சர்வதேச கிரிப்டோ வர்த்தக சந்தையில் முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்த FTX நிறுவனத்தின் திவால் மற்றும் மோசடிகள் குறித்து அமெரிக்க அரசு அதிகாரிகள் தொடர்ந்து சாம் பேங்க்மேன் ப்ரைட் மற்றும் FTX நிறுவன ஊழியர்கள் மத்தியில் விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விசாரணையில் முக்கிய கட்டத்தை அடைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியான நிலையில் தற்போது FTX நிறுவனத்தின் முன்னணி டெக் இன்ஜினியரும், இந்தியருமான நிஷாத் சிங் கமாடிட்டி மோசடி செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார்.
யார் இந்த நிஷாத் சிங்..? FTX தளத்தில் நடந்த மோசடியில் இவருடைய பங்கு என்ன..?
FTX கிரிப்டோ வர்த்தக தளம்
FTX என்றும் மாபெரும் கிரிப்டோ வர்த்தக தளத்தை நிஷாத் சிங், சாம் பேங்க்மேன், கேரி வாங்க் ஆகியோர் இணைந்து உருவாக்கினர். இதில் நிஷாத் சிங் தான FTX டிரேடிங் லிமிடெட் நிறுவனத்தின் கோ லீட் இன்ஜினியர் ஆவார்.
FTX நிதி மோசடி வழக்கு
அமெரிக்க அரசின் இந்த FTX நிதி மோசடி வழக்கில் அதன் நிறுவனர்களான சாம் பேங்க்மேன் ஃப்ரைட், கேரி வாங், Alameda Research நிறுவனத்தின் முன்னாள் தலைவர் Caroline Ellison ஆகியோர் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டு உள்ளனர்.
இந்த நிலையில் நிஷாத் சிங் சுமார் 6 நிதியியல் குற்றங்களை ஒப்புக்கொண்டு உள்ளார்.
நிஷாத் சிங்
FTX நிறுவனத்தின் பங்கு முதலீட்டாளர்களை பலவருட திட்டத்தில் மோசடி செய்துள்ளார் என்பது தான் நிஷாத் சிங் மீது அமெரிக்க அரசு வைத்திருக்கும் குற்றச்சாட்டு. இந்த மோசடியை தான் செய்ததை ஒப்புக்கொண்டு உள்ளார் நிஷாத் சிங். டிசம்பர் மாதம் அமெரிக்க அரசு சாம் பேங்க்மேன் மீது பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்து கைது செய்தது.
SEC அமைப்பு
தற்போது நிஷாத் சிங் மீது அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC, நியூயார்க் தெற்கு மாவட்டத்தின் அட்டர்னி அலுவலகம், அமெரிக்காவின் கமாட்டிட் பியூச்சர்ஸ் டிரேடிங் கமிஷன் ஆகிய அமைப்புகளும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது. இதில் கமாடிட்டி மோசடி செய்ததை மட்டுமே ஒப்புக்கொண்டு உள்ளார். மற்ற குற்றச்சாட்டுகளுக்கான விசாரணை தொடரும் என தெரிகிறது.
6 மில்லியன் டாலர்
FTX தளம் திவாலாகும் மோசமான நிலையில் இருக்கும் போது, நிஷாத் சிங் FTX நிறுவன கணக்கில் இருந்து சுமார் 6 மில்லியன் டாலர் அளவிலான தொகையை தனது சொந்த செலவிற்காக எடுத்துள்ளார். இந்த பணத்தை வைத்து பல மில்லியன் டாலர் மதிப்பிலான வீடு, பல மில்லியன் டாலர் மதிப்பிலான வீட்டை வாங்கியும், மில்லியன் டாலர் கணக்கில் நன்கொடை அளித்தும் உள்ளார்.
ஒப்புதல்
மேலும் நிஷாத் சிங் 6 சதி வேலைகளை செய்ததாக ஒப்புக்கொண்டார், இதில் பணத்தை அனுப்பிய குற்றம், பண சலவை குற்றம், அமெரிக்க நிதியியல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றங்களை ஒப்புக்கொண்டு உள்ளார்.
சாம் பேங்க்மேன்-ஃபிரைட்
FTX நிறுவனத்தின் நிறுவனரான சாம் பேங்க்மேன்-ஃபிரைட் 2017ல் உருவாக்கிய Alameda Research என்னும் நிறுவனத்திற்கு FTX கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் தளத்தில் இருந்து சாம் பேங்க்மேன்-ஃபிரைட் ரகசியமாக வாடிக்கையாளர்களின் சுமார் 10 பில்லியன் டாலர் தொகையை ரகசியமாகத் தனது தனிப்பட்ட கணக்கிற்கு மாற்றியது வெளிச்சத்திற்கு வந்தது.
Alameda Research நிறுவன கணக்கு
2020 ஆம் ஆண்டு மத்தியில் FTX நிறுவனத்தின் தலைமை இன்ஜினியரும் இந்தியருமான நிஷாத் சிங் அதன் வர்த்தகத் தளத்தின் சாப்ட்வேர் கோடு-ல் சில மாற்றங்களைச் செய்துள்ளார். சாம் பேங்க்மேன்-க்கு சொந்தமான Alameda Research நிறுவனத்திற்குச் சிறப்புச் சலுகை அளிக்கும் வகையில் சாப்ட்வேர் கோடு மாற்றப்பட்டு உள்ளது.
கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச்
சாம் பேங்க்மேன்-ஃபிரைட் உருவாக்கிய FTX நிறுவனம் உலகின் 2வது பெரிய கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்ச் தளமாக உயர்ந்தது, ஆனால் ஒரேயொரு ரிப்போர்ட் வாயிலாக அடுத்தடுத்து மாடிக்கொண்டு ஒட்டுமொத்த நிறுவனமும் சில நாட்களில் திவாலானதாக அறிவிக்கும் அளவிற்கு மோசமான நிலைக்குச் சென்றது.
பஹாமாஸ்
இந்த நிலையில் அமெரிக்காவை விட்டு தப்பி சென்ற சாம் பேங்க்மேன்-ஃபிரைட் அமெரிக்க பாதுகாப்பு துறையால் பஹாமாஸ் நாட்டில் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு வந்து தற்போது மோசடிகள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications