உலகின் முன்னணி முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான லைட்ஸ்பீட் முதலீட்டில் இயங்கும் FrontRow என்னும் எட்-டெக் ஸ்டார்ட்அப் நிறுவனம் சுமார் 75 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
புதன்கிழமை இந்தியாவில் மிகப்பெரிய மற்றும் உலகின் முன்னணி Ed-Tech ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் பைஜூஸ் லாபகரமான நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகச் சுமார் 2500 ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்த நிலையில் FrontRow நிறுவனத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்றுப் பாதிப்பு குறைந்து இந்தியாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாகத் திறக்கப்பட்ட நாளில் இருந்து ஆன்லைன் கல்வி சேவை நிறுவனங்கள் அதிகப்படியான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது.
FrontRow நிறுவனம்
மிகில் ராஜ், சுபதித் சர்மா மற்றும் இஷான் ப்ரீத் சிங் ஆகியோரால் உருவாக்கப்பட்ட FrontRow போதுமான முதலீடுகள் இல்லாத நிலையில் மே மாதம் சுமார் 30 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது. இதன் மூலம் 150 ஊழியர்கள் தங்களது பணியை இழந்தனர், இதைத் தொடர்ந்து 2வது முறையாகத் தற்போது பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
40 ஊழியர்கள் மட்டுமே
இந்த முறை நிறுவனத்தில் இருக்கும் சிறிய எண்ணிக்கையிலான ஊழியர்களில் 75 சதவீதம் பேர் அதாவது 130 பேரை பணிநீக்கம் செய்துள்ளது. இதன் வாயிலாக வெறும் 40 ஊழியர்கள் உடன் FrontRow நிறுவனம் இயங்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.
14 மில்லியன் டாலர் முதலீடு
FrontRow நிறுவனம் ஒரு துறையில் பிரபலமானவர்களை வைத்து ஆன்லைன் கல்வி சேவையை அளிப்பது தான் அடிப்படை ஐடியாவாக இருந்தது. இது பலருக்கும் பிடித்துப்போகக் கடந்த செப்டம்பர் மாதம் 14 மில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டை சீரியல் ஏ சுற்றில் பெற்ற நிலையில் அடுத்ததாக 30 மில்லியன் டாலரை 200 மில்லியன் டாலர் நிறுவன மதிப்பீட்டில் திரட்ட முடிவு செய்தது.
பைஜூஸ்
ஆனால் இதேபோன்ற ஐடியா-வை பைஜூஸ் சமீபத்தில் சோதனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் தான் இந்திய எட்-டெக் பிரிவில் முதலீட்டு அளவுகளும், வர்த்தகமும் தொடர்ந்து சரிந்து வந்த காரணத்தால் பல நிறுவனங்கள் ஊழியர்களை அதிகளவில் பணிநீக்கம் செய்ய வேண்டிய மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது.
பணிநீக்கம்
2022ல் இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் அறிவிக்கப்பட்ட பணிநீக்கத்தில் 30 சதவீதம் ஆன்லைன் கல்வி சேவை நிறுவனத்தைச் சார்ந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்றுப் பாதிப்பு இத்துறை நிறுவனங்களுக்குப் பெரிய வருவாயை அளித்த நிலையில் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications