க்க முடியும். இது போன்ற ஏராளமான விதிகள் ஆகஸ்ட் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. இதனால், UPI பேமெண்ட்களின்போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகள் குறையும் என்றும் எந்த தடையும் இன்றி, பரிவர்த்தனைகளை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டை மேலும் மேம்படுத்த, NPCI (National Payments Corporation of India), யுபிஐ பரிவர்த்தனைகளுக்கான பீக் நேரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை வரையும் ஆகும். இந்நேரங்களில் பரிவர்த்தனை அளவுகள் அதிகமாக இருப்பதால், அனைத்து வங்கிகளும் மற்றும் பேமென்ட் பிளாட்ஃபாரங்களும் இந்த புதிய நடவடிக்கைகளை ஜூலை 31, 2025-க்குள் அமல்படுத்த வேண்டும் என NPCI உத்தரவு பிறப்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications