விவசாயம் என்பது உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு முதன்மைத் தொழில். காலம் காலமாக விவசாயிகள் தங்கள் கடின உழைப்பால் விவசாயத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். அதோடு இன்றைய காலக்கட்டத்தில் நவீன தொழில்நுட்பங்களும் விவசாயத்திற்கு ஏதுவாக அமைந்துள்ளது. புதிய வேளாண் முறைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் விவசாய முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. இவை விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதோடு அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்துகின்றன.
இப்படி விவசாயம் தொடர்புடைய தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் வெளியூர்களில் மட்டும் பயிரிடப்படும் பயிர்களையும் நம்மூரில் விளைவித்து வருகின்றனர். அப்படித்தான் தனது தாய்க்கு புதுமையான சிந்தனையை வழங்கி அவருடைய மகன் லட்சங்களில் வருமானம் பார்க்கச் செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் போகர் தாலுகாவில் உள்ள போசி கிராமத்தை சேர்ந்த பெண்மணிதான் சுமன்பாய் என்ற விவசாயி. இவருடைய மகன் நந்தகிஷோரின் உதவியால் உலகின் மிக விலை உயர்ந்த மியாசாகி மாம்பழங்களை சுமன்பாய் விளைவித்து வருகிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நந்த கிஷோர் தனது தாய்க்கு மியாசாகி மாம்பழம் நாற்றுகளை பரிசாக வழங்கியுள்ளார். இந்த மாம்பழங்கள் உலக அளவில் மிகவும் விலை உயர்ந்த ஒன்றாகும்.
சரியாக 2020-ஆம் ஆண்டு இருக்கும். அப்போது நந்தகிஷோர் UPSC தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருந்தார். சிவில் சர்வீஸ் படிப்புகளில் கவனம் செலுத்த நந்தகிஷோர் புனே சென்றார். ஆனால் அப்போது ஊரடங்கு போடப்பட்ட காரணத்தால் பயிற்சி மையம் மூடப்பட்டது. இதனால் தனது சொந்த ஊருக்கே திரும்பி ஆன்லைன் மூலமாக படிப்பை தொடர்ந்தார்.
ஒருநாள் இணையத்தில் ஏதோ பார்த்துக் கொண்டிருக்கும்போது.. உலக அளவில் மிகவும் விலை உயர்ந்த பழங்களில் ஒன்றாக அறியப்படும் மியாசாகி மாம்பழங்களை பார்த்தார். அதை பார்த்தவுடன் அவருடைய ஆர்வம்.. மியாசாகி மாம்பழங்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தூண்டியது. மேற்குவங்கம், ஜார்கண்ட் ,மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் உள்ள விவசாயிகள் இந்த தனித்துவமான வகையை ஏற்கனவே பயிரிட தொடங்கியுள்ளனர் என்பதையும் கண்டறிந்தார். இதனால் இதே வணிகத்தை தனது தாய்க்கு அறிமுகப்படுத்த முடிவு செய்தார். முதலில் ஒரு சிறிய தோட்டத்தில் இதை பரிசோதனை செய்து பார்க்கலாம் என்று முடிவெடுத்தார்.
தனக்கு இருந்த நம்பிக்கையை மட்டுமே துணையாகக் கொண்டு நந்தகிஷோர் பிலிப்பைன்ஸிலிருந்து 10 மியாசாகி மரக்கன்றுகளை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தார். ஒவ்வொரு செடியும் 6500 கொடுத்து வாங்கினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரக்கன்றுகளை நட்டும் வைத்தார். அவை படிப்படியாக பழங்களை தர தொடங்கிவிட்டன. இதுவரை 11 முதல் 12 மாம்பழங்களை விளைவித்துள்ளன.
அறுவடைக்கு நியாயமான சந்தை மதிப்பு இருக்க வேண்டும் என்பதற்காக நந்தகிஷோர் பர்பானியை சேர்ந்த முன்னோடி விவசாயியின் வழிகாட்டுதல்களை பெற்றார். ஏனெனில் இவர் வெற்றிகரமாக மியசாகி மாம்பழங்களை பயிரிட்டு லாபம் பார்த்து வருகிறார். அவருடைய நுண்ணறிவை பின்பற்றி ஒரு மாம்பழத்திற்கு 10,000 விலை நிர்ணயிக்க முடிவு செய்தார்.
தற்போது பல விவசாயிகள் அந்த பகுதியில் மியசாகி மாம்பழங்களை வளர்த்து வருகின்றனர். இந்த முன்னேற்றங்களை அங்கீகரிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் விவசாயத் துறையின் மேற்பார்வையின் கீழ் மாவட்ட விவசாய மற்றும் தானிய விழா சமீபத்தில் நடத்தப்பட்டது.
மியாசாகி மாம்பழத்தின் சிறப்பு என்ன?: உலகின் மிகவும் பிரீமியம் மாம்பழ வகைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் இதில் தரம், ஊட்டச்சத்து போன்றவை அதிகம் இருப்பதால் உலகளாவிய சந்தையில் தேவை அதிகமாக உள்ளது. இதன் ஒரு பழம் பத்தாயிரம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த மாம்பழங்கள் பீட்டா கரோட்டின் மற்றும் போலிக் அமிலத்தால் நிரம்பியுள்ளன. அவை செல்கள் சேதம் அடையாமல் பாதுகாக்கும். அதோடு சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன. இதனால் கண் பார்வை மேம்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதோடு செரிமானத்திற்கும் உதவுகிறது.
சுமன்பாய்-இன் வெற்றி, புதுமையான சிந்தனையும், கடின உழைப்பும் விவசாயத் துறையில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications