அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை.. அடுத்த 1 வருடத்தில் ரொம்ப மோசமாகலாம்.. இந்தியா என்னவாகுமோ?

ரஷ்யா - உக்ரைன் பிரச்சனையானது பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உலக பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடையலாம் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பல முக்கிய பொருளாதாரங்களில் அடுத்த 1 ஆண்டில் மிக மோசமான சரிவினைக் காணலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிண்றனர்.

சர்வதேச அளவில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் பொருளாதார வளர்ச்சி விகிதமானது மெதுவான வளர்ச்சியினை எட்டலாம் என நோமுரா ஹோல்டிங்ஸ் இன்க் கணித்துள்ளது.

ரெசசனை எட்டலாம்

ரெசசனை எட்டலாம்

இது குறித்த தரகு நிறுவனத்தின் கனிப்பில் இங்கிலாந்து, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் கனடா உள்ளிட்ட பல நாடுகளும் ரெசசனை எட்டலாம்.

மத்திய வங்கிகள் பொருளாதாரத்தினை மீட்டெடுக்க நடவடிக்கை எடுத்து வந்தாலும், பணவீக்கத்தினை கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக பணப்புழக்கம் என்பது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்

வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம்

இதன் காரணமாக பொருளாதார வளர்ச்சி விகிதமானது சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் வட்டி விகிதமானது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டும் வரும் நிலையில், இதனால் வளர்ச்சியினை கைவிடலாம். இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் பலத்த தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

அமெரிக்காவின் நிலை என்ன?

அமெரிக்காவின் நிலை என்ன?

இந்த ரெசசன் விகிதமானது ஒவ்வொரு நாட்டினை பொறுத்தும் மாறுபடலாம். அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதி காலாண்டில் தொடங்கி, ஐந்து காலாண்டுகளில் ஆழமற்ற ஆனால் நீண்டகாலத்திற்கு நீடிக்கலாம் என நோமுரா கணித்துள்ளது.

ஐரோப்பாவின் நிலை என்ன?

ஐரோப்பாவின் நிலை என்ன?

ஐரோப்பாவில், ரஷ்யாவில் முழுவதும் எரிவாயுவை நிறுத்தினால் விளைவுகள் மிக மோசமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானியா நிதி சேவை நிறுவனமான நோமுரா, 2023ல் அமெரிக்கா மற்றும் யூரோ பகுதி பொருளாதாரங்கள் 1% சரிவினைக் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடுத்தர பொருளாதாரங்களின் நிலை

நடுத்தர பொருளாதாரங்களின் நிலை

ஆஸ்திரேலியா, கனடா மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நடுத்தர அளவிலான பொருளாதாரங்களுக்கு, வட்டி விகிதம் உயர்ந்தால், முன்னறிவிப்பினை விட ஆழமான மந்த நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 2.2% வீழ்ச்சியுடன் உள்ளது. எனினும் ஜப்பானிலும் பொருளாதார மந்த நிலை சற்று லேசானதாக இருக்கலாம்.

சீனாவின் நிலை

சீனாவின் நிலை

இதே சீனாவினை பொறுத்தவரையில் பூஜ்ஜிய கோவிட் பாலிசி கடைபிடிக்கும் வரையில், அங்கு வளர்ச்சியிலும் தாக்கம் இருக்கலாம்.

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து பணவீக்கம் நீடிக்க வாய்ப்புள்ளது. பொருட்கள் விலை அதிகரிப்பினை தாண்டி, வாடகை செலவினங்கள், ஊதிய செலவினங்கள் என பலவும் அதிகரித்துள்ளது.

இந்தியா

இந்தியா

 

உலகின் முன்னணி பொருளாதாரங்களில் பலத்த தாக்கத்தினை எதிர்கொள்ளலாம் என்றாலும், இந்தியா குறித்து எதுவும் எச்சரிக்கை விடுக்கப்படாது சற்றே நிம்மதியளிக்கும் விதமாக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+