இந்தியாவில் சமீப காலமாக மசாலாப் பொருட்களில் கலப்படம் இருப்பது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. நுகர்வோர் தரமான மசாலாப் பொருட்களைப் பெற வேண்டும் என்பதற்காக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) கடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தரம் குறைந்த மசாலாக்களை உற்பத்தி செய்த சுமார் 111 நிறுவனங்களின் உற்பத்தி உரிமத்தை ரத்து செய்துள்ளது.
நடப்பு ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், பிரபல இந்திய மசாலா பிராண்டுகளான MDH பிரைவேட் லிமிடெட் மற்றும் எவரெஸ்ட் ஃபுட் புராடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் சில மசாலாக்களில் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட "எத்திலின் ஆக்சைடு" என்ற பூச்சிக்கொல்லி கலப்படம் இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளில், இந்த மசாலா பிராண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பல்வேறு நகரங்களில் உள்ள மசாலாக்களை சேகரித்து பாதுகாப்பு பரிசோதனை செய்தது.
சுமார் 111 மசாலா பொருள் உற்பத்தியாளர்களின் உரிமம் ரத்து: சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஒரு மாதத்தில் 111 மசாலா உற்பத்தியாளர்களின் உற்பத்தி உரிமங்களை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ரத்து செய்துள்ளது. மேலும் அந்நிறுவனங்களின் உற்பத்தியை உடனே நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் அதிக அளவிலான சோதனைகள் நடந்து வருகின்றன, மேலும் நாடு முழுவதும் 4,000 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதால், மேலும் பல உரிமங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மாதிரிகளில் Everest, MDH, Catch மற்றும் Badshah போன்ற பிரபல பிராண்டுகளின் மசாலாக்களும் அடங்கும்.
என்ன பிரச்சனை?: Mint அறிக்கையின்படி, FSSAI சுமார் 2,200 மாதிரிகளை சோதனை செய்துள்ளது. அவற்றில், 111 மசாலா உற்பத்தியாளர்களின் மசாலாக்கள் அடிப்படை தரத்தை பூர்த்தி செய்யவில்லை. இத்தகைய மசாலா உற்பத்தியாளர்களின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
FSSAI-இன் கீழ் உள்ள சோதனை மையங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதாகவும், எனவே உரிமங்கள் ரத்து செய்யப்பட வேண்டிய நிறுவனங்களின் பட்டியலைக் கொண்டு வருவதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
FSSAI அதிகாரிகளின் கூற்றுப்படி, ரத்து செய்யப்பட்ட உரிமங்களில் பெரும்பாலானவை கேரளா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிறு மசாலா தயாரிப்பாளர்களுக்கு சொந்தமானது. குஜராத், மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த நிறுவனங்களும் ஆய்வுக்கு உட்பட்டுள்ளன.
இந்த உற்பத்தி உரிமம் ரத்து செய்யப்பட்ட 111 நிறுவனங்களில் பெரும்பாலானவை சிறிய அளவிலானவை மற்றும் அதிகாரப்பூர்வ இணையதளங்கள், மொபைல் நம்பர் மற்றும் மெயில் ஐடி இல்லாதவை என்று கூறப்படுகிறது.
மே மாதத்தில், FSSAI MDH மற்றும் எவரெஸ்ட் மாதிரிகளை சேகரித்து சோதனையை நடத்தியது. அந்த சோதனையில் எத்திலீன் ஆக்சைடு (ETO) கண்டுபிடிக்கப்படவில்லை. FSSAI நிறுவனம் எவரெஸ்ட் மற்றும் MDH மசாலாக்களின் மாதிரிகளை சோதனை செய்தது. மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள எவரெஸ்ட் நிறுவனத்தின் 9 மாதிரிகளும், டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் உள்ள MDH நிறுவனத்தின் 25 மாதிரிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
NABL அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலும் எத்திலீன் ஆக்சைடுக்கான மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. FSSAI இதுவரை சுமார் 28 ஆய்வக அறிக்கைகளைப் பெற்றுள்ளது. அவற்றில் எந்த மாதிரியிலும் எத்திலின் ஆக்சைடு இல்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் உணவு பாதுகாப்பு தொடர்பான சமீபத்திய தகவல்களுக்கு FSSAI இணையதளத்தைப் பார்வையிடவும். உணவு பாதுகாப்பில் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். மசாலா வாங்கும்போது அவற்றின் தரம், உற்பத்தியாளர் மற்றும் முத்திரை ஆகியவற்றை கவனித்துக் கொள்ளுங்கள். நம்பகமான கடைகளில் இருந்தே மசாலாக்களை வாங்குவது சிறந்தது.
மேலும், உங்கள் சமையலறையில் ஆரோக்கியமான மற்றும் தரமான மசாலாக்களைப் பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உணவின் சுவையை மட்டுமல்லாமல், உங்கள் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications