திருப்பதி தேவஸ்தானத்தில் (TTD) பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னபிரசாதம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்களின் தரத்தை உறுதிப்படுத்த இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) உதவியை நாட திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தரமான பிரசாதங்களை பக்தர்களுக்கு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உலகின் பணக்கார கடவுளான திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மேலும் அங்கு வழங்கப்படும் லட்டுக்கு அவ்வளவு டிமாண்ட். இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு மற்றும் இதர பிரசாதங்களில் சுத்தம் மற்றும் தரத்தை உறுதிப்படுத்த FSSAI-யின் உதவியை நாட இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை நடந்த மீட்டிங்கில், TTD-இன் செயல் அதிகாரி (EO) ஜே சியாமளா ராவ், திருப்பதியில் FSSAI மூலம் ஒரு தனி பரிசோதனை கூடம் அமைப்பதற்கு ஏற்பாடு செய்யுமாறு JEO-க்களை கேட்டுக் கொண்டார். இந்த பரிசோதனை கூடம் பிரசாதம், அன்னபிரசாதம் செய்யும்போது பயன்படுத்தும் பொருட்களின் தரத்தையும், சுத்தத்தையும் பரிசோதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
FSSAI மூலப்பொருட்களின் தரத்தை சரிபார்க்க உதவுவது மட்டுமல்லாமல், குறைந்த விலையில் சிறந்த பொருட்களை வாங்குவதற்கும் TTD-க்கு உதவும் என்றும் சியாமளா ராவ் கூறியுள்ளார்.
மூலப்பொருட்களை வாங்குவதற்கான டெண்டர் நடவடிக்கைகளில் FSSAI வழங்கும் விதிமுறைகளை TTD கடைபிடிக்கும். மேலும், கொள்முதல் செயல்பாட்டிற்கான ஒரு நிலையான SOP உருவாக்கப்படும். இது திறமையான கொள்முதல் செயல்முறைக்கு உதவும்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் 2024-2025 ஆம் நிதியாண்டில் பிரசாத விற்பனை மூலம் ரூ.600 கோடியும், தரிசன டிக்கெட் விற்பனை மூலம் ரூ.338 கோடியும் திரட்டும் என்று எதிர்பார்க்கிறது.
ஆந்திர பிரதேசத்தின் FSSAI துணை உணவு கட்டுப்பாட்டு அதிகாரி N. பூர்ண சந்திர ராவ், உணவு மற்றும் குடிநீர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து சில பரிந்துரைகளையும் வழங்கினார். இதன் மூலம் TTD உணவு தயாரிப்பு மற்றும் பரிமாற்றம் ஆகியவற்றில் சுகாதார தரத்தை மேம்படுத்த முடியும்.
திருப்பதி திருமலை தேவஸ்தானம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI) இணைந்து பணிபுரிவதன் மூலம் பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னபிரசாதத்தின் தரத்தை உறுதி செய்ய முயற்சிப்பது வரவேற்கத்தக்கதாக உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications