பாரம்பரிய வணிகத்தை உலக அளவில் கொண்டு செல்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அதை எல்லோராலும் செய்து விட முடியாது. ஆனால் இதை தகர்த்தெறியும் வகையில் ஹர்ஷ் மரிவாலா என்ற நபர் தனது குடும்பத்தின் மசாலா மற்றும் சமையல் எண்ணெய் வணிகத்தை ஒரு மாபெரும் நுகர்வோர் பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனமாக மாற்றியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நிலவரப்படி நிறுவனத்தின் மதிப்பு 96.5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்புக்கு தோராயமாக ரூ. 9,650 கொடியாகும்.
1862-ஆம் ஆண்டில் அவரது தாத்தா வல்லபதாஸ் வாசஞ்சி, கட்ச்சிலிருந்து மும்பைக்கு வந்து மிளகு வர்த்தகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மரிவாலா என்றால் குஜராத் மொழியில் மிளகு என்று பொருள். அதிலிருந்து 100 ஆண்டுகளுக்குப் பிறகு.. அதாவது 1948-ஆம் ஆண்டு ஹர்ஷ் மரிவாலாவின் தந்தையான சரண் தாஸ் தனது மூன்று சகோதரர்களுடன் இணைந்து பாம்பே ஆயில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தை நிறுவினார்.

நுகர்வோர் பொருட்கள் துறையில் ஹர்ஷ் மரிவாலாவின் எதிர்கால வெற்றிக்கு இந்த நிறுவனம் அடித்தளம் அமைத்தது. அதன் பிறகு ஹர்ஷ் 1971-ஆம் ஆண்டில் தனது குடும்ப வணிகத்தில் ஈடுபடத் தொடங்கினார். 1990-ஆம் ஆண்டில் மரிகோ என்ற நிறுவனத்தை நிறுவினார். அவருடைய தலைமையின் கீழ் தற்போது ஒரு முன்னணி எப்எம்சிஜி நிறுவனமாக மரிகோ செயல்பட்டு வருகிறது.
சமையல் எண்ணைகளுக்கு அப்பால் முடி பராமரிப்பு, அழகு சாதன பொருட்கள், சுகாதாரம், உணவுப் பொருட்கள், தோல் பராமரிப்பு தயாரிப்புகளை தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டுகளான பாராசூட், சஃபோலா, லிவோன் மற்றும் செட் வெட் ஆகியவை மக்கள் மத்தியில் பிரபலமான பிராண்டுகள் ஆகும்.
மரிகோவைத் தாண்டி, ஹர்ஷ் மரிவாலா தோல் பராமரிப்பு கிளினிக்கான கயா லிமிடெட் மற்றும் தொழில்முனைவோருக்கான கற்றல் தளமான அசென்ட் ஃபவுண்டேஷன் ஆகியவற்றையும் நிறுவியுள்ளார். கூடுதலாக, அவர் மரிகோ இன்னோவேஷன் ஃபவுண்டேஷன், மரிவாலா ஹெல்த் இனிஷியேட்டிவ் மற்றும் ஷார்ப் வென்ச்சர்ஸ் ஆகியவற்றை நிறுவியுள்ளார்.
மரிவாலா அர்ச்சனாவை மணந்துள்ளார். ராஜ்வி மற்றும் ரிஷப் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவர்களும் குடும்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ராஜ்வி மாரிகோ ஹெல்த் இனிஷியேட்டிவ் நிர்வாகத்தை கவனித்து வருகிறார். ரிஷப் சோப் ஓபரா என் மோர் என்ற நிறுவனத்தை நிறுவியுள்ளார்.
FMCG துறையில் ஒரு அழியாத பெயரை மரிக்கோ நிறுவனம் பெற்றுள்ளது. பிப்ரவரி 2025 நிலவரப்படி, மாரிகோவின் சந்தை மூலதனம் ரூ.808.72 பில்லியனாக உள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் உலகின் 1792-வது மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மரிக்கோ தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications