இந்தியா - பிரிட்டன் ஒப்பந்தம்: வாகனங்கள் முதல் விஸ்கி வரை எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி நடைமுறைக்கு வர உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 14 முறை தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு இருக்கிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தின் மதிப்பு 2030 ஆம் ஆண்டு 120 பில்லியன் டாலர்களாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவிற்கு பல்வேறு வழிகளிலும் பலனளிக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக துணிமணி, வாகன உதிரி பாகங்கள், ஐடி சேவைகள், மருந்து, நகைகள் மற்றும் ரத்தினங்கள் ,தோல் மற்றும் பொறியியல் சரக்குகள் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவில் வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் எல்லாம் பிரிட்டன் சந்தையில் எந்தவித வரியும் இல்லாமல் நேரடியாக கால் பதிக்க முடியும்.

இந்தியா -  பிரிட்டன் ஒப்பந்தம்: வாகனங்கள் முதல் விஸ்கி வரை எந்தெந்த பொருட்களின் விலை குறையும்?

பிரிட்டனிலிருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் வாகன உதிரி பாகங்களுக்கு 100% வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 10 சதவீதமாக குறையும். இதன் காரணமாக பிரிட்டனிலிருந்து நாம் இறக்குமதி செய்து வாங்கக்கூடிய வாகனங்களின் விலை குறையும். இதனால் இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் ,ஈச்சர் மோட்டார்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் பெற இருக்கின்றன.

டாடா மோட்டார்ஸ், ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தோடு கூட்டு ஒப்பந்தம் செய்து அந்த நிறுவன இந்தியாவில் விற்பனை செய்கிறது. ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் ராயல் என்ஃபீல்ட் வாகனங்களை விற்பனை செய்கிறது. எனவே இந்தியாவில் இந்த வகை வாகனங்களின் விலை குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

ஐடி துறையை பொருத்தவரை இந்தியாவை சேர்ந்த ஐடி நிறுவனங்கள் எளிமையாக பிரிட்டனை சேர்ந்த நிறுவனங்களுக்கு சேவை வழங்க முடியும். இதன் காரணமாக இந்தியாவை சேர்ந்த 60,000 ஐடி துறை ஊழியர்கள் பலன் பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. டிசிஎஸ், டெக் மகேந்திரா, இன்போசிஸ், விப்ரோ உள்ளிட்ட ஐடி நிறுவனங்கள் இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் பலன் பெற இருக்கின்றன.

மருத்துவத்துறையை பொறுத்தவரை இந்தியாவை சேர்ந்த மருந்து நிறுவனங்கள் பிரிட்டனுக்கு மருந்துகளை இறக்குமதி செய்வது எளிமையாக்கப்படும் . டாக்டர் ரெட்டீஸ், சிப்லா , சன் பார்மா உள்ளிட்ட நிறுவனங்கள் இதன் மூலம் பலன் பெற இருக்கின்றன. இந்தியாவில் இருந்து பிரிட்டனில் இறக்குமதி செய்யப்படும் தேயிலை, மசாலா பொருட்கள் மற்றும் ரெடு டூ ஈட் வகையிலான பொருட்களின் விலை பிரிட்டனில் குறையும். இதனால் இந்தியாவை சேர்ந்த உற்பத்தியாளர்கள் அதிக எண்ணிக்கையில் பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்ய முடியும். டாடா கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் , நெஸ்ட்லே இந்தியா, ஹிந்துஸ்தான் ஃபுட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதன் மூலம் பலன் பெற இருக்கின்றன.

தடையற்ற வர்த்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நகை மற்றும் ரத்தினங்களின் மதிப்பு அதிகரிக்கும். இதனால் டைட்டன் கம்பெனி, கல்யாண் ஜுவல்லர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலன் பெற இருக்கின்றன. பிரிட்டனில் இருந்து இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் விஸ்கி மற்றும் ஜின் உள்ளிட்ட மதுபானங்களின் விலை குறையும். அதேபோல பிரிட்டனிலிருந்து நாம் இறக்குமதி செய்யக்கூடிய சாக்லேட் பிஸ்கட், அழகு சாதன பொருட்கள் உள்ளிட்டவற்றின் விலையும் குறையும். பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருத்துவ சாதனங்களின் விலை குறையும்.

FAQs
இந்தியா-பிரிட்டன் FTA ஒப்பந்தம் இந்திய ஐடி மற்றும் மருந்து துறைகளை எவ்வாறு பலப்படுத்தும்?

இந்திய ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் ஆகியவை பிரிட்டன் நிறுவனங்களுக்கு எளிதாக சேவைகளை வழங்க முடியும், இதனால் 60,000 ஐடி ஊழியர்கள் பயனடையும். மருந்து துறையில், டாக்டர் ரெட்டீஸ், சன் பார்மா, சிப்லா போன்ற நிறுவனங்கள் பிரிட்டனுக்கு மருந்துகளை எளிதாக ஏற்றுமதி செய்யலாம். இதனால் இந்தியாவின் ஐடி மற்றும் மருந்து துறைகள் உலக சந்தையில் மேலும் வலுவடையும்.

இந்தியா-பிரிட்டன் FTA ஒப்பந்தத்தால் இந்திய நுகர்வோருக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்?

பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களின் வரி 100%-லிருந்து 10%-ஆக குறையும், இதனால் ஜாகுவார், ராயல் என்ஃபீல்ட் போன்ற வாகனங்களின் விலை குறையும். மேலும், பிரிட்டன் விஸ்கி, ஜின், சாக்லேட், பிஸ்கட், அழகு சாதனப் பொருட்கள், மற்றும் மருத்துவ சாதனங்களின் விலைகளும் குறையும். இதனால் இந்திய நுகர்வோருக்கு உயர்தர பொருட்களை குறைந்த விலையில் வாங்க முடியும்.

இந்தியா-பிரிட்டன் FTA ஒப்பந்தம் இந்திய நிறுவனங்களுக்கு எவ்வாறு பயனளிக்கும்?

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் துணிமணி, வாகன உதிரி பாகங்கள், ஐடி, மருந்து, நகை, தோல், மற்றும் பொறியியல் துறை நிறுவனங்கள் பிரிட்டன் சந்தையில் வரி இல்லாமல் வணிகம் செய்யலாம். டிசிஎஸ், இன்போசிஸ், சிப்லா, டாடா மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள் பயனடையும். மேலும், இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தேயிலை, மசாலா பொருட்கள், மற்றும் உணவுப் பொருட்களின் விலை பிரிட்டனில் குறையும், இதனால் ஏற்றுமதி அதிகரிக்கும்.

இந்தியா-பிரிட்டன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் என்றால் என்ன, இது எப்போது நடைமுறைக்கு வரும்?

இந்தியா மற்றும் பிரிட்டன் இடையே மூன்று ஆண்டுகளாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இறுதி செய்யப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA), இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை வரி இல்லாமல் எளிதாக்குகிறது. இந்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகி நடைமுறைக்கு வர உள்ளது.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+