பெங்களூரில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில்.. இன்று முதல் புதிய குடிநீர் கட்டணங்கள் அமலுக்கு வந்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கட்டணம் உயர்ந்துள்ளது. பெங்களூரில் ஏற்கனவே பால் விலை, எரிபொருள் விலை, மின்சாரம், போக்குவரத்து என அனைத்து அத்தியாவசிய செலவுகளும் அதிகரித்துள்ளது. இதனால் பெங்களூரில் வசிக்கும் மக்கள் அதிக வாழ்க்கைச் செலவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
குடிநீர் கட்டணம்: 11 ஆண்டுகளுக்குப் பின் குடிநீர் கட்டணம் திருத்தப்பட்டுள்ளன. பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் குடிநீர் விலையை அதிகரித்துள்ளது. பெங்களூரு நீர் வழங்கல் துறையின் தலைவர் டாக்டர் ராம் ப்ரசாத் மனோகர் கூறுகையில், "அதிகபட்ச வீட்டு உபயோகத்தின் காரணமாக லிட்டருக்கு ஒரு பைசாவும், தொழில்துறையில் விநியோகிக்கப்படும் தண்ணீர் லிட்டருக்கு ரூ.1.20 உயர்ந்துள்ளது", என்று தெரிவித்தார். இந்தக் கட்டணங்கள் 2025-ஆம் ஆண்டின் மே மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீத குடிநீர் கட்டண உயர்வை திட்டமிட்டுள்ளது.

புதிய குடிநீர் கட்டணங்கள்: 8000 லிட்டர் வரை பயன்படுத்துவதற்கு மாதத்திற்கு 0.15 ரூபாய் அதிகரித்துள்ளது. இப்படி பார்த்தால் மாதத்திற்கு ரூ. 8.50 உயர்ந்துள்ளது. 8001 முதல் 25000 லிட்டர் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 0.40 பைசா அதிகரித்துள்ளது. இது மாதத்திற்கு 14 ரூபாய் அதிகரிப்பைக் குறிக்கிறது. 25,001 முதல் 50,000 லிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு லிட்டருக்கு ரூ. 0.80 அதிகரித்துள்ளது.
தொழில்துறை பயன்பாட்டிற்கான கட்டணங்கள்:
0 முதல் 10,000 லிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ. 0.90 அதிகரித்துள்ளது.
10,001 முதல் 25,000 லிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ. 1.00 அதிகரித்துள்ளது.
25,001 முதல் 50,000 லிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ. 1.30 அதிகரித்துள்ளது.
50,001 முதல் 75,000 லிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ. 1.50 அதிகரித்துள்ளது.
75,001 முதல் 1,00,000 லிட்டர் பயன்படுத்துபவர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ. 1.90 அதிகரித்துள்ளது.
1 லட்சம் லிட்டருக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு 1 லிட்டருக்கு ரூ.1.20 அதிகரித்துள்ளது.
வீட்டு குடிநீர் கட்டணம் மாதத்திற்கு ரூ. 400 முதல் ரூ. 500 வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெங்களூரு பால் மற்றும் தயிர் விலைகள்: ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நந்தினி பிராண்டு பால் மற்றும் தயிர் லிட்டருக்கு 4 ரூபாய் உயர்ந்துள்ளது. மாநில அரசு இந்த உயர்வை அறிவித்துள்ளது.
பெங்களூர் பேருந்து மற்றும் மெட்ரோ கட்டணங்கள்: பெங்களூரு பெரு நகர போக்குவரத்து கழகம் மற்றும் நம்ம மெட்ரோ ஆகிய இரண்டிலும் பொது போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. ஜனவரி 7 முதல் பேருந்து கட்டணம் 15 சதவீதம் வரை அதிகரித்தது. தினசரி பாஸ் விலை தற்போது ரூ.80-ஆக உயர்ந்துள்ளது. இது முன்பு ரூ.70-ஆக இருந்தது.
எரிபொருள் விலை: பெங்களூரில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.84 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.88.95 ஆகவும் அதிகரித்துள்ளது. மாநில அரசு எரிபொருள் மீதான விற்பனை வரியை அதிகரித்ததை தொடர்ந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications