சில சமயங்களில் வாழ்க்கையில் நமக்கு கிடைக்கக்கூடிய நிராகரிப்புகள் நம்மை இன்னும் தீவிரமாக செயல்பட தொடங்க வைக்கும். அந்த வகையில் உலகில் பெரிய அளவில் வளர்ந்து நிற்கக்கூடிய பலரும் வாழ்க்கையில் பல்வேறு நிராகரிப்புகளை சந்தித்து அதன் மூலம் வளர்ந்து ஆளானவர்கள் தான்.
400 இடங்களில் நிராகரிப்பு:உலகின் முன்னணி சைபர் செக்யூரிட்டி நிறுவனமான பாலோ ஆல்டோ நெட்வொர்க்-இன் தலைமை செயல் அதிகாரியாக இருக்கக்கூடிய நிகேஷ் அரோரா நான் 400 இடங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவன் என கூறியுள்ளார். ஒரு இணையதளத்திற்கு பேட்டி அளித்துள்ள அவர், வாழ்க்கை நம்மை நிராகரிக்கும் போதெல்லாம் நாம் இன்னும் வலுவாக எழுந்து வர வேண்டும் என கூறியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் இருந்து அமெரிக்கா: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் பிறந்தவர் தான் அரோரா. இவர் ஐஐடியில் தன்னுடைய பட்டப் படிப்பை முடித்தார் இதனை அடுத்து அமெரிக்காவில் முதுநிலை படிப்பை முடித்தார். மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும் என எண்ணிய போது தன்னிடம் 100 டாலர்கள் மட்டுமே இருந்தன என தெரிவித்திருக்கும் அரோரா விண்ணப்ப கட்டணம் இல்லாத நிறுவனங்களாக தேடி தேடி படிப்புக்காக விண்ணப்பித்தேன் என கூறுகிறார்.
அமெரிக்காவில் படிப்பு: அப்பொழுது அவருக்கு அமெரிக்காவின் வடகிழக்கு பல்கலைக்கழகத்தில் ஸ்காலர்ஷிப் உடன் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான வாய்ப்பு கிடைத்ததாகவும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் அமெரிக்கா சென்றதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். தன்னுடைய மேற்படிப்பை முடித்த பிறகு பல்வேறு நிறுவனங்களில் வேலை தேடியதாகவும் கிட்டத்தட்ட 400 நிறுவனங்களில் வேலைக்கு விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.
முதல் நிறுவனத்திலேயே அபார வளர்ச்சி:இருந்தாலும் நான் என்னுடைய நம்பிக்கையை இழக்கவில்லை என தெரிவித்திருக்கும் அவர் முதன்முறையாக தனக்கு ஃபிடெலிட்டி இன்வெஸ்ட்மெண்ட் என்ற முதலீட்டு நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைத்தது. அந்த நிறுவனத்தில் நான் படிப்படியாக முன்னேறி நிறுவனத்தின் துணைத் தலைவர் பதவி வரை உயர்வு பெற்றேன் என குறிப்பிட்டு இருக்கிறார். நிதி துறைக்கு நீங்கள் பொருத்தமானவர் அல்ல உங்களுக்கு இந்த வேலை சரிப்பட்டு வராது என தொடர்ந்து பல இடங்களில் என்னை அவமானப்படுத்தினர், அவற்றையெல்லாம் கடந்து தான் 2014 ஆம் ஆண்டு கூகுளில் வேலைக்கு சென்றதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்.
கூகுளில் வேலை: கூகுளில் தனக்கு கிடைத்த அனுபவம் மிகப்பெரியது என குறிப்பிட்டு இருக்கும் அவர் கூகுளில் இருந்து பின்னர் சாஃப்ட் பேங்க் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அங்கே இரண்டரை ஆண்டு காலம் பணிபுரிந்த அவர் 2018 ஆம் ஆண்டு பாலோ ஆல்டோ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியக பொறுப்பேற்ற 2018ஆம் ஆண்டில் நிறுவனத்தின் மதிப்பு 18 பில்லியன் டாலர் தான் தற்போது அதன் மதிப்பு 118 பில்லியன் டாலர்களாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications