நம்பமுடியாத இடத்தில் யாருமே கண்டுபிடிக்க முடியாத செல்வத்தைத் தேடி கண்டுபிடித்துள்ளார் ஒருவர்! அதுவும் எங்கே தெரியுமா? சிட்னியின் குப்பைக் கிடங்கில் தான். இந்தக் கட்டுரையில் லியோனார்டோ அர்பானோ என்ற மனிதர் எப்படி குப்பைகளில் இருந்து பொருட்களைக் கண்டுபிடித்து, அதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார் என்பதைப் பற்றி காண்போம்.
சில நேரங்களில், சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் தேடி வரும் என்று கூறுவார்கள். அதற்கு சான்றாய் லியோனார்டோ அர்பனோ என்ற 30 வயதான நபர் சிட்னியின் குப்பை குவியல்களில் இருக்கும் பொருட்களை வைத்து $1,00,000 ஆஸ்திரேலியா டாலர்களை சம்பாதித்துள்ளார். இது இந்திய மதிப்பிற்கு ரூபாய் ரூ. 56.20 லட்சம்.

தினமும் காலையில், அர்பானோ, தனது சைக்கிள் அல்லது காரில் சென்று சிட்னி நகரின் தெருக்களில் தூக்கி எறியப்பட்ட பொருட்களைத் தேடிச் செல்கிறார். ஆஸ்திரேலியாவில், உள்ளூர் கவுன்சில்கள் ஆண்டுக்கு பலமுறை குப்பைகளை அகற்றும் சேவைகளை அங்குள்ள மக்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.
இதனால் குடியிருப்பாளர்கள் பர்னிச்சர்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற பெரிய பொருட்களை தங்களுக்கு தேவை இல்லை என்றால் எறிந்து விடுகின்றனர். இதில் அடிக்கடி அர்பனோ மதிப்புமிக்க பொருள்களைக் கண்டெடுக்கிறார். இந்த குவியல்களில் சில நேரம் ஃபெண்டி பைகள், காபி இயந்திரங்கள், தங்க நகைகள் மற்றும் ரொக்கம் போன்றவை அர்பனோவிற்கு கிடைக்கிறது.
புதிய கேஜெட் தேவைப்பட்டால், பழைய கேஜெட்டை எறிந்துவிட்டு புதிய ஒன்றை வாங்குகிறார்கள். ஏனென்றால் பேட்டரி அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற ஒரு காரணத்திற்காக மட்டுமே அப்படி செய்கிறார்கள். பல பொருட்களுக்கு சிறிய சீரமைப்பு அல்லது ஓரிரு பழுது நீக்க வேலைகள் செய்தாலே அவற்றை விற்பனை செய்ய முடியும் என்று அர்பனோ கூறியுள்ளார்.
அர்பனோ தனக்கு கிடைக்கும் பொருட்களை தேர்வு செய்து தேவையானவற்றை வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை பேஸ்புக், மார்க்கெட் பிளேஸ் போன்ற தளங்களில் விற்பனை செய்கிறார். இட வசதி குறைவாக இருப்பதால், ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்குள் பொருட்களை விற்பனை செய்ய முயற்சிக்கிறார். அவை விற்பனை ஆகவில்லை என்றால், புதிய பொருட்களுக்கு இடம் கொடுப்பதற்காக அவற்றை விற்றுவிடுகிறார்.
சமீபத்தில், அவர் ஒரு சிறிய ஃபெண்டி பையை சுமார் $200க்கு விற்பனை செய்துள்ளார். இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 16,000. 50-க்கும் மேற்பட்ட TV-கள், 30 ஃப்ரிட்ஜ்கள், 20+ வாஷிங் மெஷின்கள், 50 கம்ப்யூட்டர்கள்/லேப்டாப்கள், 15 படுக்கைகள், 150+ தொட்டிகள் மற்றும் செடிகள், 100+ விளக்குகள் மற்றும் அலங்கார ஓவியங்கள், மற்றும் $849 ரொக்கம் ஆகியவை அவரது கடந்த ஆண்டு கண்டுபிடிப்புகள்.
அர்பானோவின் கதை நமக்கு ஒரு பாடத்தை கற்றுத் தருகிறது. அது என்னவென்றால் எந்த ஒரு தேவையற்ற பொருட்களை எரிவதற்கு முன்பும், அவற்றை மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்த முடியுமா? என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளும் முக்கியத்துவத்தை இவருடைய கதை நமக்கு கற்றுத் தருகிறது.


Click it and Unblock the Notifications