உலகில் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றாக ஸோஹோ கார்ப்பரேஷன் (Zoho Corporation) விளங்கி வருகிறது. இதன் நிறுவனராக ஸ்ரீதர் வேம்பு உள்ளார். அமெரிக்காவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலையில் பணியாற்றி வந்த நிலையில், அந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஒரு துணிச்சலான இலக்குடன் இந்திய கிராமத்திற்கு திரும்பினார். எந்தவொரு நிதியுதவியும் இல்லாமல், கிராமத்தில் இருந்தே ஒரு உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்குவதுதான் அவரின் கனவாக இருந்தது.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இவர், தனது ஆரம்பக் கால வாழ்க்கையை சிலிக்கான் பள்ளத்தாக்கில் தொழில்நுட்ப துறையில் தொடங்கினார். வெளிநாட்டில் ஸ்ரீதர் வேம்பு வெற்றிக் கண்ட போதிலும், ஒரு நாட்டின் உண்மையான ஆற்றல் பெரு நகரங்கள் அல்லது உயர்தர நிறுவனங்களில் மட்டுமல்ல, சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களிலும் உள்ளது என்பதை அவர் உறுதியாக நம்பினார்.

இதன் விளைவாக, 2000-களின் முற்பகுதியில் அவர் இந்தியா திரும்ப முடிவெடித்தார். தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் குடியேறிய அவர், அங்கிருந்துதான் உலகளாவிய SaaS (Software as a Service) நிறுவனத்தை தொடங்கினார். அத்துடன், அவர் அரட்டை (Arattai) என்ற மெசேஜிங் செயலியின் உருவாக்கத்திலும் முக்கியப் பங்கு வகித்தார்.
வெஞ்சர் கேபிடல் நிதியை நம்பி இயங்கும் பல ஸ்டார்ட்அப்களை போல் அல்லாமல், ஸோஹோ நிறுவனம் எந்தவிதமான வெளி முதலீடும் இல்லாமல் உருவாக்கப்பட்டது. இந்த நிறுவனம் முழுவதுமாக பூட்ஸ்ட்ராப்ட் செய்யப்பட்டது. அதாவது, சொந்த வருவாய் மற்றும் ஆதாரங்களை பயன்படுத்தியே வளர்ந்தது.
இதனால், குறுகிய கால லாபத்தை விட, நீண்ட கால இலக்குகளில் கவனம் செலுத்த ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது குழுவால் முடிந்தது. ஆரம்பத்தில் அட்வென்ட்நெட் இன்க். (AdventNet Inc.) என்ற பெயரில் செயல்பட்ட நிறுவனம், பின்னர் ஸோஹோ கார்பரேஷனாக பெயர் மாற்றம் பெற்றது.
ஸ்ரீதர் வேம்புவின் மிகவும் தனித்துவமான முயற்சிகளில் ஒன்று, முறையாக கல்வி கற்ற பொறியாளர்களை மட்டுமே வேலைக்கு எடுப்பதற்கு பதிலாக, உள்ளூர் கிராமப்புற இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்தார். அவர் கிராமப்புறங்களில் பயிற்சி திட்டங்கள் மற்றும் பள்ளிகளை உருவாக்கி, இளைஞர்களுக்கு மென்பொருள் மேம்பாட்டு திறன்களை கற்றுக் கொடுத்தார். அவர்களில் பலர் பின்னர் ஸோஹோவில் பணியமர்த்தப்பட்டனர்.
புதுமைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் நகரங்களில் அல்லது விலை உயர்ந்த அலுவலகங்களில் இருந்துதான் வர வேண்டும் என்ற கருத்தை இந்த கிராமப்புற அணுகுமுறை சவால் செய்தது. இன்றும், ஸோஹோவின் பெரும்பகுதி ஊழியர்கள் நகர்ப்புறம் அல்லாத பகுதிகளில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர்.
இன்று, ஸோஹோ நிறுவனம் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில், 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படும் 50-க்கும் மேற்பட்ட கிளவுட் சார்ந்த மென்பொருள் தயாரிப்புகளை வழங்கி வருகிறது. மின்னஞ்சல் மற்றும் அக்கவுண்டிங் முதல் சி.ஆர்.எம். மற்றும் மனிதவள மேலாண்மை (HR Management) வரை அனைத்து வியாபார தேவைகளையும் அதன் கருவிகள் பூர்த்தி செய்கின்றன.
உலகளாவிய வெற்றியை அடைந்த போதிலும், தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் உலகில் இது ஒரு அரிதான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர் நிதியை நிராகரித்து, கிராமப்புற வளர்ச்சியை மையமாக கொண்டு, சரியான பார்வை, மதிப்புகள் மற்றும் பொறுமையுடன் உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை எங்கிருந்தும் உருவாக்க முடியும் என்பதை ஸ்ரீதர் வேம்பு நிரூபித்துக் காட்டியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications